விஜய் தொலைக்காட்சியில் பல ஆண்டுகளாக பிரபலமாக ஒட்டிக்கொண்டிருக்கும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை , சீனியர், ஜூனியர் என்று மாறி மாறி ஒளிபரப்பி வருகிறது விஜய் டிவி. அந்த வகையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இந்த நிகழ்ச்சியின் 8 வது சீசன் படு கோலாகலமாக துவங்கியது.பொதுவாக சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் இருந்து யாராவது திறமையான பாடகர்கள் வெளியேறினால் சர்ச்சைகள் ஏற்படுவது வழக்கமான ஒரு விஷயம் தான். அதேபோல இதுவரை நடந்து முடிந்த பல்வேறு சூப்பர் சிங்கர் சீசன்களின் டைட்டில்களை தகுதியானவர்களுக்கு கொடுக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டும் இருந்து தான் வருகிறது.
இப்படி ஒரு நிலையில் கடந்த வாரங்களுக்கு முன் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஸ்ரீதர் சேனா நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டது பலருக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.ஸ்ரீதர் சேனா இறுதிச் சுற்றுவரை வருவார் என்று எதிர்பார்த்த ரசிகர்களுக்கு இது மிகப் பெரிய ஏமாற்றமாக தான் அமைந்திருந்தது.
இதையும் பாருங்க : சரோஜா படத்தில் ‘சூடான கோழி’ பாடல்ல வந்த நடிகையா இது – புள்ளக் குட்டின்னு எப்படி ஆகிட்டாங்க பாருங்க.
இதை தொடர்ந்து கடந்த இரண்டு வாரங்களுக்கு முன் அய்யனார் வெளியேற்றப்பட்டு இருந்தார். இதை தொடர்ந்து சென்ற வாரம் முத்து சிற்பி நேரடியாக பைனலுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில் மானஸி கடந்த வாரம் வெளியேறினார். இதன் மூலம் ஆதித்யா மற்றும் அனு ஆகிய இருவரும் செமி பைனலுக்கு முன்னேறினர்.
பைனலுக்கு யார் செல்வார் என்று மிகவும் பரபரப்பாக நடைபெற்ற இந்த வார போட்டியில் இந்த வாரம் ஆதித்யா வெளியேறினார். இதனால் முத்து சிற்பி, அணு, அபிலாஷ் மற்றும் பரத் என நான்கு பேர் பிரமாண்ட இறுதி போட்டிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். மேலும், அடுத்த வாரம் நடைபெற விருக்கும், சூப்பர் சிங்கர் 8 வைல்ட் கார்ட் சுற்றில் இருந்து, இதுவரை வெளியேறிய போட்டியாளர்களில் ஒருவரை, ஐந்தாவது Finalist-டாக, நடுவர்கள் தேர்ந்தெடுப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.