மக்களை ஏமாற்ற விரும்பவில்லை.! நிகழ்ச்சியை நிறுத்திய ரகசியத்தை கூறிய டாப் 10 சுரேஷ்.!

0
3839
top-10-suresh
- Advertisement -

சன் டிவி தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகி மக்களிடையே அதிக வரவேற்பைப் பெற்ற ஒரு நிகழ்ச்சி தான் “டாப் 10 மூவிஸ்” இந்த நிகழ்ச்சியை சுரேஷ்குமார் என்பவர் தொகுத்து வழங்கினார். மேலும், இந்த டாப் 10 மூவிஸ் நிகழ்ச்சி திடீரென்று நிறுத்தப்பட்டதை தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் பல கேள்விகள் எழுந்த வண்ணம் உள்ளன. தற்போதெல்லாம், சினிமாத்துறையில் வெளியாகும் படங்கள் குறித்த தகவல்களை டிவி மூலம் தெரிந்து கொள்வதை விட ஆன்லைன் மூலம் வெகு விரைவாக மக்களை சென்றடைகிறது. இப்போதெல்லாம் படத்திற்கு சென்று கதையை தெரிந்து கொள்ளும் கூட்டத்தை விட ஆன்லைன் மூலம் கதையை தெரிந்து கொண்டு படத்திற்கு செல்கின்ற கூட்டம் தான் அதிகமாக உள்ளது. இதனாலயே நிறைய விமர்சகர்கள் முளைத்துவிட்டன.இப்போ இணையங்களின் மூலம் வெளியாகும் விமர்சனங்கள் தான் வைரலாக பரவி வருகின்றன. இணையங்களின் மூலம் விமர்சங்களை கேட்பதற்கு முன்னால் அதாவது 90 காலங்களில் மக்கள் அனைவரும் ஞாயிற்று கிழமை வந்தாலே போதும் எல்லாத்தையும் தூக்கி போட்டு டிவி முன்னாடி உட்கார்ந்து விடுவாங்க.மேலும், இந்த வாரம் எந்த படம் முதலிடம்? எந்த படத்திற்கு நல்ல மதிப்பு? என்று தெரிந்துகொள்ளும் ஆர்வம் இருந்தது. சொல்லனும்னா ‘ஆல் டைம் ஃபேவரட் ஷோ’ன்னு கூட சொல்லலாம் டாப் 10 மூவிஸ் நிகழ்ச்சி.

-விளம்பரம்-

- Advertisement -

இந்த நிகழ்ச்சியில் படத்தின் விமர்சனத்தை தொகுத்து வழங்கிய பிறகு தான் இணையங்களில் பரவும். டாப் 10 மூவிஸ் நிகழ்ச்சிக்கே என ஒரு தனி ரசிகர்கள் பட்டாளம் இருந்தது. இந்த நிகழ்ச்சியில் 20 ஆண்டுகளாக ஒரே பெயரில், ஒரே டைமில், ஒரே தொகுப்பாளராக வைத்து வெற்றிகரமாக ஓடிய நிகழ்ச்சியாகும். திடீரென்று ஜூலை 7ஆம் தேதி இந்த நிகழ்ச்சியை நிறுத்திவிட்டார்கள். மேலும், இந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளர் சுரேஷ் குமார் அவர்கள் ஆன்லைன் மூலம் படங்களை விமர்சனம் செய்ய போகிறார் என தெரிந்ததும் ஏன் நிகழ்ச்சியை நிறுத்திட்டீங்க? ஆன்லைன்ல ஏன் பண்றீங்க? என நெட்டிசன்கள் கேள்விக்கு மேல் கேள்வி கேட்டுக் கொண்டிருந்தனர். இதுகுறித்து, சுரேஷ்குமார் அவர்கள் கூறியது, தொழில்நுட்பங்கள் மாற்றங்களுக்கு ஏற்றவாறு நம்மளும் மாறிக் கொண்டுதான் ஆக வேண்டும். இதுதான் காலத்தின் கட்டாயம் என்றும் கூறினார். இப்பல்லாம் டிவி முன்னாடி உட்கார்ந்து பாக்குறவங்கள விட மொபைல் போனை பாக்குறவங்க தான் அதிகமா ஆயிடுச்சு. அதுமட்டுமில்லாமல், முன்னெல்லாம் டிவில படங்களை கொடுத்து விமர்சனம் செய்த பிறகுதான் இணையதளங்களுக்கு வரும். இப்போதெல்லாம் ஆன்லைனில் தான் படங்களை குறித்து விமர்சனம் அதிகமாக நடக்கிறது. அதனாலே நிறைய விமர்சகர்கள் படங்களை குறித்து விமர்சனங்கள் செய்ய ஆரம்பித்தனர்.

இதையும் பாருங்க : ஷெரின் முகத்தில் கரியை பூசிய சாண்டி.! அதிரடி டாஸ்க் ஆரம்பம்.! லீக்கான வீடியோ.!

தரமில்லாத விமர்சனங்களும், படத்தை பற்றி தவறான கருத்துகள் கொண்ட விமர்சனங்களும் ஆரம்பித்துவிட்டன. இதுகுறித்து என்கிட்ட படங்களை குறித்து தரமான விமர்சனங்கள் வரவில்லை என்றும், நீங்க ஆன்லைன்ல விமர்சனங்களை பண்ண வேண்டும் என்றும் கேட்டார்கள். அதுமட்டுமில்லாமல், சினிமாத்துறையில் இருந்தும் டிவிக்கு ஆதரவு கொஞ்சம் குறைந்துவிட்டது. முதல்ல படத்தின் காட்சிகளை டாப் 10 மூவிஸ் நிகழ்ச்சிக்கு கொடுத்துட்டு தான் இணையங்களில் கொடுப்பாங்க. மேலும், படம் குறித்த புரமோஷன்களையும், விழாக்களையும் இந்த நிகழ்ச்சியில் தான் பண்ணுவாங்க. இப்ப அவங்களே சமூக வலைத்தளங்களில் நேரடியாக செய்ய ஆரம்பிச்சுட்டாங்க. அதுமட்டுமில்லாமல். அவர்கள் கொடுத்த படத்தை ஏன் இத்தனாவது இடத்தில் வைக்கிறீங்க என சின்ன சின்ன சண்டையும் வர ஆரம்பிச்சுடுச்சு. இதனால நாங்க ஏன் உங்ககிட்ட கிளிப்பை கொடுக்கணும் என்று நிறுத்தி விட்டார்கள். இந்த பிரச்சனை சில வருடங்களாகவே இருந்து வந்தது. அதுமட்டுமில்லாமல், சில ஆண்டுகளாகவே ஒரு சில படங்களின் கிளிப் இல்லாமல் கருத்துக்களை மட்டும் கூறுவோம் , ஒரு சில படங்களுக்கு காட்சிகளை போட்டும் ஒருதலைபட்சமாக நிகழ்ச்சி நடந்து வந்தது. இது எங்களுக்கு கஷ்டமா இருந்தது.அதுமட்டுமில்லாமல்,சினிமா தயாரிப்பாளர்கள் சங்கத்தில் இருந்தும் எங்களுக்கு ஆதரவு இல்லை. மேலும், அவர்களே ஒவ்வொரு படங்கள் தயாரிக்கும் போதே சாட்டிலைட் உரிமை என அவங்களுக்கு பிடிச்ச சேனலுக்கு கொடுத்திருக்காங்க.மேலும் பல நண்பர்கள், சினிமா பிரபலங்களும் படங்கள் குறித்த விமர்சனங்களை ஆன்லைன்ல மூலம் செய்யுங்கள் என கேட்டுக் கொண்டார்கள். இதனால் தான் நாங்கள் ஆன்லைன் மூலமாக தரமான படங்களை குறித்து விமர்சனங்கள் கொடுக்கலாம்னு முடிவு செய்துவிட்டோம்.

-விளம்பரம்-
Related image

இது குறித்து நிறைய ஆலோசனைகள் செய்து, இந்த நிகழ்ச்சியை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளோம். ஆனால் இப்ப வருகிற விமர்சனகள் எதுவும் தரமானதாக, நியாயமானதாகவும் இல்லை. நீங்கள் ஏன் பண்ண கூடாது என்று கேட்டாங்க? அதற்காகத்தான் நான் ‘Unbia-scope’ வெப்சைட் ஒன்று ஆரம்பித்து அதுல நானே படங்களை குறித்து விமர்சனமும் பண்ணிட்டு வரேன். அதுமட்டுமில்லாமல், தனியா யூடியூப்களிலும் இந்த விமர்சனம் சம்பந்தப்பட்ட வீடியோக்களை போட்டுக் கொண்டு வருகிறேன்.மேலும், நான் ஆன்லைன்ல பண்ண தொடங்கியபோது வந்த முதல் படம் அஜித் அவர்களின் நேர்கொண்ட பார்வை படம். அந்த படம் குறித்த விமர்சனங்கள் பண்ண கொஞ்ச நேரத்திலேயே எனக்கு நிறைய சப்போர்ட் கிடைத்தது .இந்த டாப் 10 மூவிஸ் நிகழ்ச்சி 20 வருடங்களில் ஒரே பெயரையும், ஒரே தொகுப்பாளரயையும், ஒரே டைமிங்கில் வைத்து இவ்வளவு தூரம் வெற்றி கொடுத்த மக்களுக்கு தான் இந்த தருணங்களில் நன்றி கூறுகிறேன் என்று கூறினார். மேலும், எந்த ஒரு துறையிலும் போட்டி இருக்கும் . ஆனால், அந்தத் துறையில் நாம் நேர்மையாகவும், நியாயமாகவும், நாணயத்துடன் நடந்தால் நம்ம அந்த துறையில் நீடித்து இருக்கலாம் என்றும் கூறினார். இனிமேல் ஒவ்வொரு வாரமும் வெளியாகும் படங்களுக்கு தரமானதாகவும் , உண்மையான கருத்துக்கள் உடனும் விமர்சனங்களை சிறப்பான சம்பவத்துடன் இந்த நிகழ்ச்சி இருக்கும் என்று கூறினார்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் உங்களுக்கு பிடித்தமான போட்டியாளர்களை காப்பாற்ற நீங்கள் ஓட்டிங் சிஸ்டம் மூலம் வாக்களிலாம் அல்லது மிஸ்டு கால் மூலம் வாக்களிக்கலாம். நீங்கள் வாக்களிக்க ‘ BIGG BOSS TAMIL VOTE‘ இந்த லிங்கை கிளிக் செய்யவும்.

Advertisement