அத்தனை காதல் கடிதத்திற்கும் முற்றுப்புள்ளி வைத்த சூப்பர் சிங்கர் விக்ரமின் திடீர் திருமணம்.

0
66128
vikram
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் பல்வேறு நபர்கள் வெள்ளித்திரைக்கு சென்று ஒரு கலக்கு கலக்கி இருக்கிறார்கள். அந்த வகையில் திவாகர் தொடங்கி தற்போது செந்தில் கணேஷ்– ராஜலட்சுமி தொடங்கி பல பெயரை சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி வெள்ளித்திரைக்கு கொண்டு சென்று உள்ளது. மேலும், அவர்களுக்கு சினிமாவில் பட வாய்ப்புகளும் நிறைய வந்து உள்ளது. விஜய் டிவியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்ச்சியின் ஏழாவது பாகம் சமீபத்தில் தான் வெற்றிகரமாக முடிவடைந்தது. இந்த நிகழ்ச்சியில் பங்குபெற்ற பல போட்டியாளர்களின் குறிப்பிட்ட போட்டியாளர்கள் மட்டும் ரசிகர்கள் மத்தியில் அதிக இடம் பிடித்து உள்ளார்கள்.

-விளம்பரம்-

அதுமட்டும் இல்லாமல் இந்த சூப்பர் சிங்கர் ஜூனியர் சீசன் 7 நிகழ்ச்சியில் உன்னி கிருஷ்ணன், அனுராதா ஸ்ரீராம், பென்னி தயால், ஸ்வேதா மோகன் ஆகிய நான்கு பேரும் நடுவர்களாக இருந்தார்கள். அதோடு மா.கா.பா.ஆனந்த் மற்றும் பிரியங்கா இருவரும் இணைந்து இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்தார்கள். அதுமட்டும் இல்லாமல் இந்த நிகழ்ச்சியில் வெற்றி பெறுபவருக்கு அனிருத் இசையமைப்பில் பாட வாய்ப்பு அளிக்கப்பட உள்ளது என்றும் அறிவித்து இருந்தார்கள். பல்வேறு போட்டியாளர்கள் கலந்து கொண்ட இந்த சீசனில் இறுதி போட்டிக்கு கௌதம், புண்யா, விக்ரம், முருகன், சாம் விஷால் ஆகியோர் தகுதி பெற்றிருந்தனர்.

இதையும் பாருங்க : 40 ஆண்டுகாள திரைவாழ்க்கையில், யாரும் என்னிடம் திருநங்கை கதைய சொல்லல. ரஜினி ஓபன் பேட்டி

- Advertisement -

மேலும், இந்த சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மக்களிடையே அதிக வரவேற்பையும் பெற்றது. முதல் இடத்தை மூக்குத்தி முருகன் பிடித்து உள்ளார். பின் இரண்டாம் இடத்தை விக்ரம் பிடித்திருந்தார். அவருக்கு 25 லட்ச ருபாய் மதிப்பிலான வைர நெக்லெஸ் வழங்கப்பட்டது. இந்த சூப்பர் சிங்கர் சீசன் 7 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டவர் விக்ரம். இவருக்கு பெண் ரசிகைகள் தான் அதிகம் என்று சொல்லுவார்கள். அது மட்டுமில்லாமல் ஒவ்வொரு எபிசோடிலும் பெண் ஒருவர் இவருக்கு கடிதம் எழுதுவது போன்ற வதந்தியை உருவாக்கி தொகுப்பாளர்கள் அவரை கலாய்த்துக் கொண்டும் இருப்பார்கள். தற்போது அவருக்கு திருமணம் நடை பெற்று உள்ளது.

மேலும், உறவினர்கள் நண்பர்கள் குடும்பத்தின் முன்னிலையில் இவருக்கு திருமணம் நடந்து உள்ளது. விக்ரம் மற்றும் அவரது மனைவி புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி உள்ளது. சூப்பர் சிங்கர் சீசன் 7 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்ட சிவானி கலந்து கொண்டு உள்ளார். மேலும், விக்ரம் மற்றும் அவரது மனைவி உடன் சிவானி இருக்கும் புகைப்படத்தை தன்னுடைய இன்ஸ்ட்ராமில் சிவானி பதிவிட்டு உள்ளார். இதை பார்த்து ரசிகர்கள் அனைவரும் இவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

-விளம்பரம்-
Advertisement