அரண்மனை வீட்டில் பி வாசு பார்த்த காட்சி, குஷ்பூவை நிராகரித்த தயாரிப்பாளர்கள் – 32 ஆண்டுகளை கடந்த சின்னத்தம்பி படத்தின் அறியாத தகவல்கள்.

0
768
Chinnathambi
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான இயக்குனர்களில் ஒருவர் பி. வாசு என்பதில் எந்த ஒரு ஐயமும் இல்லை. அந்த அளவிற்கு பி. வாசு வணிகரீதியான வெற்றிப் படங்களைக் கொடுத்தவர். இவர் முதன் முதலாக பன்னீர் புஷ்பங்கள் என்ற படத்தின் மூலம் தான் சினிமா உலகில் இயக்குனராக அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து இவர் பல சூப்பர் ஹிட் படங்களை இயக்கியுள்ளார். தற்போது இவர் லாரன்ஸ்ஸை வைத்து சந்திரமுகி 2 படத்தை இயக்கி வருகிறார். பி வாசு இயக்கிய பல படங்கள் சூப்பர் ஹிட் அடித்து இருக்கிறது, அதில் சின்னத்தம்பி திரைப்படம் இவரது வாழ்வில் ஒரு மைல்கல் என்று தான் சொல்ல வேண்டும்.

-விளம்பரம்-

1991ஆம் ஆண்டு எப்ரல் 12 ஆம் தேதி இந்த படம் வெளியாகி இருந்தது. இந்த படத்தை பி வாசு எடுக்க உந்துதலாக ஒரு உண்மை சம்பவமும் இருக்கிறது. ஒருமுறை பி வாசு படப்பிடிப்புக்கு சென்றிருந்தபோது அங்கே ஒரு அரண்மனை வீடு இருந்துள்ளது அந்த அரண்மனையின் ராஜா படப்பிடிப்பை காண வந்திருக்கிறார். அப்போது அந்த அரண்மனையில் இருந்து ஜன்னல் வழியாக ஒரு பெண்ணின் குரல் கேட்டிருக்கிறது.

- Advertisement -

உடனே அந்த ராஜா அந்த ஜன்னல் பக்கத்தில் சென்று ஏதோ சொல்ல அந்த பெண் வெளியில் வரவே இல்லை. பிறகு இது குறித்து அங்கிருந்தவர்களிடம் பி வாசு விசாரித்திருக்கிறார்.அப்போது வெளி ஆட்கள் அவர்கள் வெளி ஆட்கள் முன்பு ராஜா வீட்டுப் பெண்கள் யாரும் வர மாட்டார்கள் என்று கூறி இருக்கிறார்கள். பின்னர் வேறு ஒரு இடத்திற்கு படப்பிடிப்பிற்காக சென்றிருந்தபோது அங்கே தனியாக ஒரு பாதை இருந்துள்ளது.

இது குறித்து விசாரிக்கையில் ‘ராஜா வீட்டு பெண்கள் அனைவரும் இந்த வழியாகத்தான் கோயிலுக்கு செல்வார்கள். அவர்கள் வந்து சாமி கும்பிட்ட பின்னர் தான் மற்றவர்கள் செல்வார்கள் என்று சொன்னார்கள். இதை எல்லாம் கேட்டு ஆச்சரியப்பட்ட விவாசு பின்னர் இதை மையமாக வைத்து தான் சின்னத்தம்பி படத்தை இயக்கியிருக்கிறார். அதேபோல நடிகன் படத்தில் ஒரு காட்சியில் குஷ்பூ சேலை அணிந்து அடக்க ஒடுக்கமாக வரும் ஒரு காட்சியை பார்த்த பின்பு தான் குஷ்பூ தான் சின்னத்தம்பியின் நாயகி என்று முடிவெடுத்தார் பி வாசு.

-விளம்பரம்-

ஆனால், குஷ்பு இருக்கு அப்போது தமிழ் சரியாக வராது என்பதாலும், குஷ்பூ, பிரபு ஜோடியாக நடிக்க உடன்பாடு இல்லை என்பதாலும் தயாரிப்பாளர்கள் குஷ்பூ இந்த படத்தில் நடிக்க சம்மதம் தெரிவிக்கவில்லை. ஆனால் பி வாசு குஷ்பூ நடிக்கவில்லை என்றால் இந்த படத்தையே நான் எடுக்க மாட்டேன் என்று கூறியிருக்கிறார்.ஆனால் பி வாசு நினைத்ததை போலவே இந்த படத்தின் மிகப்பெரிய வெற்றிக்கு காரணமாக இருந்தவர் புஷ்புதான்.

இந்த படத்தில் இடம் பெற்ற அரைச்ச சந்தனம் பாடலில் வரும் குஷ்புவை மட்டும் காண தினமும் ரசிகர்கள் வந்து சென்றார்கள் அதேபோல இந்த படத்திற்கு பின் தான் குஷ்புவிற்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உருவாகி இருந்தார்கள். இந்த படம் வெளியான பின்னர் தான் குஷ்புவிற்கு கோவில் கட்டினார்கள். அதே போல ஞாயிற்றுக்கிழமை குஷ்பூவை பார்ப்பதற்காகவே பேருந்துகளில் ரசிகர்கள் ஆயிரக்கணக்கில் வந்து சென்றார்கள். மேலும், இந்த படத்தை பார்த்துவிட்டு புஷ்புவிற்கு ரசிகர் ஒருவர் திருமணம் செய்தால் உங்களைத்தான் திருமணம் செய்வேன் என்று ரத்தத்தில் கூட கடிதம் எழுதி அனுப்பியிருந்தார்.

இந்த திரைப்படம் 9 திரையரங்குகளில் 356 நாட்கள் ஓடி சாதனை படைத்தது. அதுமட்டுமல்லாது நாட்களுக்கு மேல் வெற்றிகரமாக ஓடியது. இந்த படத்தில் நடித்த பிரபு மற்றும் குஷ்பூ ஆகிய இருவருக்கும் இந்த படத்திற்கு பின்னர் இப்படி ஒரு வெற்றி இன்று வரை கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி ஒரு நிலையில் இந்த திரைப்படம் வெளியாகி இன்றோடு 32 ஆண்டுகளை கடந்து இருக்கிறது.

Advertisement