TR அறிமுகம் செய்து வைத்த பிரபல நடிகர் திடீர் மரணம் – இவர் யாரென்று தெரிகிறதா?

0
504
- Advertisement -

டி ராஜேந்தர் பட நடிகர் கங்கா திடீரென்று மாரடைப்பால் இறந்திருக்கும் தகவல் தான் தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் பிரபலமான நடிகராக இருந்தவர் கங்கா. இவர் தமிழில் கடந்த 1983-ஆம் ஆண்டு பன்முக கலைஞராக அறியப்படும் டி.ராஜேந்தர் இயக்கத்தில் வெளியாகி சூப்பர் டூப்பர் வெற்றி பெற்ற ‘உயிருள்ள வரை உஷா’ என்ற படத்தின் மூலம் தான் அறிமுகம் ஆகியிருந்தார்.

-விளம்பரம்-

முதல் படமே இவருக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று தந்தது. இதனை தொடர்ந்து இவர் பி.மாதவனின், இயக்கி – தயாரித்த கரையை தொடாத அலைகள், விசுவின் இயக்கத்தில் 1986-ஆம் ஆண்டு வெளியான மீண்டும் சாவித்திரி போன்ற பல படங்களில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானார். மேலும், இவர் தமிழ் சினிமாவில் பல படங்களில் ஹீரோவாகவும், குணச்சித்திர வேடங்களிலும் நடித்திருக்கிறார்.

- Advertisement -

அதுமட்டுமில்லாமல் இவருடைய எதார்த்தமான நடிப்பு ரசிகர்கள் மத்தியில் நீங்காத இடத்தை பிடித்திருக்கிறது. பிறகு வாய்ப்புகள் குறைய தொடங்கியவுடன் இவர் தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்திருந்தார். அதோடு இவர் கடைசி வரை திருமணம் செய்து கொள்ளாமல் தனியாக வாழ்ந்து வந்தார். கடைசி வரை இவர் தன்னுடைய சகோதரர் குடும்பத்துடன் தான் வசித்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் இவருக்கு திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டு இருக்கிறது. உடனடியாக இவரை மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளிக்கப்பட்டது இருந்தாலும் சிகிச்சை பலனில்லாமல் நடிகர் கங்கா இறந்துவிட்டார். தற்போது இவருக்கு 63 வயதாகி இருக்கிறது. மேலும், இவருடைய இழப்பு திரை உலகில் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இவருடைய இறுதி சடங்குகள் இவருடைய சொந்த ஊரான சிதம்பரத்தில் நடைபெறும் என்று உறவினர்கள் கூறி இருக்கின்றனர்.

-விளம்பரம்-
Advertisement