சூர்யாவின் மும்பை வீட்டில் இந்தி மொழியில் பெயரா ? புதிய சர்ச்சையை கிளப்பிய நெட்டிசன்கள். உண்மை இது தான்.

0
1045
- Advertisement -

தன்னுடைய புதிய வீட்டிற்கு சூர்யா இந்தியில் பெயர் வைத்திருக்கும் பலகையின் புகைப்படம் சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. சமீப காலமாக நடிகர் சூர்யாவின் குடும்பத்தினர் அவ்வப்போது சர்ச்சைகளில் சிக்கி வருகின்றனர். சிவகுமாரின் செல்ஃபீ பிரச்சனை துவங்கி சமீபத்தில் சூர்யாவின் neet அறிக்கை வரை பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி வருகிறது சிவகுமாரின் குடும்பம். அதே போல தஞ்சை பெரிய கோவில் விவகாரம், பொன்மகள் வந்தால் Ott பிரச்சனை என்று ஜோதிகா கூட சில சர்ச்சைகளில் சிக்கி இருந்தார்.

-விளம்பரம்-

கடந்த சில தினங்களுக்கு முன்னர் கூட கீழடி அருங்காட்சியகத்திற்கு சூர்யாவின் குடும்பத்தினர் சென்ற போது பொதுமக்கள் மற்றும் மாணவிகள் வெயிலில் வெளியில் காத்துக்கொண்டு இருந்தது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. இப்படி ஒரு நிலையில் தற்போது சூர்யா அடுத்த சர்ச்சையில் சிக்கி இருக்கிறார். அதாவது, நடிகர் சூர்யா அவர்கள் தன்னுடைய மனைவி ஜோதிகா, மகள் தியா, மகன் தேவ் ஆகியோருடன் மும்பையில் குடியேறி இருக்கிறார் என்று அதற்கான புகைப்படங்கள் எல்லாம் சோசியல் மீடியாவில் வெளியாகி இருந்தது.

- Advertisement -

சூர்யாவின் மும்பை வீடு :

அப்போது சூர்யா தன்னுடைய குழந்தைகளை எல்லாம் புகைப்படம் எடுக்க வேண்டாம் என்று பத்திரிகையாளிடம் கோரிக்கை வைத்திருந்தது இணையத்தில் வைரலாகி இருந்தது. மேலும், சூர்யா வாங்கி இருக்கும் வீட்டின் விலை 70 கோடி என்று கூறப்படுகிறது. இவ்வளவு கோடியில் சூர்யா வீடு வாங்கியதற்கு காரணம், தன்னுடைய அம்மா, அப்பா, தம்பி ஆகியோர் மும்பைக்கு சென்றால் அவர்களும் தங்குவதற்கு வசதியாக இருப்பதற்காக இந்த வீடு அதிக செலவில் சூர்யா வாங்கியதாக கூறப்படுகிறது.

சூர்யா வீட்டின் பெயர் பலகை:

தன்னுடைய மகளின் படிப்புக்காக சூர்யா மும்பையில் குடியேறியதாக கூறப்படுகிறது. இந்நிலையில் தன்னுடைய புதிய வீட்டிற்கு சூர்யா இந்தியில் பெயர் வைத்திருக்கும் பலகை புகைப்படம் சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. சூர்யா புதிதாக வாங்கிய வீட்டின் முன்பு நின்று எடுத்த புகைப்படத்தில் பெயர் பலகை இந்தியில் இருக்கிறது. இதை பார்த்த நெட்டிஷன்கள் பலரும், உங்களுடைய பிள்ளைகள் மட்டும் அனைத்து மொழிகளை கற்றுக் கொள்ள வேண்டும். ஆனால், தமிழ்நாட்டு பிள்ளைகள் பிற மொழியை கற்க கூடாதா? என்று கூறி சூர்யா வீட்டின் முன்பு இந்தியில் இருக்கும் பெயர் பலகை புகைப்படத்தை சோசியல் மீடியாவில் வைரல் ஆக்கி வருகிறார்கள்.

-விளம்பரம்-

கண்டனம் தெரிவித்த நெட்டிசன்கள்:

மேலும், இது குறித்து பலருமே கன்னடம் தெரிவித்துள்ளார்கள். இந்த நிலையில் சூர்யா மும்பையில் வீடு வாங்கி இருக்கிறார் என்று வந்த செய்திகள் எல்லாமே வதந்தி என்று கூறப்படுகிறது. இது குறித்து சூர்யா சமூக வலைத்தளத்தில் எந்த ஒரு புகைப்படத்தையும் பதிவிடவில்லை. அது மட்டும் இல்லாமல் சூர்யா நின்றிருந்த இடத்தினை கூகுளில் ஆய்வு செய்தபோது இது மும்பையின் பாந்திரா நகரில் உள்ள பிரபலமான மிஜு என்ற ஜப்பானிய உணவகம் என்று தெரியப்படுகிறது.

சூர்யா சர்ச்சை குறித்த விவரம்:

அதோடு சூர்யா கடந்த மார்ச் மாதம் இந்த மிஜு உணவகத்திற்கு சூர்யா தன்னுடைய குடும்பத்திருடன் சென்று இருக்கிறார். அப்போது உணவகத்தில் இருந்து வெளியே வரும்போதுதான் அவரை மீடியாக்கள் போட்டோ எடுத்து சோசியல் மீடியாவில் வெளியிட்டு இருக்கிறது. அது மட்டும் இல்லாமல் நடிகர் சூர்யாவிற்கு பின்னால் உள்ள பெயர் பெயரை அந்த உணவகத்தின் பெயர் என்பது தெரிய வந்திருக்கிறது. ஆகவே, சூர்யா மும்பையில் வீடு வாங்கி இருக்கிறார் என்றும் அந்த வீட்டிற்கு ஹிந்தியில் பெயர் வைத்திருக்கிறார் என்றும் வரும் செய்திகள் எல்லாம் உண்மையில்லை வதந்தி என்று தெள்ளத் தெளிவாக இருக்கிறது.

Advertisement