பெண்ணை இடித்து சென்ற வாகனத்தை தட்டி கேட்ட Swiggy ஊழியரை தாக்கிய டிராபிக் போலீஸ் – கோவை மாநகர காவல் வெளியிட்ட அதிரடி அறிக்கை.

0
392
swiggy
- Advertisement -

கோயம்புத்தூரில் ஸ்விக்கி ஊழியரை போக்குவரத்து காவல் அதிகாரி தாக்கிய சம்பவம் தமிழ் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. கோயம்புத்தூரில் நீலம்பூர் பகுதி வழியாக பள்ளி பேருந்து ஒன்று சென்றது. அந்த பேருந்து அங்கு சென்று இருந்த ஒரு பெண்ணை இடித்துத் தள்ளி விட்டு நிற்காமல் சென்று இருக்கிறது. இதனால் அந்த பெண் பலத்த காயம் அடைந்து இருக்கிறார். இதை அந்த வழியாக சென்ற ஸ்விக்கி ஊழியர் மோகனசுந்தரம் பார்த்து அந்த பள்ளி வாகனத்தை துரத்தி சென்று நிறுத்திருக்கிறார்.

-விளம்பரம்-

அப்போது அவர் ஏன் இப்படி கூட நிற்காமல் வேகமாக போகிறீர்கள்? என்று விசாரிக்கிறார். இதை பார்த்த அந்தப் பகுதியில் இருந்த போக்குவரத்து காவலர் சதீஷ் என்ன? ஏது? என்று கூட விசாரிக்காமல் ஸ்விக்கி ஊழியரை பயங்கரமாக அடித்துக் தாக்கி இருக்கிறார். பின் உன்னால் தான் இந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பள்ளி வாகனத்தை நிறுத்தும் அளவிற்கு நீ பெரிய ஆளா? பள்ளி வாகனம் இடித்து விட்டு போனால் அதை தட்டி கேட்க நான் இருக்கிறேன்.

- Advertisement -

ஸ்விக்கி ஊழியரை தாக்கிய சம்பவம்:

நீ யார் அதை கேட்க? என்று சொல்லி ஸ்விக்கி ஊழியரை தாக்கி அவரிடமிருந்து போன், எஸ்டேட், பைக் கீ என எல்லாமே பிடுங்கி இருக்கிறார். இப்படி நடுரோட்டில் வைத்து ஸ்விக்கி ஊழியர் மோகனசுந்தரத்தை போக்குவரத்து காவல் அதிகாரி சதீஷ் தாக்கியிருக்கும் சம்பவம் தற்போது சோசியல் மீடியாவில் படு வைரலாகி வருகிறது. மேலும், இது தொடர்பாக மோகனசுந்தரம் சார்பாக உடனடியாக கோவை மாநகர காவல் நிலையத்தில் போக்குவரத்து காவல் அதிகாரி சதீஷ் மீது புகார் அளிக்கப்பட்டது.

புகார் அளித்த ஸ்விக்கி ஊழியர்:

இந்த புகாரை தொடர்ந்து காவலர் சதீஸ் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு இருக்கிறார். மேலும், அவருக்கு எதிராக வழக்கு பதிவு செய்யபட்டு கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதுமட்டும் இல்லாமல் இதுதொடர்பாக ஸ்விக்கி ஊழியர் மோகனசுந்தரம் கூறியிருப்பது, நான் ஸ்விக்கியில் டெலிவரி பாயாக பணியாற்றி வருகிறேன். வெள்ளிக்கிழமை மாலை டெலிவரி பணியில் இருந்தேன். அப்போது ஃபன் மால் அருகே நேஷனல் மாடல் பள்ளி வாகனம் ஒரு பெண் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றது.

-விளம்பரம்-

ஸ்விக்கி ஊழியர் அளித்த பேட்டி:

அந்த வண்டியை நிறுத்தி நான் நியாயம் கேட்டேன். உடனே அங்கிருந்த போக்குவரத்து காவலர் சதீஷ் என்னை என்ன? ஏது? என்று கூட விசாரிக்காமல் என்னை தாக்கி என்னிடம் இருந்த செல்போன், பைக் கீ செயின் உள்ளிட்ட எல்லாத்தையும் பிடுங்கி சென்று விட்டார். என்னிடம் பணம் கூட இல்லை. அதனால் என்னால் மருத்துவமனைக்கு செல்ல முடியவில்லை. நான் பிஎஸ்சி பட்டதாரி. நான் பிசினஸ் நடத்தி வருகிறேன்.

வைரலாகும் வீடியோ:

ஆனால், கொரோனாவால் வீட்டு வாடகை கட்ட முடியாமல் போனதால் பார்ட் டைமாக ஸ்விக்கியில் வேலை செய்கிறேன். எங்களுக்கு நியாயம் கிடையாதா? என்று இவர் கூறியிருக்கும் வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இந்த சம்பவம் தற்போது தமிழ்நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக அரசாங்கமும் நடவடிக்கை எடுத்து வருகிறது.

Advertisement