18 வயதில் திருமணம், இரண்டு முறை கருக்கலைப்பு – பாடகி சுஜாதா பகிர்ந்த ஷாக்கிங் விஷயங்கள்.

0
1033
- Advertisement -

தென்னிந்திய சினிமா உலகில் மிக பிரபலமான பின்னணி பாடகியாக வலம் வந்தவர் சுஜாதா மோகன். இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என பல மொழி திரைப்படங்களில் பாடி உள்ளார். இதுவரை இவர் 4000 பாடல்களுக்கு மேல் பாடி உள்ளார். இவருடைய பாடல் திறமைக்கு பல விருதுகளையும் வாங்கி உள்ளார். பாடகி சுஜாதா மோகன் அவர்கள்தனது 18 வது வயதில் 1981 ஆம் ஆண்டு கிருஷ்ணா மோகன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர் ஒரு மருத்துவராக பணியாற்றி வருகிறார். இவர்கள் இருவருக்கும் ஸ்வேதா மோகன் என்ற ஒரு மகள் உள்ளார். இவர் 1985ம் ஆண்டு நவம்பர் 15ஆம் தேதி சென்னையில் பிறந்தவர்.

-விளம்பரம்-

- Advertisement -

ஸ்வேதா மோகனுக்கும் சிறு வயதில் இருந்தே இசையில் அதிக ஆர்வம் உடையவர். பின் இவரும் தற்போது சினிமா உலகில் மிகப் பிரபலமான பின்னணிப் பாடகியாக திகழ்ந்து வருகிறார். ஸ்வேதா மோகனும் ஒரு பிரபலமான இந்திய பாடகி ஆவார். இவரும் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என பல மொழித் திரைப்படங்களில் பாடி வருகிறார். இவர் இதுவரை 50க்கும் மேற்பட்ட மொழிகளில் பாடி உள்ளார. அதோடு விஜய் தொலைக்காட்சியில் 10 வருடங்களுக்கு மேலாக நடைபெற்று வரும் நிகழ்ச்சி சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சியில் நடுவராக ஸ்வேதா மோகன் பங்கு பெற்று வருகிறார்.

சுஜாதா மகள் :

இந்த சூப்பர் சிங்கர் தொடங்கிய காலத்தில் சுஜாதா மோகன் தான் நடுவராக இருந்தார். பின் தற்போது ஸ்வேதா மோகன் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிக்கு நடுவராக உள்ளார். இவர் 2011 ஆம் ஆண்டு அஸ்வின் சாஷி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஷ்ரேஷ்டா(SHRESTA) என்ற ஒரு அழகான பெண் குழந்தையும் உள்ளது. தற்போது சமூக வலைத்தளங்களில் சுஜாதா, சுஜாதாவின் மகள் ஸ்வேதா, சுவேதாவின் மகள் ஷ்ரேஷ்டா ஆகிய மூவரும் ஒன்றாக இருக்கும் புகைப்படம் வெளியாகி வரும் நிலையில் பேட்டி ஒன்றில் தன்னுடைய மகள் ஸ்வேதா பற்றி பாடகி சுஜாதா பேசியுள்ளார்.

-விளம்பரம்-

ஸ்வேதா பற்றி கூறியது :

அவர் கூறுகையில் “எனக்கு இரண்டு முறை அபார்ஷன் ஆகிவிட்டது. அதற்கு பிறகு தான் என்னுடைய மகள் ஸ்வேதா மோகன் பிறந்தார். அவர் ஸ்கூல் படிக்கும் போதும் காலேஜ் படுக்கும் போது ஸ்வேதா கலந்து கொள்ளும் பள்ளி நிகழ்ச்சிகளில் பொரும்பாலும் என்னால் கலந்து கொள்ள முடியவில்லை. ஏனென்றால் நான் அப்போது என்னுடைய பாடும் தொழிலில் மிகவும் முனைப்பாக இருந்தேன். அந்த விஷியங்களை இப்போது நினைத்தாலும் கூட வருத்தமாக இருக்கிறது.

மகளை பார்த்துக்கொள்கிறோம் :

அந்த நேரங்களில் எங்களுடன் இருப்பதை என்னுடைய மகள் நினைத்து வருந்தியிருப்பார். ஆனால் அதற்கு தற்போது ஒன்றும் செய்யமுடியாது அதற்கெல்லாம் ஈடு செய்யும் வகையில் தான் தற்போது தன்னுடைய மகள் ஸ்வேதாவின் மகளை பார்த்து வருவது எங்களுடைய வேலையாக இருக்கிறது. இது மிகவும் மகிச்சியான விஷயமாக இருக்கிறது. ஸ்வேதா வெளிநாட்டில் இருக்கும் நிலையில் தன்னுடைய பேத்தியை பள்ளிக்கும் சென்று மீதும் அழைத்து வருவது முதற்கொண்டு அணைத்து வேலைகளையும் தாங்கள் பார்த்து வருவதாக அந்த பேட்டியில் கூறினார் பாடகி சுஜாதா.

Advertisement