ரஜினிய விட விஜய் உச்சம் தொட்டுவிட்டார் – லியோ படத்தின் வியாபாரம் குறித்து ராமராஜன் பளிச்

0
2251
- Advertisement -

சாமானியன் படம் குறித்து ராமராஜன் அளித்து இருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் 90 கால கட்டத்தில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழந்தவர் ராமராஜன். ரஜினி, கமல் என்று ஸ்டைலான நடிகர்கள் இருந்த போது இவர் கால், அரை ட்ரவுஸரில் நடித்து படத்தை 100 நாட்களுக்கு மேல் ஓடவைத்தவர். இந்த பெருமையெல்லாம் ராமராஜனை மட்டுமே சேரும். இவர் 1986 ஆம் ஆண்டு நம்ம ஊரு நல்ல ஊரு என்ற படத்தின் மூலம் தான் கதாநாயகனாக சினிமா உலகிற்கு அறிமுகம் ஆகி இருந்தார்.

-விளம்பரம்-

அதனை தொடர்ந்து இவர் பல படங்களில் நடித்து இருக்கிறார். மேலும், சினிமாவில் நடிக்க வந்த குறுகிய காலத்திற்குள்ளாகவே முன்னணி நடிகர்களையெல்லாம் பின்னுக்குத் தள்ளி அத்தனை பேரையும் தன் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்தவர் ராமராஜன். அதிலும் இவர், கங்கை அமரன் இயக்கத்தில் நடித்த ‘கரகாட்டகாரன்’ திரைப்படம் ஒரு வருடத்திற்கு மேல் ஓடி சாதனை படைத்தது. இன்னும் கரகாட்டக்காரன் படம் ரசிகர்கள் மத்தியில் கொண்டாடப்பட்டு தான் வருகிறது. பின் ராமராஜன் அரசியலில் குதித்தார்.

- Advertisement -

ராமராஜன் நடித்த படம்:

இவர் இதுவரை ஹீரோவாக மட்டுமே படங்களில் நடித்திருந்தார். இவர் இடையில் 2012 ஆம் ஆண்டு மேடை என்ற படத்தில் ராமராஜன் நடித்திருந்தார். தற்போது மீண்டும் ராமராஜன் சினிமாவில் ரீ-என்ட்ரி கொடுக்க இருக்கிறார். 11 ஆண்டுகளுக்குப் பிறகு ராமராஜன் அவர்கள் தமிழ் சினிமாவில் ரீ-என்ட்ரி கொடுக்கிறார். இவர் சாமானியன் என்ற படத்தில் நடிக்கிறார். இந்த படத்தை ரமேஷ் என்பவர் இயக்குகிறார். இந்த படத்தில் ராதாரவி, எம்.எஸ் பாஸ்கர் உட்பட பல நடிகர்கள் நடிக்கின்றனர். இந்த படம் ஐந்து மொழிகளில் தயாராக இருப்பதாக அறிவித்திருக்கின்றனர். இந்த படத்தின் ரிலீசுக்காக ரசிகர்கள் பலரும் ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டு இருக்கின்றனர்.

ராமராஜன் பேட்டி:

இந்த நிலையில் சமீபத்தில் ராமராஜன் அவர்கள் பேட்டி ஒன்று அளித்திருக்கிறார். அதில் அவர்,
சாமானியன் படத்தினுடைய படப்பிடிப்பு முடிந்து விட்டது. படம் நன்றாக வந்திருக்கிறது. இந்த படத்தில் பணியாற்றிய இயக்குனர், தயாரிப்பாளர், டெக்னீசியன்கள் போன்ற அனைவருக்கும் நன்றி சொல்லிக் கொள்கிறேன். இந்த படத்தினுடைய தீர்ப்பு மக்கள் கையில் தான் இருக்கிறது. படம் வெளியாவது குறித்து முறைப்படி தயாரிப்பாளர் அறிவிப்பார். வித்தியாசமான கதைகளை கொண்டிருக்கிறது. இந்த படம் மக்களுக்கு பிடிக்கும் என்று நம்புகிறேன்.

-விளம்பரம்-

படம் குறித்து சொன்னது:

பெரும் விபத்தில் இருந்து மீண்டு கொரோனா காலத்தை எல்லாம் தாண்டி வந்து இந்த படத்தில் நடித்திருக்கிறேன். இது நடக்குமா என்று நான் கனவிலும் நினைக்கவில்லை. 50 படம் வரை தான் நான் கதாநாயகனாக நடித்திருக்கிறேன். ஆனால், இந்த படம் எனக்கு ஒரு பெரும் வருஷம் வரப்பிரசாதமாக அமையும். விஜய் மில்டன், வெங்கட் பிரபு போன்ற பல பேர் என்னிடம் கதை சொல்கிறார்கள். பல வாய்ப்புகள் வந்திருக்கிறது. ஆனால், எனக்கு மைண்ட் செட் ஆகவில்லை. அதனால் தான் நடிக்கவில்லை. பல ஆண்டுகளுக்கு பிறகு இந்த படத்தில் நடித்திருக்கிறேன். அதற்கு ஏற்ற கதையாக சாமானியன் படம் இருக்கிறது. 23 வருடங்களுக்கு பிறகு அண்ணன் இசைஞானி இளையராஜா என் படத்திற்கு இசையமைத்து இருக்கிறார்.

ரஜினி-விஜய் குறித்து சொன்னது:

அன்னக்கிளி படத்தின் போது இருந்த அதே வேகம் தான் இளையராஜாவிடம் இன்னும் இருக்கிறது. என்னை மக்கள் இன்றும் கொண்டாடுகிறார்கள் என்றால் அதற்கு காரணம் இளையராஜா அண்ணனுடைய பாட்டு தான். அதேபோல் ரஜினி இந்த வயதிலும் நடிப்பது பெரிய விஷயம். விஜய் வசூல் ரீதியாக ரஜினியை தாண்டி உயரத்துக்கு சென்று விட்டார் என்று தான் சொல்லணும். லியோ படம் அந்த அளவிற்கு வியாபாரம் ஆகி இருக்கிறது. எல்லாத்தையும் தாண்டி மக்கள் தான் முடிவு செய்வார்கள். எனக்கு மக்கள் நாயகன் பட்டத்தை கொடுத்தார்கள். ஆனால், என்னுடைய பாதை தனி. அடுத்து நான் என்ன படம் பண்ணலாம் என்று யோசனைகள் மட்டும் தான் இருக்கிறது. எனக்கு எல்லா நடிகர்களும் பிடிக்கும். எல்லாருடைய படங்களும் நன்றாக ஓடணும். தயாரிப்பாளர்கள் நன்றாக சம்பாதிக்கணும். சினிமா துறை நல்லா இருக்கணும். சினிமா தான் என்னை வாழவைத்து சோறு போட்டது என்று சந்தோஷமாக பேசி இருக்கிறார்.

Advertisement