பாலிவுட்டில் மிக பிரபலமான நடிகையாக வலம் வந்தவர் நடிகை மனிஷா கொய்ராலா. நடிகை மனிஷா கொய்ராலா நேபாளத்தைச் சேர்ந்தவர். இவர் நேபாள–இந்திய நடிகை ஆவார். இவர் முதன் முதலில் திரையுலகிற்கு நேபாள மொழியில் வெளியான ஃபெரி பெட்டாலா என்ற படத்தின் மூலம் தான் அறிமுகமானார். அதற்குப் பிறகு இந்திய சினிமா உலகில் நடிக்க துவங்கினார். அதுவும் ஹிந்தியில் தான் இவர் முதன் முதலாக நடிக்க தொடங்கினார். பின் இவர் இயக்குனர் மணிரத்னம் இயக்கியத்தில் 1995 ஆம் ஆண்டு வெளியான ‘பாம்பே’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
அதனை தொடர்ந்து இந்தியன்,பாபா,முதல்வன் உள்ளிட்ட பல மொழி படங்களில் நடித்து உள்ளார். பின் பல ஆண்டுகளுக்குப் பிறகு இவர் தனுஷ் நடிப்பில் வெளிவந்த ‘மாப்பிள்ளை’ படத்தில் மீண்டும் தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்தார். இவர் அதிகம் இந்தி படங்களில் தான் நடித்து உள்ளார். மனிஷாவிற்கு கடந்த 2010ஆம் ஆண்டு நேபால் தொழிலதிபர் சாம்ராட் தகல் என்பவருடன் திருமணம் நடைபெற்றது. இருவரும் பிலாந்தில் ஹனிமூன் கொண்டாடினார்.
ஆனால், 6 மாதத்தில் மண வாழ்க்கை கசந்து போனது. இதனை விவாகரத்து கோரி கடந்த 2012ஆம் ஆண்டு விவகாரத்து பெற்றார். இதனால் அமெரிக்காவில் சென்று தனது தலையமுடியை மொட்டை அடித்துக்கொண்டு சிகிச்சை பெற்று புற்றுநோயில் இருந்து வெற்றிகரமாக மீண்டு வந்தார். மேலும், நேபால் நாட்டில் இருந்து இளம் பெண்களை அழைத்து சென்று விபச்சாரத்தில் ஈடுபடுத்துபவகளுக்கு எதிராகவும் போராடி வருகிறார். தற்போது நேபாலில் நல்லெண்ணத் தூதராக பணியாற்றியும் பொது சேவையும் செய்து வருகிறார்.
பின்னர் இவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு வெளிநாட்டுக்கு சென்று சிகிச்சை பெற்று மீண்டார். தற்போது மீண்டும் படங்களில் நடித்து வருகிறார். புற்று நோயில் இருந்து மீண்ட மனிஷா கொய்ராலா “HEALED” என்ற புத்தகத்தை கூட வெளியிட்டு இருந்தார். இப்படி ஒரு நிலையில் மனிஷா கொய்ராலாவின் சில லேட்டஸ்ட் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.