வெளியானது சூர்யா 37 படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக்..!

0
800
- Advertisement -

நடிகர் சூர்யா தற்போது இயக்குனர் செல்வராகவன் இயக்கி வரும் ‘என் ஜி கே’ படத்தில் நடித்து வருகிறார்.இந்த படம் நீண்ட நாட்களாக கிடப்பில் இருந்து வரும் நீண்நிலையில்  இதை தொடர்ந்து கே வி ஆனந்த் இயக்கத்தில் நடித்து வருகிறார்.

-விளம்பரம்-

இந்த படத்தில் மலையாள நடிகர் மோகன்லால், ஆர்யா போன்ற நடிகர்களும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இந்நிலையில் சில நாட்களுக்கு முன்னர் இந்த படத்திற்கு இயக்குனர் கே வி ஆனந்த், மீட்பான், உயிர்கா இதில் எந்த டைட்டில் வைக்கலாம் என ரசிகர்களிடம் கேட்டிருந்தார்.

இதையும் படியுங்க : அதுக்குன்னு ஓ**ன் னு title வைக்க முடியுமா?டென்ஷன் ஆன கே வி ஆனந்த்..! 

- Advertisement -

இந்த நிலையில், புத்தாண்டை முன்னிட்டு இன்று அதிகாலை 12.10 மணிக்கு படத்திற்கு காப்பான் என்று தலைப்பு வைத்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அத்துடன் முதல்பார்வை போஸ்டரையும் வெளியிட்டது.

இதில் சூர்யா, கோர்ட், சூட்டுடன் கையில் துப்பாக்கி வைத்தபடி தோற்றமளிக்கிறார். மற்றொரு போஸ்டரில், சூர்யா, மோகன் லால், ஆர்யா இடம்பெற்றுள்ளனர்.
பிரதமரை பாதுகாக்கும், பாதுகாப்பு அதிகாரியாக சூர்யா நடிக்கிறார். இவர்களுடன் சமுத்திரக்கனி, பொம்மன் இரானி, சிரக் ஜனி என பல்வேறு பிரபலங்கள் நடித்து வருகின்றனர்.

-விளம்பரம்-
Advertisement