தானா சேர்ந்த கூட்டத்திற்கு பின்னர் நடிகர் சூர்யாவின் ‘என் ஜி கே’ திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது. செல்வராகவன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தின் அறிவிப்பு கடந்த ஆண்டே வெளியாகி இருந்தது. தற்போது ஒரு வழியாக இந்த திரைப்படம் திரைக்கு வர இருக்கிறது.
நீண்ட இடைவேளைக்கு பின்னர் செல்வராகவன் இயக்கத்தில் வெளியாகவிருக்கும் இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்த திரைப் படம் எப்போது திரைக்கு வரும் என பலரும் எதிர்பார்த்து வரும் நிலையில் இந்த படத்திற்கான பிரமோஷன் வேலைகளில் படக்குழு வீடு பட்டு வருகிறது.
இந்த படத்திற்கு டுவிட்டரில் எமோஜி ஒன்றை படக்குழுவினர் பெற்றுள்ளனர். அதாவது ட்விட்டரில் #NGK, #NGKFromMay31, #NGKFire என்று நீங்கள் டைப் அடித்தால் உடனே சூர்யாவின் அட்டகாசமான படத்துடன் கூடிய எமோஜி தோன்றும். படக்குழு இப்படி ப்ரோமிஷனில் ஈடுபட ரசிகர்கள் ஒரு புறம் தங்களது கொண்டாட்டத்தை துவங்கியுள்ளனர்.
இந்த நிலையில் திருவள்ளூர் மாவட்ட சூர்யா ரசிகர் மன்றம் சார்பில் இந்த படத்திற்கு 215 அடி உயரமான கட் அவுட் வைக்கப்பட்டுள்ளது. இறுதியாக சர்க்கார் படத்திற்குதான் 175 அடிக்கு கட் அவுட் அமைக்கப்பட்டிருந்தது. அதன்பின்னர் தல அஜித் நடிப்பில் வெளியான விஸ்வாசம் படத்திற்கு அதை விட உயரமான கட்டவுட் வைக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் இந்த இரண்டு கட்டவுட்களையும் விட சூர்யாவின் ரசிகர்கள் இந்த படத்திற்கு மிகப் பெரிய கட்டவுட்டை வைத்து சாதனை படைத்துள்ளனர். மேலும், இந்தியாவிலேயே ஒரு திரைப்படத்திற்கு வைக்கப்பட்ட மிக உயரமான கட்டவுட் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.