அட, பாட்டு நடிப்புனு பாத்தா, இவங்க மிமிக்ரி கூட செய்றாங்களே. வைரலாகும் வீடியோ.

0
5367
soundarya
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் கோடிக்கணக்கான ரசிகர்களை கொண்டவர் தளபதி விஜய். பிகில் படத்தை தொடர்ந்து தற்போது தளபதி விஜய் நடித்து உள்ள படம் ‘மாஸ்டர்’. இந்த படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அவர்கள் இயக்கி இருக்கிறார். இந்த படத்தில் விஜய்க்கு வில்லனாக விஜய் சேதுபதி நடித்து உள்ளார். இவர்களுடன் இந்த படத்தில் மாளவிகா மோகன், சாந்தனு பாக்யராஜ், ஆண்டனி வர்கீஸ், ஆண்ட்ரியா, கெளரி கிஷண், ப்ரிகிதா, ஸ்ரீமன், சஞ்சீவ், ஸ்ரீநாத், ப்ரேம், ப்ரிகிதா, ஸ்ரீமன், சஞ்சீவ், மேத்யூ வர்கீஸ், சுனில் ரெட்டி,வி.ஜே.ரம்யா உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர்.

-விளம்பரம்-
Soundarya Bala Nandakumar Wiki, Biography, Age, Movies, Images ...

இந்த படத்தினை எக்ஸ்பி கிரியேட்டர்ஸ் நிறுவனத்தின் மூலம் சேவியர் பிரிட்டோ தயாரித்து இருக்கிறது. சமீபத்தில் தான் தளபதி விஜயின் மாஸ்டர் படத்தின் இசை வெளியீட்டு ஹோட்டல் மாஸ்டர் அரண்மனையில் கோலாகலமாக நடை பெற்றது. மாஸ்டர் படத்தின் எல்லாம் பாடல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இதையும் பாருங்க : ஊரடங்கில் அடங்காத மீரா மிதுன். அரை குறை ஆடையில் ஆண் நபருடன் போட்ட ஆட்டம்.

- Advertisement -

மக்கள் இடையே உயிர் பயத்தை ஏற்படுத்தி இருக்கும் கொரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளதால் தியேட்டர்கள் எல்லாம் மூடப்பட்டு உள்ளது. ரசிகர்கள் அனைவரும் மாஸ்டர் படத்தின் டிரைலர் மற்றும் ரிலீஸ் தேதி குறித்து ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றார்கள்.

மேலும், விஜயின் மாஸ்டர் படத்தில் பாடகியம், நடிகையுமான சௌந்தர்யா பேராசிரியராக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து உள்ளார். இந்நிலையில் பாடகி,நடிகை ஆன சௌந்தர்யா அவர்கள் தற்போது மிமிக்கிரி கலைஞர் ஆகவும் அவதாரம் எடுத்து உள்ளார். கலக்க போவது யாரு நவீன் அவர்கள் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சௌந்தர்யா மிமிக்கிரி செய்த வீடியோவை பதிவிட்டு உள்ளார்.

-விளம்பரம்-

அந்த வீடியோவை பதிவிட்டு நவீன் கூறியிருப்பது, ‘அம்மா தாயே.. நடனம்,பாட்டு,நடிப்பு எல்லாம் போயி இப்ப மிமிக்கிரியா. ஐயோ இது என்ன மிமிகிரிக்கு வந்த சோதனை. இதை எல்லாம் நான் தான் சொல்லி கொடுத்தேன் என்று சொல்லிக்கிட்டு திரியாதே என்று கலாய்த்த படி சொல்லி இருந்தார். தற்போது இந்த வீடியோ சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது.

இதையும் பாருங்க : கொரோனாவையும் பொருட்படுத்தாத விஜய் சேதுபதியின் செயலால் குவியும் பாராட்டு.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வெற்றிகரகமாக முடிவடைந்த சூப்பர் சிங்கர் சீனியர் நிகழ்ச்சியில் போட்டியாளராக சௌந்தர்யா கலந்து கொண்டவர். பின் அதே சேனலில் ஒளிபரப்பான பகல் நிலவு சீரியலில் கதாநாயகியாக நடித்தார். அதன் பின் ஷார்ட் பிலிம் படங்களிலும் நடித்து உள்ளார். இவர் பல நிகழ்ச்சியில் பங்கேற்று உள்ளார். தற்போது வெள்ளித்திரையிலும் கால் தடம் பதித்து கலக்கி கொண்டு வருகிறார்.

Advertisement