‘என்னோட உழைப்பில் வாங்கிய முதல் கார்’ சூப்பர் சிங்கர் ஜூனியர் பிரபலம் பதிவிட்ட புகைப்படம் – வாழ்த்துக்களை குவிக்கும் ரசிகர்கள்

0
1856
Super
- Advertisement -

பாடகி நித்யஸ்ரீ புது கார் வாங்கி இருக்கும் புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளுக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளம் உள்ளது. அதிலும், விஜய் டிவியில் எத்தனையோ நிகழ்ச்சிகள் வந்தாலும் ஆணிவேராக மக்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்திருக்கும் நிகழ்ச்சிகளில் ஒன்று சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சி பல ஆண்டு காலமாக மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்று வருகிறது.

-விளம்பரம்-

இது ஜூனியர், சீனியர் என்று இரு பிரிவில் நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் ஏகப்பட்ட பேருக்கு வெள்ளித்திரையில் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. மேலும், இந்த நிகழ்ச்சி தான் வெள்ளித்திரைக்கு பாடகர்களை அறிமுகப்படுத்தும் பாலம் என்று சொல்லலாம். அதுமட்டுமில்லாமல் இந்த நிகழ்ச்சிக்கு தமிழகத்தில் மட்டும் இல்லாமல் உலகம் முழுவதும் ரசிகர்கள் இருக்கிறர்கள்.

- Advertisement -

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி:

மேலும், சூப்பர் சிங்கர் சீனியர்ஸ் நிகழ்ச்சியை விட மழைலை குரல்கள் ஒலிக்கும் சூப்பர் சிங்கர் ஜூனியர்ஸ் நிகழ்ச்சிக்கு தான் ரசிகர்கள் மத்தியில் ஏகப்பட்ட வரவேற்பு பெற்று இருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் மா கா பா ஆனந்த் மற்றும் பிரியங்கா தேஷ்பாண்டே தொகுத்து வழங்கி இருந்தார்கள். கடந்த ஆண்டு சூப்பர் சிங்கர் ஜூனியர்ஸ் 8 நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டது. தற்போது சூப்பர் சிங்கர் சீனியர் 9 நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது.

சூப்பர் சிங்கர் ஜூனியர்ஸ் நிகழ்ச்சி:

இந்த நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை நெருங்கிக் கொண்டிருக்கின்றது. அது மட்டும் இல்லாமல் சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்ச்சி தொடங்க இருப்பதால் அதற்கான புரோமக்களும் சில வாரங்களாக வெளியாகி இருக்கிறது. மேலும், இந்த நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்திருப்பவர் தான் பாடகி நித்யஸ்ரீ. இவர் சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார். அதற்கு பிறகு தொடர்ந்து இவர் படங்களில் பாடிக்கொண்டு வருகிறார்.

-விளம்பரம்-

பாடகி நித்யஸ்ரீ:

தற்போது நித்யஸ்ரீக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது. இவர் பாடகி மட்டுமில்லாமல் மாடலிங் துறையிலும் அதிக கவனம் செலுத்தி வருகிறார். மேலும், இவர் நிறைய ஆல்பங்களில் பாடியிருக்கிறார். சூப்பர் சிங்கர் பிரபலங்களின் சிறு வயது புகைப்படம் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தற்போது இவர் சில படங்களில் கமிட்டாகி பாடி வருகிறார். இந்நிலையில் பாடகி நித்யஸ்ரீ புது கார் வாங்கி இருக்கும் புகைப்படம் வைரலாகி வருகிறது. அதாவது, சமீப காலமாகவே விஜய் டிவி பிரபலங்கள் புது கார் வாங்கி அதனுடன் எடுத்த புகைப்படத்தை சோசியல் மீடியாவில் பகிர்ந்து வருகிறார்கள்.

பாடகி நித்யஸ்ரீ வாங்கிய புது கார்:

அந்த வரிசையில் தற்போது பாடகி நித்யஸ்ரீ இணைந்து இருக்கிறார். தற்போது இவர் தன்னுடைய சொந்த உழைப்பில் முதல் கார் ஒன்று வாங்கி இருக்கிறார். அந்த காரை சென்னை பாடியில் உள்ள திருவாலிதாயம் கோயிலுக்கு எடுத்துச் சென்று பூஜை போட்டு இருக்கிறார். பின் அதனுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து, புதிய கார் வாங்கி விட்டேன் என்று கூறி இருக்கிறார். இதை பார்த்த இவருடைய தோழிகளான பாடகி மானசி, அபர்ணா நாராயணன், வர்ஷா உட்பட பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து எப்போ ரைட்டுக்கு கூட்டிட்டு போவ? ட்ரீட் கொடு என்று கேட்டிருக்கிறார்கள். அது மட்டுமில்லாமல் ரசிகர்களும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

Advertisement