பினாலே முடிஞ்ச 2 மாசத்துல இறந்துட்டாங்க – கேன்சரால் இறந்த தனது தாய் குறித்து சூப்பர் சிங்கர் பிரபலம் கண்ணீர்.

0
477
- Advertisement -

கேன்சரால் இறந்த தன் தாய் குறித்து சூப்பர் சிங்கர் பிரபலம் புண்ணியா அளித்து இருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று தான் சூப்பர் சிங்கர். இந்த சூப்பர் சிங்கர் 7 நிகழ்ச்சியில் பல போட்டியாளர்கள் கலந்து கொண்டு தங்களுடைய திறமையை வெளிப்படுத்தினார்கள். இந்த சூப்பர் சிங்கர் 7 நிகழ்ச்சி வேற லெவல் என்பது அனைவரும் அறிந்ததே. மேலும், லண்டனில் இருந்து வந்த ஒரு தமிழ் பாடகி புண்ணியா நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கு பெற்றார்.

-விளம்பரம்-

இவர் லண்டனில் நடைபெறும் அந்தி மலை நிகழ்வின் மூலம் புகழ்பெற்ற பாடகராக அறிமுகமானார். பின் இந்தியாவில் தன்னுடைய இசைப்பயணத்தை தொடங்கினார். இவருக்கு சிறு வயதிலிருந்தே பாடலின் மீது அதிக ஆர்வம் கொண்டவர். அதனால் எப்படியாவது தன்னுடைய இசைத் திறமையை உலகிற்கு காட்ட வேண்டும் என்று தான் விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் சீசன் 7ல் போட்டியாளராக கலந்து கொண்டார். இந்நிகழ்ச்சியில் தன்னுடைய திறமையால் பல பாடல்களைப் பாடி உள்ளார். அதுமட்டும் இல்லாமல் இவர் லண்டனில் மருத்துவப் படிப்பு படித்திருந்தார்.

- Advertisement -

பாடகி புண்ணியா குறித்த தகவல்:

ஆகவே இசைக்காகவே இவர் தன்னுடைய படிப்பை விட்டுட்டு இந்தியா வந்தார். மேலும், இந்த சூப்பர் சிங்கர் 7 நிகழ்ச்சியில் இறுதிச் சுற்றுக்கு செல்லும் முதல் ஐந்து போட்டியாளர்களில் ஒருவராக பாடகி புண்ணியா தேர்வு செய்யப்பட்டார். இதில் மூக்குத்தி முருகன் முதல் பரிசை தட்டிச் சென்றார். அவருக்கு 50 லட்சம் ரூபாய் மதிப்பீடு வீடு பரிசாக வழங்கப்பட்டது. அதுமட்டுமில்லாமல் நிகழ்ச்சி ஆரம்பத்திலேயே கூறியது போல் வெற்றியாளராக வரும் ஒரு நபருக்கு அனிருத் இசையில் பாடும் வாய்ப்பும் வழங்கப்பட்டது. இரண்டாவது பரிசு விக்ரமுக்கு கிடைத்தது. அவருக்கு 25 இலட்சம் மதிப்புள்ள வைர நகை பரிசாக அளித்தார்கள்.

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் புண்ணியா:

மூன்றாம் பரிசு சாம் விஷால் மற்றும் புண்ணியா இருவருக்கும் சேர்த்து வழங்கப்பட்டது. புண்ணியாவுக்கு முதல் பரிசு கொடுக்காததற்கு பல கருத்துக்களும் விமர்சனங்களும் சமூக வலைத்தளங்களில் எழுந்து வந்தன. இந்நிலையில் சமீபத்தில் புண்ணியா அவர்கள் பேட்டி ஒன்று அளித்திருந்தார். அதில் அவர் தன்னுடைய தாய் குறித்து கூறியிருந்தது, லண்டனில் நாங்கள் வீட்டில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை பார்ப்போம். எங்க அம்மா சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் தீவிர ரசிகை என்றே சொல்லலாம். அப்போது நான் மருத்துவம் பார்த்துக் கொண்டிருந்தாலும் இடையில் பாடிக்கொண்டு இருப்பேன்.

-விளம்பரம்-

புண்ணியா பேட்டி:

சில நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டிருக்கிறேன். அப்போதுதான் ஒருவர் என்னை சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள சொன்னார். என்னுடைய அம்மாவிற்கும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் நான் கலந்து கொள்வது கனவாக இருந்தது. அவருடைய ஆசைக்காக தான் நான் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டேன். ஆடிஷனுக்காக சென்னை வந்து தேர்வும் ஆகி அதற்கு பிறகு ஒரு எட்டு மாசம் சென்னையில் தான் இருந்தேன். அந்த சமயத்தில் தான் என்னுடைய அம்மாவிற்கு உடல்நிலை சரியில்லை. அவருக்கு கேன்சர். எனக்கு இங்கு இருப்பதற்கு மனதே இல்லை. இருந்தாலும் என்னுடைய அம்மாவின் ஆசைக்காக தான் நான் இருந்தேன்.

தாய் இறப்பு குறித்து சொன்னது:

பினாலே முடிந்த இரண்டு நாட்களில் என்னுடைய அம்மாவுடைய உடல்நிலை ரொம்ப மோசமாக மாறியது. உடனே நான் லண்டனுக்கு சென்று விட்டேன். அவருடன் இருக்க வேண்டும் என்று நினைத்தேன். இரண்டு மாதத்திலேயே என்னுடைய அம்மா இறந்து விட்டார். அப்போது எனக்கு நிறைய வாய்ப்புகள் வந்து இருந்தது. இருந்தாலும், என்னுடைய அம்மாவுடன் இருக்க வேண்டும் என்று நான் வாய்ப்புகளை ஏற்கவில்லை. அதிலிருந்து நான் மீண்டுவதற்கு கொஞ்ச நாட்கள் ஆனது. அதற்கு பிறகு தான் என்னுடைய அம்மாவின் ஆசிர்வாதத்துடன் பாடலாம் என்று என்னுடைய கேரியரை ஆரம்பித்தேன். பிறகு சென்னை வந்து செட்டில் ஆகிவிட்டேன். எனக்கு இப்போது வாய்ப்புகளும் வந்து கொண்டு இருக்கிறது என்று கூறியிருக்கிறார்.

Advertisement