மெர்சலில் நீங்கள் பார்க்க தவறவிட்ட சில விஷயங்கள் – அட்லீயின் ட்விஸ்ட் !

0
15001
- Advertisement -

இந்தப் படத்தில் அப்பா விஜய்யாக வரும் வெற்றிமாறன் கதாபாத்திரத்திலும் டாக்டர் விஜய்யாக வரும் மாறன் கதாபாத்திரத்திலும் என்னென்ன ஒற்றுமைகள் இருக்கிறன என்பதைப் பார்க்கலாம்.
vijay டாக்டர் மாறன், தனது 5 வயதில் தலையில் அடிபட்டதால் தன் குழந்தைப்பருவ நினைவுகளை மறந்துவிட்டதாக படத்தில் சொல்லியிருப்பார். அவர் வளர்ந்து 30 வருடங்களுக்கு பிறகுதான் பழைய விஷயங்களை வடிவேலு அவருக்கு நினைவுப்படுத்துவார். ஆனால், தன் நினைவுகள் அவருக்கு தெரியாமல் இருக்கும்போதே தன் அப்பாவிடம் இருந்த சில குணாதிசியங்கள் இவருக்கும் இருக்கும். அதை சில இடங்களில் தெளிவாக தெரிவது போன்றும், சில இடங்களில் எளிதில் கண்டுபிடிக்க முடியாதவாறும் வைத்திருக்கிறார் அட்லி. அவை என்னென்ன என்பதைப் பார்க்கலாம்.

-விளம்பரம்-

வேஷ்டி ஸ்டைல்:

- Advertisement -

மெர்சல் படத்தின் டீசருக்கு பிறகு ப்ரோமோ வீடியோக்களை படக்குழு வெளியிட்டது. அதில் ப்ளாஷ்பேக்கில் வரும் விஜய் வேஷ்டியை வித்தியாசமாக மடித்து கட்டுவார். அதே ஸ்டைலில்தான் டாக்டர் மாறனும் தனது ஓபனிங் சீனில் வேஷ்டியை மடித்து கட்டுவார். இந்த ஒற்றுமையை படத்தில் ஓபனாகவே வைத்திருப்பார் அட்லி.
vijay புகழ்ச்சி:

ப்ளாஷ்பேக்கில் வரும் விஜய் கோவில் கட்டுவதற்கு பதிலாக மருத்துவமனையை கட்டுவார். அந்த மருத்துவமனையின் திறப்பு விழாவின் போது கூட்டத்தோடு கூட்டமா நிற்று கொண்டிருக்கும் விஜய்யை நித்யாமேனன் ’முன்னாடி வாங்க’ என்று அழைப்பார். அதற்கு, ‘ஏ ஐஸு… எதாவது பிரச்னைன்னா சொல்லு முன்னாடி வந்து நிக்கிறேன். நமக்கு இந்த மாலை, மரியாதை எல்லாம் செட்டாகாது ஐஸு’ என்பார்.

-விளம்பரம்-

இதையும் படிங்க: மெர்சல் படம் பிடிக்கவில்லை என்றால் பார்க்காதீர்கள் !-நீதிபதியின் சரமாரி கேள்விகள் !

அதேபோல் வெளிநாட்டில் விருது வாங்கிய கையோடு அம்மாவிடம் வீடியோ காலில் பேசும் விஜய்யும், தனக்காக ப்ளக்ஸ் வைக்கிறேன் என்று சொல்லும் இளைஞரிடம், ‘நண்பா… அதெல்லாம் வேணாம் நண்பா… அந்த காசை வச்சு நாலு, அஞ்சு பேருக்கு மாத்திரை, மருந்து வாங்கித்தரலாம்’ என்பார். அப்பா, பையன் இருவருக்கும் புகழ்ச்சி பிடிக்காது என்பதே இதன் குறியீடு.
vijay இலவச மருத்துவம்:

தன் ஊர் மக்களுக்கு இலவச மருத்துவம் வேண்டும் என்பதையே வெற்றிமாறன் கதாபாத்திரத்தில் வரும் விஜய்யும் சொல்வார், டாக்டராக வரும் மாறன் விஜய்யும் சொல்வார். அதுமட்டுமில்லாமல், மருத்துவமனை திறப்புவிழாவில் பேசும் விஜய்யும் பச்சை நிற சட்டைதான் அணிந்திருப்பார். வெளிநாட்டில் டாக்டர் விஜய் விருது வாங்கும் போதும் பச்சை சட்டைதான் அணிந்திருப்பார். இருவர் பேசும் விஷயங்களும் ஒரே நோக்கத்தை கொண்டதாகத்தான் இருக்கும். இந்த இரு கதாபாத்திரத்தின் காஸ்ட்யூம்ஸும் பல இடங்களில் ஒரே மாதிரிதான் இருக்கும். ஆனால், விஜய் படத்தில் இத்தனை குறியீடுகள் வைத்ததற்காகவே அட்லியை பாராட்டலாம் பாஸ்.

Advertisement