பிரபல நகைச்சுவை நடிகை ஆர்த்தியின் கணவரும் நடிகருமான கணேஷ்கர் சமீபத்தில் விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பித்து சென்று விட்டதாக சமூக வலைதளத்தில் செய்திகள் பரவிய நிலையில் விபத்து குறித்தும் விபத்தின் போது என்ன நடந்தது என்பது குறித்தும் தற்போது சிகிச்சை பெற்று வரும் கணேஷ்கர் முதல் பேட்டி அளித்து இருக்கிறார். தென்னிந்திய சினிமா உலகில் மிகப்பிரபலமான நகைச்சுவை நடிகையாக திகழ்ந்து வருபவர் ஆர்த்தி. இவர் வெள்ளித்திரையில் மட்டுமில்லாமல் சின்னத்திரையிலும் கலக்கிக் கொண்டிருக்கிறார். ஆர்த்தி என்றதும் நம் நினைவில் முதலில் வருவது இவரது குண்டான தோற்றம் தான். ஆரம்பத்தில் ஆர்த்தி சற்று அளவான உடலில் தான் இருந்தார்.
ஆனால், உடல் எடை கூறைக்கின்றேன் என்று இவர் எடுத்த சில முயற்சிகளால் இவரது உடல் எடை மேலும் அதிகரித்துவிட்டது.நடிகை ஆர்த்தி பொதுவாக தனது உருவத்தை யாராவது கிண்டல் செய்தாலும் அதனை பெரிதாக எடுத்துக் கொள்வது கிடையாது அதே போல மற்றவர்கள் கலாய்ப்பதற்கு முன்பாக தன்னை தானே கலாய்த்து விடுவார்.மேலும், இவர் நடிகை மட்டுமில்லாமல் நகைச்சுவையாளர், மேடை கலைஞர் போன்ற பன்முகங்கள் கொண்டவர்.
கணேஷ் – ஆர்த்தி :
மேலும், நடிகை ஆர்த்தி அவர்கள் ஏற்கனவே தமிழ் சினிமா உலகில் முன்னணி காமெடி நடிகரான கணேஷ்கரை காதலித்து வந்தார். பின் ஆர்த்தி, கணேஷ்ஷை 2009 ஆம் ஆண்டு திருமணம் திருமணம் கொண்டார்.இவர்களுக்கு திருமணமாகி பல வருடங்களுக்கு மேலாகி விட்டது. இருந்தும் தற்போது வரை இவர்கள் இளம் ஜோடிகளாக வலம் வந்து கொண்டிருக்கிறார்கள். இவர் கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மானாட மயிலாட நடன நிகழ்ச்சியில் தனது கணவருடன் கலந்து கொண்டு இரண்டாவது பரிசை வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
தலைமறைவு ஆனாரா கணேஷ் :
மேலும், இவர்கள் இருவரும் யூடுயூப் சேனலையும் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் நடிகை ஆர்த்தியின் கணேஷ்கர் சாலை தடுப்பில் மோதி விபத்தை ஏற்படுத்தி விட்டு தப்பிச் சென்ற தகவல் தற்போது சோஷியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. முன் தினம் இரவு கணேஷ் தன்னுடைய காரில் பட்டினப்பாக்கம் சாலையில் சென்று கொண்டு இருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக விபத்து ஏற்பட்டுள்ளது. சாலை நடுவில் உள்ள தடுப்பு சுவரின் மீது கார் மோதி விபத்துக்குள்ளானது.
விபத்து குறித்து கணேஷ்கர் :
அது மட்டுமில்லாமல் பின்னால் வந்த இருசக்கர வாகன ஓட்டியும் தன்னுடைய கட்டுப்பாட்டை இழந்து கார் மீது மோதி கீழே விழுந்துள்ளார். உடனே சத்தம் கேட்டு அந்த பகுதி மக்கள் எல்லோரும் ஒன்று கூடியபோது கணேஷ்கர் அப்படியே காரை விட்டுவிட்டு அங்கிருந்து தப்பித்துவிட்டார் என்று செய்திகள் வெளியானது. இப்படி ஒரு நிலையில் விபத்தில் சிக்கி காயமடைந்து தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கணேஷ்கர் விபத்து குறித்து பேசியுள்ளார்.
சிகிச்சை பெற்று வரும் கணேஷ் :
அதில் சாலையில் இருந்த வேகத்தடையில் மோதி கட்டுப்பாட்டை இழந்து கார் நிலை தடுமாறியதால் டிவைடரில் மோதியதாகவும், மோதிய வேகத்தில் நெஞ்சில் ஸ்டேரிங் அடித்தாகவும் கூறியுள்ளார். மேலும், விபத்து செய்தி அறிந்த ஆர்த்தி சம்பவ இடத்திற்கு சென்று அவரை ஆட்டோவில் மருத்துவமனைக்கு அழைத்து சென்றதாகவும் உயிரை காப்பற்றும் வேளையில் காரா ஞாபகம் இருக்கும் என்றும் கூறியுள்ளார். எங்களை போலிஸ் தேடியதற்கு காரணம் நாங்கள் மருத்துவமனையில் இருந்தது அவர்களுக்கு தெரியாது. அதே போல நான் குடித்துவிட்டு வண்டி ஓட்டினேனா என்று சோதனை செய்ய தான் தேடினார்கள். தான் குடித்துவிட்டு கார் ஓட்டவில்லை, தலைமறைவாகவும் ஆகவில்லை. என்றும் கூறியுள்ளார்கள்.