3டி, 10 மொழியில் ரிலீஸ், ஹாலிவுட் ரேஞ்சுக்கு வெளியான சூர்யா 42 படத்தின் மோஷன் போஸ்டர்- குவியும் வாழ்த்துக்கள்

0
598
Surya
- Advertisement -

ஹாலிவுட் ரேஞ்சுக்கு வெளியாகி உள்ள சூர்யா 42 படத்தின் போஸ்டர் தற்போது சோசியல் மீடியாவில் பயங்கர ட்ரெண்டிங் ஆகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் பல ஆண்டு காலமாக முன்னணி நடிகராக கலக்கிக் கொண்டிருப்பவர் சூர்யா. இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. அந்த வகையில் கடந்த ஆண்டு இவர் நடிப்பில் வெளிவந்து இருந்த ஜெய் பீம் படம் மிகப்பெரிய அளவில் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்திருந்தது.

-விளம்பரம்-
surya

இதனைத் தொடர்ந்து சமீபத்தில் சூர்யா நடிப்பில் எதற்கும் துணிந்தவன் என்ற படம் வெளியாகி இருந்தது. இந்த படமும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. பின் லோகேஷ் இயக்கத்தில் கமல் நடிப்பில் வெளிவந்த விக்ரம் படத்தில் சூர்யா ரோலக்ஸ் என்ற தோற்றத்தில் நடித்து இருந்தார். அதேபோல் மாதவனின் ராக்கெட்டரி தி நம்பி விளைவு என்ற படத்திலும் சூர்யா சிறப்பு தோற்றத்தில் நடித்து இருந்தார். இப்படி இவர் நடித்த படங்கள் எல்லாம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது.

- Advertisement -

சூர்யா மற்றும் பாலா கூட்டணி:

தற்போது சூர்யா மற்றும் பாலாவின் கூட்டணியில் படம் உருவாகிக் கொண்டிருக்கிறது. இந்த படத்தை சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்து வருகிறது. பாலா இயக்கத்தில் சூர்யா அவர்கள் நந்தா, பிதாமகன் போன்ற படங்களில் நடித்திருந்தார். பின் 20 ஆண்டுகளுக்கு பிறகு சூர்யா– பாலா இணைந்து படத்தில் பணியாற்றி வருவது ரசிகர்கள் மத்தியில் சந்தோஷத்தை அளித்து இருக்கிறது. இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார்.

சூர்யா நடிக்கும் படங்கள்:

இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு நடந்து முடிந்தது. தற்போது அடுத்த கட்ட படப்பிடிப்பு நடக்க இருக்கிறது. அதற்கான பணிகள் மும்முரமாக சென்று கொண்டு இருக்கிறது. மேலும், இந்த படத்திற்கு வணங்கான் என்று தலைப்பு வைக்கப்பட்டு இருக்கிறது. இதை அடுத்து சூர்யா வெற்றிமாறனின் வாடிவாசல் படத்தில் நடிக்க இருக்கிறார். சமீபத்தில் கூட டெல்லியில் நடந்த 68 ஆவது தேசிய திரைப்பட விருதுகள் விழாவில் சிறந்த நடிகருக்கான விருதை சூரரை போற்று படத்திற்காக சூர்யா வென்று இருக்கிறார்.

-விளம்பரம்-
surya

சூர்யா 42 படம்:

மொத்தம் 5 பிரிவுகளில் 5 தேசிய விருதுகளை வென்று குவித்துள்ளது சூரரைப்போற்று திரைப்படம். இதனால் பலரும் சூர்யாவிற்கு பாராட்டுகளை தெரிவித்து இருந்தார்கள். தற்போது சூர்யா அவர்கள் சிறுத்தை சிவா இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். முதன் முறையாக சூர்யா- சிறுத்தை சிவா கூட்டணியில் உருவாகும் படத்திற்கு சூர்யா 42 என்று பெயர் இடப்பட்டுள்ளது. இந்த படத்தை யூவி கிரியேஷன் நிறுவனமும் ஸ்டுடியோ கிரீன் நிறுவனமும் இணைந்து தயாரித்து வருகிறது. இந்த படத்தில் நடிகர் சூர்யாவுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை திஷா பதானி நடிக்கிறார். இந்த படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். கடந்த மாதம் தான் இந்த படத்தின் பூஜை தொடங்கப்பட்டது.

சூர்யா 42 படத்தின் மோஷன் போஸ்டர்:

இந்த படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு கோவாவில் நடந்து வருகிறது. மேலும், இந்த படத்தை இரண்டு பாகங்களாக வெளியிட படக்குழு திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இந்த படத்தின் போஸ்டர் சோசியல் மீடியாவில் பயங்கர ட்ரெண்டிங் ஆகி வருகிறது. அதாவது, சூர்யா 42 படத்தின் மோஷன் போஸ்டரை இன்று படக்குழு வெளியிட்டு இருக்கிறது. அதில் இந்த படம் 3டில் உருவாக இருப்பதாக படக்குழு கூறி இருக்கின்றனர். இந்த படத்தை மொத்தம் பத்து மொழிகளில் வெளியிட உள்ளதாகவும் தெரியவந்து உள்ளது. தற்போது வெளியாகியுள்ள இந்த படத்தின் மோசன் போஸ்டர் ஹாலிவுட் பட ரேஞ்சுக்கு மிரட்டும் வகையில் இருக்கிறது. இதனால் ரசிகர்கள் பலரும் படத்தின் ரிலீசுக்காக ஆவலுடன் காத்து கொண்டு இருக்கின்றனர்.

Advertisement