2018 ஆம் ஆண்டு தமிழ் சினிமா எத்தனை பிரபலங்களை இழந்துள்ளது தெரியுமா..!

0
787
2018-lost-celebrities
- Advertisement -

தமிழ் சினிமாவில் இந்த ஆண்டு எத்தனையோ சினிமா பிரபலங்களின் மறைவு திரை துறையையே புரட்டி போட்டது. நடிகை ஸ்ரீ தேவியின் மர்மமான மரணம் கோவை செந்திலின் திடீர் மரணம் என்று எத்தனவோ பிரபலங்களை தமிழ் சினிமா இழந்துள்ளது.

-விளம்பரம்-

தமிழ் சினிமா இந்த ஆண்டு சில முக்கியமான நட்சத்திரங்களை இழந்திருக்கிறது. அவர்கள் யார்? அவர்களின் சினிமா பங்களிப்பு என்ன? ஒரு சின்ன நினைவுறுத்தல் பட்டியல் தான் இது .

- Advertisement -

ஸ்ரீதேவி :

தமிழ் சினிமாவின் தனி அடையாளமாக திகழ்ந்தவர் ஸ்ரீதேவி. குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, பின் கதாநாயகியாக மலர்ந்து அதன் பின் பாலிவுட் திரை நட்சத்திரமாக ஜொலித்தவர். இந்த ஆண்டு பிப்ரவரி 24 அன்று இறுதி வாழ்க்கையை முடித்துக் கொண்டபோது திரையுலகமே துயரத்தில் ஆழ்ந்தது.

-விளம்பரம்-

கோவை செந்தில் :

கோவையை சேர்ந்த இவரின் இயற்பெயர் குமாரசாமி. சொந்த ஊர் திருப்பூர் மாவட்டத்திலுள்ள பள்ளிபாளையம். மனைவி பெயர் லட்சுமி. திலக் என்ற ஒரு மகன், பொன்மணி என்ற மகள் உள்ளனர். வங்கியில் வேலை பார்த்து வந்த கோவை செந்தில், சினிமாவில் வாய்ப்பு கிடைத்ததும் அந்த வேலையை ராஜினாமா செய்துவிட்டு சென்னை வந்தவர். 74 வயதான இவர், 200 படங்களுக்கு மேல் நடித்தவர். இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் மறைந்தார்.

மேக் அப் மேன் முத்தப்பா :

நடிகர் ரஜினிகாந்த்தின் ஆஸ்தான மேக்-அப் மேன் முத்தப்பா. ரஜினி இமைய மலைக்கு செல்லும் போது வைத்திருந்த கைத்தடியை இவருக்குதான் அவர் பரிசளித்திருந்தார். முத்தப்பா என்றால் தென்னிந்திய சினிமாவில், தெரியாதவர்கள் இருக்க முடியாது. வயது மூப்பு காரணமாக இந்த ஆண்டு டிசம்பர் மாதம் மறைந்தார்.

வெள்ளை சுப்பையா :

கவுண்டமணி, செந்தில், வடிவேலு மட்டுமல்லாமல் 3 தலைமுறை நடிகர்களோடு நடித்த இவர்,,கடந்த சில வருடங்களாக உடல் நலக்குறைவு காரணமாக சொந்த ஊருக்கு திரும்பினார். சிகிச்சைக்குப் பணமின்றி அவதிப்பட்ட அவர் அதற்காக கலெக்டரிடம் சில வருடங்களுக்கு முன் மனு கொடுத்ததாக செய்திகள் வெளியாயின. கடந்த செப்டம்பர் மாதம் காலமானார்.

சீனு மோகன் :

மோகனின் நாடகங்களில் நடித்து பிரபலமானவர். இவர் நாடகங்களில் சீனு என்ற கதாபாத்திர பெயரில் நடிப்பதால் சீனு மோகன் என்று அழைக்கப்பட்டார்.
இதுவரை 3000க்கும் அதிகமான மேடை நாடகங்களில் நடித்த இவர், தமிழ் சினிமா சரியாக பயன்படுத்திக் கொள்ளவில்லை என பலர் அவரது மறைவின் போது கூறினர்.


நீலு :

பழைய கருப்பு வெள்ளை படங்களில் தன் நகைச்சுவை திறமையால் ரசிகர்களை ஈர்த்தவர் நீலு. உடல்நலக் குறைவு காரணமாக கடந்த மே மாதம் உயிரிழந்தார்.
ஆயிரம் பொய் என்ற படத்தின் மூலம் 1969ஆம் கால் பதித்த இவர், 150க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். தமிழில் சிவாஜி கணேசன், நாகேஷ், ரஜினிகாந்த், கமல்ஹாசன், அர்ஜூன், அஜீத், சரத்குமார், பிரபு, கார்த்திக், விக்ரம், மாதவன் உள்ளிட்ட நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார். கடந்த 2009ஆம் ஆண்டு இவருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருதும் வழங்கபட்டது.

Advertisement