விவேக், நெல்லை சிவா மட்டுமல்ல, 2021ல் காலமான இந்த நடிகர்களை பற்றி தெரியுமா ?

0
791
deaths
- Advertisement -

தமிழ் சினிமாவிற்கு கடந்த ஆண்டு மிகவும் சோகமான ஒரு ஆண்டு என்று தான் சொல்ல வேண்டும். தமிழ் சினிமாவில் கடந்த ஆண்டு மட்டும் எண்ணெற்ற நடிகர் நடிகைகள் காலமாகி இருந்தனர் . அதிலும் குறிப்பாக விவேக், கில்லி மாறன், நெல்லை சிவா, நெடு முடி வேனு, அனந்த கண்ணன், நடிகர் பாண்டு,என்னடி முனியம்மா பாடல் புகழ் Tks நடராஜன் என்று பல தமிழ் சினிமா பிரபலங்கள் காலமான சம்பவம் தமிழ் திரையுலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருந்தது. அந்த வகையில் கடந்த 2021 ஆம் ஆண்டு காலமான 21 பிரபலங்களை பற்றி பார்க்கலாம்.

-விளம்பரம்-

Tks நடராஜன் :

1954ம் ஆண்டு வெளியான ரத்தபாசம் படம் மூலம் நடிகரான நடராஜன் 500க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். 15 வயதில் துவங்கி நாடகம், சினிமா, நாட்டுப்புற பாடல் என்று தனது பயணத்தை தொடங்கிய இவர் பல பாடல்களையும் பாடி இருக்கிறார். இவர் கடந்த ஆண்டு மே 5 ஆம் தேதி வயது மூப்பு காரணமான காலமானார்.

- Advertisement -

செல்லதுரை :

தமிழ் சினிமாவில் பல்வேறு படங்களில் துணை கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் நடிகர் செல்லதுரை. இவர் தமிழில் ராஜா ராணி, தெறி, மாரி போன்ற பல படங்களில் துணை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். 84 வயதான இவர் உடல் நலக் குறைவால் படங்களில் நடிப்பதை நிறுத்திவிட்டார். இந்த நிலையில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் காலமானார்.

chelladurai

பாண்டு :

தமிழில் பல்வேறு படங்களில் காமெடி கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமான பாண்டு கொரோனா தொற்று காரணமாக காலமானார். பாண்டு மற்றும் அவரது மனைவி குமுதா இருவரும் கொரோனா தொற்று ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்து வந்த நிலையில் நடிகர் பாண்டு மே 6 ஆம் தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

-விளம்பரம்-

ஐயப்பன் கோபி :

iyappan

தமிழில் ஒரு சில படங்களில் வடிவேலுவுடன் காமெடி வேடத்தில் நடித்தவர் நடிங்கர் ஐயப்பன் கோபி. இவர் தமிழில் ஆறு, காக்கி சட்டை, கருப்பன், சதுரங்க வேட்டை, காக்கி ஆளோட செருப்பை காணோம் உட்பட ஏராளமான படங்களில் நடித்துள்ளார். கடந்த ஏப்ரல் 24 ஆம் தேதி இவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதை அடுத்து மரணமடைந்தார்.

காளிதாஸ் :

90ஸ் கிட்ஸ்களின் மிகவும் பிரபலமான தொடர்களின் ஒன்றான ‘மர்மதேசம்’ தொடரில் இவர் கொடுக்கும் டைட்டில் கார்டு குரலே 90ஸ் கிட்ஸ்களுக்கு பிரபலம் தான். மேலும், இவர் கிட்ஸ்களுக்கு கலைஞ்சராக மட்டும்மல்லாமல் ஆரம்பத்தில் வில்லனாக நடித்து ஒரு நடிகராகவும் திகழ்ந்தார். பின்னர் பல்வேறு வடிவேலுவின் காமெடியில் அசத்தி இருப்பார். கடந்த ஏப்ரல் 24 ஆம் தேதி இவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதை அடுத்து மரணமடைந்தார்.

பவுன் ராஜ் :

pawnraj

சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் போன்ற படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகர் பவுன்ராஜ். மேலும், இந்த படங்களில் இவர் பொன்ராமின் மேலும், இயக்குனராகவும் பணியாற்றி உள்ளார். இப்படி ஒரு நிலையில் கடந்த ஆண்டு மே மாதம் மாரடைப்பு காரணமாக இறந்துவிட்டார்.

மனோகர் :

RnrManohar

கடந்த 1994ஆம் ஆண்டு வெளியான மனிதன் திரைப்படத்தின் மூலம் எழுத்தாளராக அறிமுகமானவர் மனோகர். அதன் பின்னர் தென்னவன், புதுமைப்பித்தன், கோலங்கள் போன்ற பல்வேறு படங்களில் எழுத்தாளராக கோலங்கள் மேலும், இவர் மாசிலாமணி வேலூர் மாவட்டம் போன்ற இரண்டு படங்களையும் இயக்கியிருக்கிறார். இவர் கடந்த ஆண்டு மே மாதம் காலமானார்.

நிதிஷ் வீரா :

நடிகர் நிதீஷ் வீரா வல்லரசு படத்தில் அறிமுகமானார். புதுப்பேட்டை, வெண்ணிலா கபடிக்குழு, காலா, அசுரன் உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடிதித்துள்ளார். இறுதியாக இவர் விஜய் சேதுபதியின் ‘லாபம்’ படத்தில் நடித்து வந்தார். இப்படி ஒரு படத்தில் இவர் கொரோனா தொற்று காரணமாக கடந்த மே மாதம் காலமானார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement