காமெடி டைம் TO சினிமா – 90ஸ் கிட்ஸ்கள் மறக்க முடியாத சிட்டி பாபு இறந்து இத்தனை வருஷம் ஆகிவிட்டதா?

0
726
- Advertisement -

மறைந்த நகைச்சுவை நடிகர் சிட்டி பாபுவின் நினைவு தினம் அன்று அவரைக் குறித்து அறியாத சில விஷயங்கள் தான் இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் பல பிரபலங்கள் என்றும் மக்கள் மத்தியில் நீங்கா இடத்தைப் பிடித்திருக்கிறார்கள். அந்த வகையில் நகைச்சுவை நடிகர் சிட்டிபாபு ஒருவர். இவருடைய உண்மையான பெயர் ஹாஜாத் அதிப். இவர் தொலைக்காட்சி நிகழ்ச்சியின் மூலம் தான் மக்கள் மத்தியில் அறியப்பட்டார்.

-விளம்பரம்-

இவர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நிகழ்ச்சிகளில் பங்கேற்றும், தொகுப்பாளராகவும் இருந்திருக்கிறார். அது மட்டும் இல்லாமல் இவர் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான அசத்தப்போவது யாரு என்ற நிகழ்ச்சியில் இவர் நடுவராகவும் பணியாற்றி இருந்தார். இவருடைய உடல் மொழியும் வசனங்களும் மக்கள் மத்தியில் பிரபலமாக்கியது . அதிலும், இவர் நடிக்கும் போது கொடுக்கும் முக பாவனைகள் வேற லெவல்.

- Advertisement -

மேலும், இவர் கடந்த 2002 ஆம் ஆண்டு வெளிவந்த பைவ் ஸ்டார் என்ற படத்தின் மூலம் தான் தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆகியிருந்தார். அதனை தொடர்ந்து இவர் பல முன்னணி நடிகர்களின் படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்திருந்தார். இவர் குணச்சித்திர வேடங்களில் நடித்திருந்தாலும் மக்கள் மத்தியில் பிரபலமாகி இருக்கிறார். கிட்டத்தட்ட இவர் 50 படங்களுக்கு மேல் நடித்திருக்கிறார்.

அப்படியே இவர் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றிருக்கிறார் . குறிப்பாக இவர் நடத்திய அரி கிரி அசெம்பிளி என்ற தொலைக்காட்சி தொடரை கண்டிப்பாக 90ஸ் கிட்ஸ் யாராலும் மறக்கவே முடியாது. அதனை தொடர்ந்து இவர் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி இருக்கிறார். மேலும், இவர் தமிழில் பல படங்களில் நடித்திருந்தாலும் பிரபலமான நடிகராக இருக்க முடியவில்லை. இருந்தாலும், இவர் மக்கள் மனதில் நீங்கா இடத்தை பிடித்து விட்டார் என்றே சொல்லலாம்.

-விளம்பரம்-

இப்படி இருக்கும் நிலையில் திடீரென்று இவருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்தது. இதனால் இவரை சென்னையில் உள்ள மருத்துவமனை ஒன்றில் சேர்த்து சிகிச்சை அளித்திருந்தார்கள். அப்போது அவருக்கு மூளையில் கட்டி இருப்பதாக சொல்லி சிகிச்சை செய்திருந்தார்கள். இருந்தாலும், அவருடைய உடல்நிலை மாற்றம் ஏற்படவில்லை. அதற்குப் பிறகும் தொடர்ந்தும் சிகிச்சை அளித்து வந்தார்கள்.

இருந்தும் சிட்டிபாபு கோமாநிலைக்கு சென்று விட்டார். பின் நடிகர் சிட்டிபாபு அவர்கள் 2013 ஆம் ஆண்டு இறந்துவிட்டார். இவருடைய மறைவிற்கு திரைப்பிரபலங்கள் பலரும் இரங்கலை தெரிவித்து இருந்தார்கள். இந்நிலையில் இன்று நடிகர் சிட்டிபாபுவின் பத்தாம் ஆண்டு நினைவு தினம். இதற்கு ரசிகர்கள் பலரும் சோசியல் மீடியாவில் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.

Advertisement