கையில் கோசமான தீக்காயம்.! டாப்ஸியின் நிலையை கண்டு உச்சு கொட்டிய ரசிகர்கள்.!

0
464

தமிழ் சினிமாவில் தனுஷ் நடித்த ஆடுகளம் படம் மூலம் அறிமுகமானவர் நடிகை டாப்சி அறிமுக படத்தில் சிறப்பான வரவேற்பினை பெற்ற இவர், அடுத்து நடித்த படங்கள் வரிசையாக தோல்வி அடைய இவருக்கு தமிழ் சினிமாவில் வாய்ப்பு மங்க தொடங்கியது.

This image has an empty alt attribute; its file name is image-15.png

தமிழில் லீட் நாயகியாக வலம் வர முடியவில்லை என்றாலும், இந்தியில் இவர் நடித்த, ’பிங்க்’, ’நாம் ஷபானா’ படங்கள் அவரை கவனிக்க வைத்தன. இதையடுத்து மேலும் பல இந்தி படங்களில் நடித்தார். இப்போது, தட்கா, மிஷன் மங்கள், ஷாந்த் கி ஆங்க் உட்பட சில படங்களில் நடித்து வருகிறார்.

- Advertisement -

சமீபத்தில் நடிகை டாப்ஸி, கையில் தீக்காயத்துடன், காலில் கட்டுடன் வீல் சேரில் அமர்ந்திருக்கும் புகைப்படம் ஒன்றை தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்தார். இந்த புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் அனைவரும் டாப்ஸியிடம் என்னாச்சு என்று அதிர்ச்சியாக கேட்டு வந்தனர்.

ஆனால், இந்த புகைப்படம் டாப்ஸி நடித்துள்ள ‘கேம் ஓவர் ‘ திரைப்படத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படம் என்று பின்னர் தெரியவந்தது. நயன்தாரா நடித்த `மாயா’ படத்தை இயக்கிய அஸ்வின் சரவணன் தான் இந்த படத்தை இயக்கியுள்ளார்.

தனது முதல் படத்திலேயே தமிழ் சினிமா ரசிகர்கள் பேசப்பட்ட அவர், அடுத்து `கேம் ஓவர்’ என்ற படத்தை இயக்கி முடித்துள்ளார். முதல் படத்தில் நயன்தாராவை இயக்கியவர், இந்தப் படத்தில் டாப்ஸியை இயக்கியுள்ளார். `இறுதிச் சுற்று’, `விக்ரம் வேதா’, `தமிழ் படம்-2′ ஆகிய படங்களைத் தயாரித்த ஒய் நாட் ஸ்டூடியோஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது. 

தமிழ், தெலுங்கு பைலிங்க்குவல் படமாகத் தயாராகியுள்ள இப்படத்தை இந்தியில் பிரபல பாலிவுட் இயக்குநர் அனுராக் காஷ்யப் விநியோகம் செய்யவுள்ளார். 90 களில் பிரபலமாக இருந்த சிப் கேம்களை அடிப்படையாக வைத்து எடிக்கப்பட்ட இந்தப் படத்தை த்ரில்லராக உருவாக்கியிருக்கிறார் இயக்குநர்.