ஆஹா ஓஹோ என்று புகழும் விமர்சகர்கள் மத்தியில் ஜெயிலர் படத்தின் நிறை குறைகளை சொன்ன டாப் 10 சுரேஷ்.

0
2029
Jailer
- Advertisement -

சன் டிவி தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகி மக்களிடையே அதிக வரவேற்பைப் பெற்ற ஒரு நிகழ்ச்சி தான் “டாப் 10 மூவிஸ்”. இந்த நிகழ்ச்சியை சுரேஷ்குமார். இவர் சன் டிவியில் நடத்தி வந்த டாப் 10 மூவிஸ் நிகழ்ச்சியை ஆல் டைம் ஃபேவரட் ஷோ என்று கூட சொல்லலாம். இந்த நிகழ்ச்சியில் படத்தின் விமர்சனத்தை தொகுத்து வழங்கிய பிறகு தான் இணையங்களில் பரவும். மேலும், 22 வருடங்களுக்கும் மேலாக இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்தார் சுரேஷ்.

-விளம்பரம்-

இவர் கிட்டத்தட்ட 1500க்கும் மேற்பட்ட எபிசோடுகள் தொகுத்து வழங்கி இருக்கிறார். 90 களில் பேவரைட் தொகுப்பாளர் என்றால் இவரை தான் அனைவரும் சொல்வார்கள். அந்த அளவிற்கு ஒரு ரசிகர் பட்டாளத்தை கொண்டவர் சுரேஷ். அப்போதெல்லாம் படங்கள் வெளியானால் படம் வெளியாகி ஒரு வாரம் கழித்து இவர் சொல்லும் விமர்சனங்களை கண்ட பின்னர் தான் பெரும்பாலான ரசிகர்கள் தியேட்டருக்கே செல்வார்கள்.

- Advertisement -

அந்த அளவிற்கு இவரது விமர்சனங்கள் நடுநிலையாக இருந்தது. ஆனால், சில பல காரணங்களால் டாப் 10 நிகழ்ச்சி திடீரென்று நிறுத்தப்பட்டது. இப்போதோ ஒரு படம் வெளியான உடன் இடைவேளையில் எல்லாம் அந்த படத்தின் விமர்சனத்தை போட்டு விடுகின்றனர். அதே போல விமர்சனம் என்ற பெயரில் ப்ளூ சட்டை மாறன் படங்களை விமர்சிப்பதை விட படத்தில் நடித்த நடிகர்களை உருவக் கேலி எல்லாம் செய்து வருகிறார். இதனால் விமர்சகர்கள் மீது இருந்த நம்பிக்கையே குறைந்துவிட்டது.

இடையில் டாப் 10 சுரேஷ் நெட்ப்ளிக்ஸ் டாப் 10 என்ற நிகழ்ச்சியை நெட்ப்ளிக்ஸ்க்காக தொகுத்து வழங்கி வந்தார். இவரது இந்த நிகழ்ச்சியை கண்ட ரசிகர்கள் பலரும் மீண்டும் நீங்கள் விமர்சனம் செய்ய வரவேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். இதனை தொடர்ந்து தற்போது படங்களை விமர்சனம் செய்து வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் ரஜினி நடிப்பில் வெளியான ஜெயிலர் படத்தை விமர்சனம் செய்து இருக்கிறார்.

-விளம்பரம்-

ஜெயிலர் திரைப்படம் வெளியானதில் இருந்து இந்த படத்தை பெரும்பாலான விமர்சகர்கள் ஆஹஓஹோ என்று புகழ்ந்து தள்ளி வருகிறார்களே தவிர பெரும்பாலான தமிழ் விமர்சனங்கள் அனைவருமே இந்த படத்தில் எந்த குறையும் இல்லாதது போல விமர்சனம் செய்தனர். ஆனால் டாப் டென் சுரேஷ் இந்த படத்தில் இருந்த நிறைகளை சொன்னதோடு குறைகளையும் பாயிண்ட் பாயிண்டாக சுட்டிக்காட்டி இருக்கிறார்.

இந்த வீடியோவை சமூக வலைதளத்தில் பகிரும் ரசிகர்கள் பலரும் விமர்சனம் என்றால் இப்படி இருக்க வேண்டும் என்று பாராட்டி வருகிறார்கள். ஏற்கனவே பேட்டி ஒன்றில் பேசிய சுரேஷ் ஒவ்வொரு விமர்சகரும் திரைத்துறையை ஏதவது ஒரு தொழில்நுட்பத்தை ஆழமாக கற்றுக் கொள்ள வேண்டும். அதை விட்டுவிட்டுட்டு சும்மா படத்தை பார்த்து விட்டு விமர்சனம் சொல்வதை தவிர்த்து, அந்த படத்தின் கதையா கருத்தை எடுத்து இந்த மாதிரியான படம் விருப்பம் உள்ளவர்கள் போகலாம் என்று சொல்லவேண்டும். அதை தவிர்த்து வாய்க்கு வந்ததை முன் கேமெரா வைத்து கொண்டு மொக்கை என்று சொல்லி மட்டம் தட்ட கூடாது. அதனை பார்வையாளர்கள் நம்பவும் மாட்டார்கள்’ என்று கூறி இருந்தார்.

Advertisement