ஹீரோவாக சரவணா ஸ்டோர்ஸ் அண்ணாச்சி.. பட்ஜெட் மற்றும் கதாநாயகி யாருனு தெரிஞ்சா ஆடி போயிடுவீங்க..

0
65167
arul-annachi
- Advertisement -

பேஸ்டு பேஸ்டு பேஸ்டு என்று அணைத்து தொலைக்காட்சிகளிலும் தனது கடைக்கான விளம்பரத்தில் கலர் கலரான ஆடைகளை அணிந்து கொண்டு தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளான ஸ்னேகா துவங்கி தற்போது இருக்கும் ஹன்சிகா வரை அனைவருடனும் இணைந்து விளம்பரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பெரும் பிரபலமடைந்துள்ளார் பிரபல கடையின் குட்டி முதலாளி அருள். தமிழகத்தில் பல்வேறு நகரங்களில் சரவணா ஸ்டோர்ஸ் கடைகள் இல்லாதா இடமே இல்லை. ஜவுளி முதல் வீட்டு உபயோக சாதனம் வரை பல கடைகளை வைத்திருக்கும் சரவணா ஸ்டோர்ஸ் அண்ணாச்சி தற்போது சினிமாவிலும் நுழைய இருக்கிறார் என்று செய்திகள் பரவி வந்து கொண்டு இருக்கிறது .

-விளம்பரம்-

தனது கடையின் விளம்பரத்திற்காக நடிக துவங்கிய அருள் அண்ணாச்சி பின்னர் தமிழ் சினிமா துறை நடத்திய நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார். அப்போது அவரிடம் எதார்தமாக நீங்கள் சினிமாவில் நடிப்பீர்களா என்று கேட்க அதனை சீரியஸாக எடுத்துக்கொண்டு சினிமாவில் நடித்தால் ஹீரோ தான் என்று களமிறப்பிகியுள்ளார் அருள். இவர் நடிக்க உள்ள படத்தை பிரபல சீரியலை இயக்கிய இரட்டை இயக்குநர்களான ஜேடி- ஜெர்ரி தான் இயக்கு கின்றனர். இந்த படத்தின் பட்ஜெட் மட்டும் 30 கோடி என்று கூறப்படுகிறது. முதல் படமே இத்தனை கோடி பட்ஜெடடா என்று கோலிவுட் வட்டாரத்தில் அனைவரும் வாயை பிளந்து வருகின்றனர்.

இதையும் பாருங்க : கையில் மோகனின் புகைப்படத்துடன் மோகனுக்காக பட வாய்ப்புகளை தேடிய காமெடி நடிகர்.. கைமாறாக மோகன் செய்த செயல்..

- Advertisement -

இது மட்டுமில்லை சரவணா ஸ்டோர்ஸ் அண்ணாச்சி நடிக்கும் படத்தில் அவருக்கு ஜோடியாக ஹன்சிகா நடிக்க இருப்பதாக சமூக வலைத்தளத்தில் ஏற்கனவே ஒரு செய்தி வைரலாக பரவி வந்தது. ஹன்ஷிகா ஏற்கனவே சரவணா ஸ்டோர்ஸ் விளம்பரத்தில் நடித்துள்ளதால் அவர் அருளுடன் இணைந்து நடிக்கிறார் என்ற செய்தி ரசிகர்களால் நம்பபட்டது. ஆனால், இந்த செய்தி வெளியான சில மணி நேரத்திலேயே அண்ணாச்சியுடன் தான் நடிப்பதாக செய்தி பொய்யான செய்தி என்றும் என்னுடைய படம் குறித்து நானே அறிவிப்பேன் என்றும் ஹன்சிகா கோபமாக தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.

Image result for saravana stores owner and tamanna
Image result for saravana stores owner and tamanna

எனவே, ஹன்சிகா அண்ணாச்சிக்கு ஜோடி இல்லை என்பது உறுதியானது. சரி, அப்போது அண்ணாச்சிக்கு ஜோடியாக நடிக்க தமிழ் சினிமாவில் யாருமே இல்லையா என்று கேட்டதற்கு அண்ணாச்சியின் அடுத்த டார்கெட்டாக தமன்னா மாறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஹன்சிகாவை போலவே தமன்னாவும் அண்ணாச்சியுடன் இணைந்து விளம்பரத்தில் நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. எனவே, தமன்னாவை எப்படியாவது அண்ணாச்சியுடன் ஜோடி சேர சம்மதம் வாங்கிவிட வேண்டும் என்று படக்குழுவினர் தீவிரமாக பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனராம். அதே போல தமன்னாவும் இதுகுறித்து இதுவரை மறுப்பு தெரிவித்து எந்த ஒரு அறிக்கையையும் வெளியிடவில்லை.

-விளம்பரம்-

எனவே, தமன்னா இந்த படத்தில் நடிப்பார் என்று பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது. இது ஒருபுறம் இருக்க தற்போது அண்ணாச்சி நடிக்க போகும் படத்திற்காக படக்குழுவினர் படப்பிடிப்பு நடத்தப்படும் ஷூட்டிங் ஸ்பாட் களை தேடி அலைந்து கொண்டு இருக்கின்றனராம். இதனால் வெளிநாடு வெளிநாடாக சுற்றி வருகின்றனராம். படம் வெளியாகிறதோ இல்லையோ அண்ணாச்சியை வைத்து படக்குழுவினர் நன்றாக ஊர் சுற்றி வருகின்றனர் என்று சிலர் வயிற்றெரிச்சலில் இருந்து வருகின்றனராம். இப்படி அண்ணாச்சியின் படத்திற்கான பணிகள் படு மும்மரமாக நடைபெற்று வருகிறது. எனவே, கூடிய விரைவில் பர்ஸ்ட் லுக் வந்தாலும் ஆச்சரியபடுவதற்கு இல்லை.

Advertisement