வேட்டி சட்ட, சொருகுன புடவை எல்லாம் இங்க தான் – வெளிநாட்டு நிகழ்ச்சிக்கு போனால் செந்தில் – ராஜலட்சுமி இப்படி தானாமே.

0
1625
senthil
- Advertisement -

‘என்ன மச்சான், சொல்லு புள்ள’ என்ற பாடல் மூலம் பட்டி தொட்டி எங்கும் பிரபலமானவர்கள் செந்தில் கணேஷ்– ராஜலக்ஷ்மி. விஜய் டிவியில் பல ஆண்டு காலமாக ஒளிபரப்பாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி. இந்த சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் போட்டியாளராக கணவன், மனைவி இருவரும் கலந்து கொண்டார்கள். பின் இந்த சூப்பர் சிங்கர் மேடையில் பல நாட்டுப்புற பாடல்களை பாடி மக்கள் மனதில் இடம் பிடித்தார்கள். மேலும், போட்டியில் செந்தில் கணேஷ் தன்னுடைய விடாமுயற்சியால் பைனலுக்கு சென்று வீட்டை தட்டிச் சென்றார்.

-விளம்பரம்-
This image has an empty alt attribute; its file name is raja222-1024x574.jpg

அதோடு இந்த நிகழ்ச்சி தான் இவர்கள் வாழ்க்கைக்கு திருப்புமுனையாக அமைந்தது என்று சொல்லலாம். தற்போது இந்த ஜோடிகள் திரை உலகில் பல பாடல்களை பாடி வருகிறார்கள். இதனை தொடர்ந்து இருவரும் உள்ளூர், வெளியூர் என பல கச்சேரிகளில் தங்களுடைய நாட்டுப்புற பாடலை பாடி வருகிறார்கள். மேலும், செந்தில் சினிமாவில் ஹீரோவாக படம் ஒன்றில் நடித்து இருந்தார். ஆனால், அந்த படம் மாபெரும் தோல்வியடைந்தது.

- Advertisement -

பல மொழிகளில் கலக்கும் செந்தில் – ராஜலக்ஷ்மி :

தற்போது இவர்கள் சொந்தமாக ஒரு ஸ்டூடியோ ஒன்றை வைத்து நடத்தி வருகின்றனர். சமீபத்தில் வெளியான புஷ்பா படத்தில் இடம் பெற்ற ‘வாயா சாமி’ என்ற பாடலை தமிழில் ராஜலக்ஷ்மி தான் பாடி இருந்தார். புஷ்பா திரைப்படம் மாபெரும் ஹிட் அடித்தது. மைத்திரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்து இருந்தது. இந்த படத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா உட்பட பலர் நடித்து இருந்தார்கள். மேலும், இந்த படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என பல மொழிகளில் வெளியானது.

செந்தில் கணேஷ் – ராஜலட்சுமி ரி – கிரியேட் பாடல்:

அதே போல ”வாயா சாமி ” பாடலை செந்தில் கணேஷ் – ராஜலட்சுமி இருவரும் ரி – கிரியேட் செய்து வீடியோ வெளியிட்டு இருந்தார்கள். அந்த வீடியோ செம்ம வைரலானது. சமீபத்தில் கூட சுயேச்சை வேட்பாளரை ஆதரித்து செந்தில் கணேஷ் – ராஜலட்சுமி பாட்டு பாடி வாக்கு சேகரித்து இருந்தார்கள். தற்போது இருவரும் இருளி என்ற படத்தில் நடித்து வருகிறார்கள். இப்படி இவர்கள் இருவரும் சினிமாவில் பிசியாக இருந்தாலும் எப்போதுமே சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கிறார்கள்.

-விளம்பரம்-

செம்ம மாடர்ன் உடையில் போட்டோஷுட்:

தான் அடிக்கடி எடுக்கும் போட்டோஷுட் புகைப்படம், வீடியோக்கள், ரசிகர்களுடன் உரையாடல் என அனைத்தையும் சோஷியல் மீடியாவில் பதிவிட்டு வருகிறார்கள். சமீப காலமாக இவர்கள் இருவரின் புகைப்படம் எல்லாம் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அதுமட்டுமில்லாமல் இவர்கள் செய்யும் சிறிய விஷயங்கள் கூட ரசிகர்கள் மத்தியில் பெரிய வைரலாக பரவி வருகிறது. அந்த வகையில் தற்போது இவர்கள் இருவரும்மார்டன் உடையில் நடத்திய போட்டோ ஷூட் இணையத்தில் வெளியாகி இருக்கிறது.

வாழ்த்துக்களை குவிக்கும் ரசிகர்கள்:

இதை பார்த்த ரசிகர்கள், செந்தில் – ராஜலட்சுமி தம்பதிகளா இது என்று வாயை பிளந்து உள்ளனர். அதே போல  ராஜலட்சுமி எப்போதுமே வெளிநாட்டில் நடக்கும் நிகழ்ச்சிக்கு சென்றால் மாடர்ன் உடையில் தான் செல்லுவாராம். கிராமத்தில் மட்டும் தான் சேலை கட்டு வருவாராம் அப்படி மாடர்ன் லுக்கில் தற்போது ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

Advertisement