மருத்துவமனையில் நடந்த கொடுமை.! ராஜசேகரின் இறப்பின் காரணத்தை உடைத்த மனைவி.!

0
3592
rajasekar

தமிழ்நாட்டில் பிரபல நடிகராகவும், இயக்குனராகவும் பணிபுரிந்த ராஜசேகர் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் உடல் நல குறைபாட்டால் மருத்துவமனையில் சிகிச்சை இன்றி உயிரிழந்தார். ஆனால், அவர் பணம் இல்லாமல் உயிர் இழந்திருக்கிறார் என்ற செய்தி மக்களின் மனதில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. நடிகர்கள் என்றாலே அவர்களிடம் இல்லாத பணமா??? என்ற மக்கள் மனதில் எழும் கேள்விக்கு, அவர்களுக்கும் பணம் பற்றாக்குறை பிரச்சினைகள் ஏற்படும் என்பதை இந்த நிகழ்வு மூலம் ஒரு சில மக்கள் உணர்ந்திருப்பார்கள்.

Shankara Pandian

ராஜசேகர் இந்திய தமிழ் திரைப்பட உலகில் இயக்குனராகவும், திரைப்பட நடிகராகவும், சின்னத்திரை நடிகராகவும் பணிபுரிந்தார். அதுமட்டுமில்லாமல் திரைக்கதை எழுத்தாளராகவும், ஒளிப்பதிவாளராகவும் கூட பணியாற்றியுள்ளார். இவர் சென்னை திரைப்படக் கல்லூரியில் ஒளிப்பதிவு படிப்பு குறித்து பயிற்சி பெற்றார்.முதலில் 1979ல் “குடிசை” திரைப்படத்தில் ஆசிர்வாதம் என்பவருடன் இணைந்து பணியாற்றினார். அதுமட்டுமில்லாமல் அவருடன் இணைந்து நிறைய திரைப்படங்களையும் இயக்கியுள்ளார்.அதில் “பாலைவனச்சோலை என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரைப்பட உலகில் மிகவும் பிரபலமானார்..பல பேருக்கு ராஜசேகரை இயக்குனராக தெரியாத நிலையில் பிரபல நடிகராக தான் அனைவருக்கும் தெரியும்.ராஜசேகரின் “இது ஒரு பொன்மாலைப் பொழுது” என்ற பாடல் மூலம் ஏராளமான ரசிகர் மனதில் இடம் பெற்றார். அவர் இளம்பருவத்தில் நிறைய படங்களில் நடித்தும் , இயக்கியும் பல விருதுகளையும் சாதனைகளையும் பெற்றுள்ளார்.

இதையும் பாருங்க : தங்கையை லாஸ்லியாவுடன் ஒப்பிட்ட முகென்.! முகம் சுழித்த தங்கை.! இதை கவனிசீங்களா.!

- Advertisement -

அதுமட்டுமில்லாமல் அவர் வயதான நிலையில்கூட சினிமாத்துறையில் நடிப்பதை விடவில்லை. சின்னத்திரை சீரியல்களில் நடித்து வந்திருந்தார். விஜய் டிவியில் ஒளிபரப்பான தொடர்களில் பிரபலமான ‘சரவணன் மீனாட்சி’ சீரியல் அவர் நடித்து அதிக ரசிகர்களின் கவனத்திற்கு ஈர்க்கப்பட்டார். இதன் மூலம் அவருக்கு பேரும் புகழும் கிடைத்தது. மேலும் சில வாரங்களுக்கு முன் அவருக்கு மூச்சு திணறல் காரணமாக சென்னையில் உள்ள ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்தார்.ஆனால் பணம் இல்லாத காரணத்தினால் இவருக்கு மருத்துவர்கள் சில தினங்களுக்கு முன்பு சிகிச்சை அளிக்க மறுத்துவிட்டனர். மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்தார். இவரின் இறப்பு ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஆழ்த்தியது.தமிழ் திரைப்பட உலகில் இயக்குனராகவும், பிரபலமான நடிகராகவும் வலம் வந்த ராஜசேகர் இன்று காலமானார்.

Image result for serial actor rajasekar

ராஜசேகரின் இறப்பு குறித்து அவரின் இரண்டாவது மனைவி தாராவிடம் செய்தியாளர்கள் கேட்டபோது, அவர் தானாக இறக்கவில்லை எங்களிடம் பணம் இல்லை என்று சொல்லியதால் மருத்துவர்கள் சிகிச்சை அளிக்காமல் அலட்சியமாக இருந்தார்கள். கடைசி நிமிடங்களில் சீரியல் இயக்குனர் விக்ரமாதித்தன் தான் பணம் கட்டினார்.அப்படி பணம் கட்டியும் சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டார். பணம் கட்ட தாமதமானதால் மருத்துவர்கள் சிகிச்சை அளிக்கவில்லை என்று மனவேதனையுடன் கூறினார்.

மேலும், ராஜசேகருக்கு கடைசி ஆசை ஒன்று இறப்பதற்குள் சொந்த வீட்டில் வாழ வேண்டும் என்ற அவரது ஆசை நிறைவேறாமலேயே இறந்து விட்டார். நாங்கள் இப்போதுதான் பிளாட் ஒன்று வாங்கினோம். அதில் அவருடைய பாதம் ஒரு நாள் கூட அந்த வீட்டில் படவில்லை. வீட்டிற்கு செல்வதற்கு முன்னால் இறந்துவிட்டார் என்ற வருத்தமான செய்தி கூறி கதறி அழுதார். இந்திய தமிழ் சினிமாவில் பிரபல நடிகருமான இயக்குனருமான ராஜசேகரிடம் கடைசி நேரத்தில் அவருடைய சிகிச்சைக்குப் பணம் இல்லாமல் உயிரிழந்த தகவல் வைரலாக சமூக வலைதளங்களில் பரவியது. இந்த நிகழ்வு தமிழக மக்களிடம் பேரதிர்ச்சியிலும் சோகத்தையும் ஆழ்த்தியது.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் உங்களுக்கு பிடித்தமான போட்டியாளர்களை காப்பாற்ற நீங்கள் ஓட்டிங் சிஸ்டம் மூலம் வாக்களிலாம் அல்லது மிஸ்டு கால் மூலம் வாக்களிக்கலாம். நீங்கள் வாக்களிக்க ‘ BIGG BOSS TAMIL VOTE‘ இந்த லிங்கை கிளிக் செய்யவும்.

Advertisement