சூர்யா பிறந்தநாளுக்கு பேனர் கட்டிய ரசிகர்கள் பலி – இப்படி ஒரு சோகமாக ? கதறும் உறவினர்கள்.

0
1426
Surya
- Advertisement -

சூர்யாவின் பிறந்தநாளுக்கு ரசிகர்கள் பேனர் கட்டியபோது மின்சாரம் தாக்கி இரண்டு பேர் அநியாயமாக இறந்திருக்கும் சம்பவம் தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. தமிழ் சினிமா உலகில் பல ஆண்டு காலமாக முன்னணி நடிகராக கலக்கிக் கொண்டிருப்பவர் சூர்யா. இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. மேலும் சூர்யாவின் 24 வது படமான சூரரைப் போற்று 5 பிரிவுகளில் 5 தேசிய விருதுகளை வென்று குவித்துள்ளது.

-விளம்பரம்-

இதனால் பலரும் சூர்யாவிற்கு பாராட்டுகளை தெரிவித்து இருந்தார்கள். தற்போது சூர்யா அவர்கள் சிறுத்தை சிவா இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். முதன் முறையாக சூர்யா- சிறுத்தை சிவா கூட்டணியில் உருவாகும் படத்திற்கு கங்குவா என்று பெயர் இடப்பட்டு இருக்கிறது. இந்த படத்தை யூவி கிரியேஷன் நிறுவனமும் ஸ்டுடியோ கிரீன் நிறுவனமும் இணைந்து தயாரித்து வருகிறது. இந்த படத்தில் நடிகர் சூர்யாவுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை திஷா பதானி நடிக்கிறார்.

- Advertisement -

சூர்யா- சிறுத்தை சிவா கூட்டணி

இவர்களுடன் இந்த படத்தில் யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி, கோவை சரளா உட்பட பலர் நடிக்கிறார்கள். இந்த படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. மேலும், இந்த படத்தை இரண்டு பாகங்களாக வெளியிட படக்குழு திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது. மேலும், இந்த படம் 3டில் உருவாக இருப்பதாக படக்குழு கூறி இருக்கின்றனர். அதோடு இந்த படம் இரண்டு வெவ்வேறு காலகட்டங்களில் நடைபெறும் வகையில் எடுக்கப்படுகிறது.

கங்குவான் படம்:

இந்த படம் 10 மொழிகளில் வெளியாகயிருக்கிறது. அது மட்டும் இல்லாமல் இந்த படத்தில் நடிகர் சூர்யா அவர்கள் ஐந்து விதமான கெட்டப்பில் நடிக்கிறார். மேலும், இவர் சினிமாவை தாண்டி பல சமூக சேவைகளையும் செய்து வருகிறார். குறிப்பாக, அகரம் என்ற பெயரில் இவர் ஏழை எளிய மக்களுக்கு கல்வி உதவியும் வழங்கி இருக்கிறார். சமீபத்தில் கூட இந்த அறக்கட்டளையின் சார்பில் 44ஆவது ஆண்டு விழா நிறைவடைந்து இருந்தது. இந்த நிலையில் இன்று சூர்யாவின் 48வது பிறந்தநாள். இதற்கு ரசிகர்கள் பிரபலங்கள் என பலருமே வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்கள். இந்த நிலையில் சூர்யாவின் பிறந்தநாளுக்கு ரசிகர்கள் பேனர் கட்டியபோது மின்சாரம் தாக்கி இறந்திருக்கும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

-விளம்பரம்-

சூர்யா பிறந்தநாளுக்கு பேனர்:

ஆந்திர மாநிலம் பல்நாடு மாவட்டத்தின் நரசராவ்பேட்டை பகுதியை சேர்ந்ந்தவர்கள் வெங்கடேஷ் மற்றும் பி.சாய். இவர்கள் சூர்யாவின் ரசிகர்கள். ஆகவே, அவருடைய பிறந்த நாளை முன்னிட்டு நேற்று பேனர் வைக்கும் விழாவில் ஈடுபட்டிருக்கிறார்கள். அப்போது பேனரில் இருந்து இரும்பு கம்பியானது மின்சார கம்பியில் உரசி இருக்கிறது. அதில் மின்சாரம் பாய்ந்து இரண்டு ரசிகர்கள் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்து இருக்கின்றனர். இதனை அடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தி இருக்கிறது.

உயிர் இழந்த ரசிகர்கள்:

அப்போது விசாரணையில் மேலும் இறந்தது இறந்த ரசிகர் மற்றும் சாய் என்ற ரசிகர்கள் இறந்திருக்கிறார்கள் என்பது விசாரணையில் இறந்த இரண்டு பேரும் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தவர்கள். பின் இவர்களுடைய உடல்களை போலீசார் பிரேத பரிசோதனைக்கு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்திருக்கின்றனர். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணையும் நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

Advertisement