எப்பா, இது வீடா இல்லா அரண்மனையா – செந்தில் ராஜலட்சுமி கட்டி இருக்கும் பிரம்மாண்ட வீட்டில் Home Tour வீடியோ.

0
1209
senthil
- Advertisement -

சூப்பர் சிங்கர் ராஜலட்சுமி புதிதாக கட்டி இருக்கும் பிரம்மாண்ட வீட்டின் Home Tour வீடியோ வெளியாகி இருக்க தற்போது சோசியல் மீடியாவில் பயங்கர ட்ரெண்டிங் ஆகி வருகிறது. விஜய் டிவி சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் பட்டி தொட்டி எங்கும் பிரபலமானவர்கள் செந்தில் கணேஷ்– ராஜலக்ஷ்மி. இந்த சூப்பர் சிங்கர் மேடையில் இவர்கள் பல நாட்டுப்புறப் பாடல்களை பாடி மக்கள் மனதில் இடம் பிடித்தார்கள். பின் போட்டியில் செந்தில் கணேஷ் தன்னுடைய விடாமுயற்சியால் பைனலுக்கு சென்று வீட்டை தட்டிச் சென்றார்.

-விளம்பரம்-

அதோடு இந்த நிகழ்ச்சி தான் இவர்கள் வாழ்க்கைக்கு திருப்புமுனையாக அமைந்தது என்று சொல்லலாம். தற்போது இந்த ஜோடிகள் திரை உலகில் பல பாடல்களை பாடி வருகிறார்கள். இதை தொடர்ந்து இருவரும் உள்ளூர், வெளியூர் என பல கச்சேரிகளில் தங்களுடைய நாட்டுப்புற பாடலை பாடி வருகிறார்கள். மேலும், செந்தில் சினிமாவில் ஹீரோவாக படம் ஒன்றில் நடித்து இருந்தார். ஆனால், அந்த படம் மாபெரும் தோல்வியடைந்தது.

- Advertisement -

புஸ்பா படம் :

தற்போது இவர்கள் சொந்தமாக ஒரு ஸ்டூடியோ ஒன்றை வைத்து நடத்தி வருகின்றனர். சமீபத்தில் வெளியான புஷ்பா படத்தில் இடம் பெற்ற ‘வாயா சாமி’ என்ற பாடலை தமிழில் ராஜலக்ஷ்மி தான் பாடி இருந்தார். புஷ்பா திரைப்படம் மாபெரும் ஹிட் அடித்தது. மைத்திரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்து இருந்தது. இந்த படத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா உட்பட பலர் நடித்து இருந்தார்கள். இந்த படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என பல மொழிகளில் வெளியானது.

செந்தில் கணேஷ் – ராஜலட்சுமி நடிக்கும் படம்:

தற்போது இருவரும் இருளி என்ற படத்தில் நடித்து வருகிறார்கள். இப்படி இவர்கள் இருவரும் சினிமாவில் பிசியாக இருந்தாலும் எப்போதுமே சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கிறார்கள். தற்போது இந்த ஜோடி பல திரைப்படங்களில் பின்னணி பாடல்களை பாடி வருகின்றனர். இது ஒரு பக்கம் இருக்க, இவர்கள் சொந்தமாக வீடு கட்டி இருக்கிறார்கள். சமீபத்தில் தான் ராஜலக்ஷ்மி மற்றும் செந்தில் கணேஷ் தம்பதியினர் தங்களுடைய பிள்ளைகளுக்கு காதணி விழாவை நடத்தி இருந்தனர்.

-விளம்பரம்-

வீட்டுக்கிரக பிரசவம்:

இதற்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தார்கள். மேலும், இவர்களின்விழாவில் விஜய் டிவி பிரபலங்கள் பலரும் வந்திருந்தார்கள். இந்நிலையில் விஜய் டிவி பிரபலம் ஒருவர் செய்திருக்கும் செயல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அதாவது, ராஜலட்சுமி செந்தில் கணேசன் வீட்டு விழாவிற்கு சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி இயக்குனர் ரவூஃபா வந்திருந்தார். இவர்கள் மூலம் தான் ராஜலட்சுமி- செந்தில் வாழ்க்கையில் பல மாற்றங்கள் நிகழ்ந்தது.

இயக்குனர் ரவூஃபா செய்த செயல்:

இதனால் இவர்கள் இயக்குனர் ரவூஃபாவை தங்கள் வீட்டின் பூஜையறையில் விளக்கு ஏற்ற சொல்லியிருக்கிறார்கள். மேலும், அவர்களுடைய வேண்டுகோளை ஏற்றுக் கொண்டு சாமி அறையினுள் விளக்கேற்றி தொடங்கி வைத்திருக்கிறார் ரவூஃபா. இந்த புகைப்படம் தான் சோசியல் மீடியாவில் வைரல் ஆகிவந்த நிலையில் ரசிகர்கள் பலரும் சாமி படங்கள் இருந்தும் இஸ்லாமிய மதத்தை சேர்ந்த பெண் விளக்கேற்றி வைத்தது பாராட்டுக்குரிய ஒன்று கூறிகூறி வந்தனர். இப்படி ஒரு நிலையில் செந்தில் ராஜலக்ஷ்மியின் home tour வீடியோ வெளியாகி இருக்கிறது. இதை கண்ட ரசிகர்கள் பலர் இது வீடா அரண்மனையா என்று வாயை பிளந்து இருக்கின்றனர்.

Advertisement