அண்ணாமலை பாஜக தலைவராக இருக்கும் வரை அதிமுக கூட்டணிக்கு ஒரு தொகுதியில் கூட வெற்றி பெற முடியாது – எஸ்.வி.சேகர்.

0
1415
- Advertisement -

அண்ணாமலை தமிழகத்தின் தலைவராக இருக்கும் வரை தமிழகத்தில் பாஜக வெற்றி பெறாது என்று எஸ்வி சேகர் கூறினார். சில நாட்களுக்கு முன்பு 2018 ஆம் ஆண்டு ஏப்ரல் 18 அன்று முகநூல் பக்கத்தில் பெண் பத்திரிக்கையாளர் குறித்து அவதூறாக கருத்துக்களை ஷேர் செய்ததால் அவர் கைது செய்யப்பட்டார். இது குறித்து பத்திரிக்கையாளர்கள் அழைத்த புகாரின் பேரில் இவர் மீது பல்வேறு சட்டங்களில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கானது எம்பி எம்எல்ஏ கலை விசாரிக்கும் சிறப்பு அமர்வுக்கு மாற்றப்பட்டது.

-விளம்பரம்-

எஸ். வி சேகர்:

எஸ்வி சேகர் 1950 டிசம்பர் 26 ஆம் ஆண்டு பிறந்தார். தமிழ் சினிமாவில் நீங்கா இடம் பிடித்த நாடகத் துறையிலும் தனது கருத்துக்களை தெரிவித்து வந்தார். இவருடைய நாடகம் வசனங்கள் நகைச்சுவையாக அறியப்பட்டாலும் அவற்றை நெருடலான இரட்டை அர்த்தங்களும் விமர்சிக்கப்படுவது உண்டு. இவர் மயிலாப்பூர் தொகுதியில் அதிமுக சார்பில் சட்டமன்ற உறுப்பினராக இருந்து உள்ளார். தற்பொழுது பாஜகவில் முக்கிய பிரமுகராக இருந்து வருகிறார்.

- Advertisement -

ஆனால் இவருக்கும் பாஜக தமிழக மாநில தலைவர் அண்ணாமலைக்கும் இடையே பிரச்சினைகள் நிறைய ஏற்பட்டுள்ளது. பெண் பத்திரிகையாளர் கருத்துக்களை முகநூலில்  பதிந்ததற்காக இவர் மீது வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது இந்த வழக்கில் முன் ஜாமீன் கேட்ட அவருக்கு மே 2018 அன்று மெட்ராஸ் உயர்நீதிமன்றத்தில் அவருக்கு முன் ஜாமின் மறுத்தது. அதன் பின்பு பல்வேறு நிகழ்ச்சிகளில் போலீசார் பாதுகாப்புடன் நிகழ்ச்சிகளில் காணப்பட்டார் பின்னர் அவருக்கு 2018 ஜூன் மாதம் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.

அண்ணாமலை குறித்து பேசியது:

இந்தியாவில் ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது இந்தியாவில் சாத்தியமில்லை என்பது தான் இனி தெரிய வரும். அவ்வாறு நடைபெற்றால் ஆட்கள் பற்றாக்குறை ஏற்படும். இவ்வாறு ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது 2026 ஆண்டு சாத்தியமில்லாத ஒன்று. அண்ணாமலை பிரமினர்களுக்கு எதிராக செயல் பட்டு வருகிறார். அண்ணாமலை அதிமுக கூட்டணியில் இருக்கும் வரை அந்த கூட்டணி வெற்றி பெற வாய்ப்பு இல்லை. பாஜக தலைவராக அண்ணாமலை இருந்தால் பாஜக ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறாது. காசு கொடுத்து, பிரியாணி கொடுத்து தினமும் 300 பேர் பஸ் ஸ்டாண்ட் வரை நடப்பதால் என்ன மாற்றம் ஏற்படப் போகிறது?

-விளம்பரம்-

அண்ணாமலை தலைமையில் நாடாளுமன்ற தேர்தலில் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெற முடியாது. அண்ணாமலையின் தலைமையின் கீழ் நான் இருக்க மாட்டேன். அதை மோடியே வந்து கேட்டாலும் சொல்லிவிடுவேன். அண்ணாமலை போன்றவர்களின் தலைமையில் கீழ் இயங்குவது வீணானது. அவர் நின்ற சொந்த தொகுதியிலே அவரால் வெற்றி பெற முடியவில்லை. அவரும் சீமானும் ஒரே தொகுதியில் போட்டியிட்டால் சீமான் தான் அதிகமான வாக்குகளை பெறுவார். இந்தியாவிலே சிறந்த மாநிலம் தமிழ் நாடு தான். முதல்வரின் காலை உணவு திட்டம் நல்ல வரவேற்ப்பை பெற்றது என்று கூறினார்.              

Advertisement