தளபதி 63 ரகசியத்தை வெளியிட்டாரா யோகி பாபு.! புகைப்படத்தால் வந்த புதிய சர்ச்சை.!

0
854
yogibabu-vijay
- Advertisement -

இளைய தளபதி விஜய் ‘சர்கார்’ படத்தை தொடர்ந்து தற்போது தனது 63வது படத்தில் நடித்து வருகிறார். தெறி, மெர்சல் படத்தை தொடர்ந்து விஜய்யுடன் மூன்றாவது முறையாக இணைகிறார் இயக்குனர் அட்லீ. ஏ ஜி எஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தில் நயன்தாரா கதாநாயகியாக நடிக்கிறார்.

-விளம்பரம்-

இந்த படத்தில் நடிகர் விஜய் கால்பந்து பயிற்சியாளராக நடிக்கவிருக்கிறார் என்று கூறப்படுகிறது. மேலும், இந்த படத்தில் நடிகர் விஜய் ‘மைக்கேல்’ என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்றும் கூறப்படுகிறது. மேலும் இந்த படத்தில் காமெடி நடிகர்களான விவேக் மற்றும் யோகி பாபுவும் நடிக்கின்றனர்.

- Advertisement -

மேலும், பரியேறும் பெருமாள் நடிகர் கதிரும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்நிலையில் நடிகர் யோகி பாபு மற்றும் கதிர் கால்பந்து சீருடையில் இருக்கும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டிருந்தார். இதனால் தளபதி 63 யில் கதிர் மற்றும் யோகி பாபுவின் கெட்டப் கசிந்துவிட்டது என்று செய்திகள் பரவியது.

ஆனால், உண்மையில் அந்த புகைப்படம் தளபதி 63 படத்தின் போது எடுக்கபட்ட புகைப்படம் இல்லை என்றும் அது கதிர் நடித்து வரும் ஜடா என்ற படத்தின் படப்பிடிப்பின் போது எடுக்கபட்ட புகைப்படம் என்றும் தெரியவந்தது. இதன் இதனால் விஜய் ரசிகர்கள் சற்று ஏமாற்றமடைந்துள்ளனர்.

-விளம்பரம்-

Advertisement