சூப்பர் சிங்கரின் ஒரு எபிசோடை தொகுத்து வழங்க ம க பா மற்றும் பிரியங்கா வாங்கும் சம்பளம் எவ்ளோ தெரியுமா ?

0
1240
makapa
- Advertisement -

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் ஒரு எபிசோடுக்கு மாகாபா, பிரியங்கா வாங்கும் சம்பளம் குறித்த தகவல் தற்போது சோஷியல் மீடியாவில் படு வைரலாகி வருகிறது. பொதுவாகவே விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளுக்கு என்றே ஒரு தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது. அதிலும் சீரியல்களுக்கு நிகராக வித்தியாசமான கான்செப்டில் நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி வருகிறார்கள். அந்த வகையில் விஜய் டிவியில் எத்தனையோ நிகழ்ச்சிகள் வந்தாலும் ஆணிவேராக மக்கள் மத்தியில் என்றென்றும் நீங்கா இடம் பிடித்திருக்கும் நிகழ்ச்சிகளில் ஒன்று சூப்பர் சிங்கர்.

-விளம்பரம்-

இந்த நிகழ்ச்சி பல ஆண்டு காலமாக மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்று வருகிறது. மேலும், ஆண்டுகள் பல கடந்தாலும் கொஞ்சம் கூட மக்கள் மத்தியில் வரவேற்பு குறையாமல் இந்த நிகழ்ச்சி சென்று கொண்டிருக்கின்றது. இதனால் வருடம் வருடம் வித்தியாசமான விஷயங்களை இந்த நிகழ்ச்சியில் புகுத்தி வருகிறார்கள். அதோடு இந்த நிகழ்ச்சி தான் வெள்ளித்திரைக்கு பாடகர்களை அறிமுகப்படுத்தும் பாலம் என்று சொல்லலாம்.

- Advertisement -

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி:

இது ஜூனியர், சீனியர் என்று இரு பிரிவில் நிகழ்ச்சிகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் ஏகப்பட்ட பேருக்கு வெள்ளித்திரையில் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. மேலும், இதில் சீனியர்ஸ் நிகழ்ச்சியை விட மழைலை குரல்கள் ஒலிக்கும் சூப்பர் சிங்கர் ஜூனியர்ஸ் நிகழ்ச்சிக்கு தான் ரசிகர்கள் மத்தியில் ஏகப்பட்ட வரவேற்ப்பு இருந்து வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு சூப்பர் சிங்கர் ஜூனியர்ஸ் 8 நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டது.

சூப்பர் சிங்கர் ஜூனியர்ஸ் நிகழ்ச்சி:

இந்த நிகழ்ச்சியில் பல குழந்தைகள் பங்கேற்றிருந்தனர். இந்த நிகழ்ச்சியை மா கா பா ஆனந்த் மற்றும் பிரியங்கா தேஷ்பாண்டே தொகுத்து வழங்கி இருந்தார்கள். இந்த நிகழ்ச்சி தொடக்கத்தில் இருந்தே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. மேலும், இந்த நிகழ்ச்சியின் இறுதி போட்டியில் அபீனா, ட்ரினிடா, நேஹா, கிரிஷாங், ரிஹானா என்று 5 பேர் இறுதி போட்டிக்கு தகுதி பெற்று இருந்தனர். மேலும், சில தினங்களுக்கு முன்பு தான் பிரம்மாண்டமாக இந்த சூப்பர் சிங்கர் ஜூனியர் சீசன் 8 நிகழ்ச்சியில் இறுதிச் சுற்று நடைபெற்றது.

-விளம்பரம்-

வெற்றி பெற்ற போட்டியாளர்கள்:

இந்த சீசனில் முதல் பரிசை கிரிஷாங் தட்டி சென்றார். அவருக்கு 60,000,00 மதிப்புள்ள வீடு பரிசாக வழங்கப்பட்டது. இவரை தொடர்ந்து இரண்டாம் இடத்தை ரிஹானாவும், மூன்றாம் இடத்தை நேஹாவும் பெற்று இருந்தார்கள். இந்த நிலையில் மாகாபா ஆனந்த் மற்றும் பிரியங்கா இந்த நிகழ்ச்சிக்கு வாங்கிய சம்பளம் குறித்து தகவல் தற்போது சோசியல் மீடியாவில் பரவலாகி வருகிறது. இந்த நிகழ்ச்சி இந்த அளவிற்கு ஹிட் ஆவதற்கு முக்கிய காரணங்களில் ஒன்று மாகாபா மற்றும் பிரியங்கா.

மாகாபா மற்றும் பிரியங்கா வாங்கிய சம்பளம்:

இவர்கள் இருவரும் இணைந்து தான் இந்த நிகழ்ச்சியை வெற்றிகரமாக நடத்தி வருகிறார்கள். இந்த நிகழ்ச்சியை யாராலும் அருமையாக கொண்டு செல்ல முடியாது என்று பலரும் கூறுகிறார்கள். இந்நிலையில் மாகாபா மற்றும் பிரியங்கா இருவரும் இந்த நிகழ்ச்சியின் ஒரு எபிசோட்டை தொகுத்து வழங்க 2 லட்சம் வரை சம்பளம் பெறுவதாகக் கூறப்படுகிறது. இவர்கள் இருவருமே பல ஆண்டுகாலமாக விஜய் டிவியில் தொகுப்பாளராக இருந்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement