‘இசைக்கருவிகளை உடைச்சிட்டாங்க – கடுமையாக சாடிய பாடகர் பென்னி தயாள். என்ன ஆனது.

0
499
- Advertisement -

தமிழ் சினிமாவில் ரஜினிகாந்த், விஜய், சிம்பு போன்ற முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் “மதுரைக்கு போகாதடி” பல்லே லக்கா” போன்ற சூப்பர் ஹிட் பாடல்களை கொடுத்தவர் பாடகர் பென்னி தயாள். இவர் அவ்வப்போது விஜய் தொலைக்காட்சியில் சில நிகழ்ச்சிகளின் நடுவராகவும், தனியார் தொலைக்காட்சிகளில் நடுவராகவும் இருந்து வருகிறார். இவர் கடைசியாக “தி லெஜெண்ட்” திரைப்படத்தின் ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் “வாடி வாசல்” என்ற பாடலை படியிட்டுந்தார். இந்த நிலையில் அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போட்டுள்ள பதிவு தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

-விளம்பரம்-

அவர் போட்டிருந்த பதிவில் இது இந்தியாவில் உள்ள அனைத்து விமான நிறுவனங்களுக்கும் தெரிவிக்கும் பதிவு என்று கடுமையாக பேசியுள்ளார். அவர் கூறியிருந்த பதிவில் இசைக்கலைஞர்கள் இசை நிகழ்ச்சிகளுக்கு செல்லும் போது அவர்களது இசைக்கருவிகளை விமான நிலையங்கள் சரியாக பார்த்துக்கொள்வதில்லை. இந்தியாவில் உள்ள ஏர்.இந்தியா, இண்டிகோ, ஸ்பைஸ்ஜெட் போன்ற நிறுவனங்கள் இசைக் கருவிகளை எடுத்து செல்லும் போது மிகவும் அஜாககரதையுடன் செயல்படுகிறது.

- Advertisement -

நான் பலமுறை என் பயணத்தில் இசைக்கருவிகள் உடைந்த வாரு மற்ற இசைக்கலைஞர்கள் எடுத்து செல்லும் காட்சிகளை பார்த்து வருகிறேன். அது உங்களுடைய அஜாக்கிரதையால் தான் நடக்கிறது. ஆனால் அதனை நாங்கள் எப்போதும் ஒப்புக்கொள்ள மாட்டோம். எனக்கு தனிப்பட்ட முறையில் “விஸ்தாரா” விமான நிறுவனம் என்னுடைய ஏழு நாட்கள் விமான பயண இடைவெளியில் இசைக்கருவிகளை இரண்டு முறை உடைத்துள்ளது.

அப்படி அந்த நிறுவனம் உடைத்த பொருட்கள் எனக்கு திரும்பி வேண்டும். அதே போன்று இண்டிகோ விமான நிறுவனமும் கலைஞர்களுடைய இசைக்கருவிகளை பற்றி சிறிதும் யோசிக்காமல் அக்கறையின்றி செயல் படுகிறது. இந்த தவறு நடக்காமல் இருக்க விமான நிறுவங்களில் சரியான பொருட்களை கையாளும் குழுவை நல்ல முறையில் தேர்வு செய்து பணியில் அமர்த்த வேண்டும். மேலும் இசைக் கலைஞர்கள் நிகழ்ச்சிகளுக்கு செல்லும் முன்னரே பொருட்கள் உடைந்து விடுகின்றன.

-விளம்பரம்-

எங்களுடைய இசைக்கருவிகள் எங்களுக்கு மிகவும் முக்கியமானவை. அவை தான் எங்களுக்கு இன்று வரையிலும் உணவளிக்கிறது. எனவே இசைக்கருவிகளை அக்கறையோடு பார்த்து கொள்ளுமாறு விமான நிறுவனங்களை தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் என்று கூறினார். மேலும் இந்தியாவில் உள்ள ஏர்.இந்தியா, இண்டிகோ, ஸ்பைஸ்ஜெட் போன்ற விமான நிறுவனங்கள் இசைக் கருவிகளை மிகவும் மோசமாக பார்த்துக் கொள்கின்றனர். அவற்றிக்கு ஏதாவது ஆனால் அது உங்களுடைய பொறுப்புதான் என்று விமான நிறுவனங்களை கடுமையாக சாடியுள்ளார் பாடகர் பென்னி தயாள்.

Advertisement