மீண்டும் பார்முக்கு வந்த எதிர் நீச்சல் – எதிர் பாராத TRP டாப்பில் விஜய் டிவி சீரியல்.

0
542
- Advertisement -

பொதுவாக தொலைக்காட்சி என்ற ஒன்று தொடங்கியதிலிருந்தே மக்களின் பொழுதுபோக்கு அம்சமாக சீரியல்கள் விளங்குகிறது. சமீப காலமாக சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை என அனைவரும் சின்னத்திரை பக்கம் சென்று விட்டார்கள். அதிலும் தமிழ் டிவி சேனல்கள் அனைத்திலும் எண்ணற்ற பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகி வருகிறது. இதனால் வெள்ளித்திரையை விட சின்னத்திரையை ரசிக்கும் ரசிகர்களின் பட்டாளம் அதிகமாகி வருகிறது.

-விளம்பரம்-

மேலும், ஒவ்வொரு சேனலும் புது வித்தியாசமான கதைக்களத்துடன் ஒளிபரப்பி வருகிறார்கள். கிட்டத்தட்ட 20 வருடங்களுக்கும் மேலாக இந்த நிகழ்ச்சிகள் எல்லாம் மக்களை கவர்ந்து வைத்துள்ளது. வாரத்தின் முதல் நாள் திங்கள் முதல் சனிக்கிழமை வரை நாள்தோறும் காலையில் முதல் இரவு தூங்கும் வரை சீரியல்கள் வரிசைகட்டி டிவியில் டெலிகாஸ்ட் செய்யப்பட்டு வருகிறது. தமிழகத்தில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான முன்னணி சேனல்களாக சன் டிவி மற்றும் விஜய் சேனல்களாக திகழ்கிறது. எப்போதும் இந்த இரு சேனல்களுக்கு இடையே தான் கடும் போட்டி நிலவி வருகிறது.

- Advertisement -

சின்னத்திரை சீரியல்கள்:

அதோடு டிஆர்பி ரேட்டிங்கில் இந்த சேனல்களின் இடையில் தான் டிஆர்பி மாற்றி மாற்றி இடம் பிடிக்கிறது. அதுமட்டுமில்லாமல் வாரம் வாரம் மக்களை அதிகம் கவரும் சீரியல் என்று டிஆர்பி பட்டியல் வெளியாகி வருகிறது. அந்த வகையில் இந்த 2024 ஆம் வருடத்தின் மூன்றாவது வாரத்தில் வெளியாகி டாப் 10 இடத்தை பிடித்திருக்கும் சீரியல்கள் பட்டியல் தான் தற்போது வெளியாகியிருக்கிறது. அந்த பட்டியல் இதோ,

சிங்க பெண்ணே சீரியல்:

இந்த முறையும் சன் டிவியில் புதிதாக ஒளிபரப்பாகி வரும் சிங்க பெண்ணே சீரியல் தான் முதலிடத்தை பிடித்திருக்கிறது. குடும்ப சூழ்நிலைக்காக கிராமத்திலிருந்து சென்னைக்கு வந்து கார்மெண்ட்ஸ்சில் வேலைக்கு செல்கிறார் ஆனந்தி. இவருடன் சில பெண்களும் வேலை செய்கிறார்கள். அங்கு அவர்கள் தைரியமாக எதிர்கொள்ளும் பிரச்சனைகளை மையமாக வைத்து தான் சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது. தற்போது சீரியலில் ஆனந்தி, அன்பு தான் தன்னை காதலிக்கிறார் என்பதை புரிந்து கொண்டு அன்புவை காதலிப்பாரா? அவரை திருமணம் செய்து கொள்வாரா? இல்லை மகேஷை திருமணம் செய்து கொள்வாரா? போன்ற பரபரப்பான கட்டங்களுடன் சீரியல் சென்று கொண்டிருக்கின்றது. இந்த சீரியலின் டிஆர்பி ரேட்டிங் 11.8 ஆகும்.

-விளம்பரம்-

கயல்:

கயல் சீரியல் இரண்டாம் இடத்தை பிடித்திருக்கிறது. இந்த தொடர் 2021 ஆம் ஆண்டு முதல் சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகிறது. சைத்ரா ரெட்டி தான் இந்த தொடரில் கதாநாயகியாக நடித்து வருகிறார். கதாநாயகனாக சஞ்சீவ் நடித்து வருகிறார். தன் குடும்பத்திற்காக எல்லா சந்தோசம் எல்லாத்தையும் இழந்து போராடும் ஒரு பெண்ணின் கதை கயல் சீரியல். தற்போது சீரியலில் கயல் விபத்தில் சிக்கி உயிருக்கு போராடும் நிலையில் இருக்கிறார். கயல் கண் முழிப்பாரா? அவருக்கு உதவுபவர்கள் யார்? போன்ற அதிரடி ட்விஸ்ட்களுடன் சீரியல் சென்று கொண்டிருக்கின்றது. இந்த சீரியல் ரேட்டிங் 10. 28

எதிர்நீச்சல்:

இந்த சீரியல் மூன்றாம் இடத்தை பிடித்து இருக்கிறது. இயக்குனர் திருச்செல்வம் தான் நீண்ட இடைவெளிக்கு பிறகு எதிர்நீச்சல் தொடரை இயக்கி வருகிறார். பெண் உரிமைக்காக போராடும் தொடராக இருக்கிறது. இந்த தொடர் இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை அதிக அளவு ஆதரவு பெற்று வருகிறது. கடந்த சில மாதங்களாகவே டிஆர்பி ரேட்டிங்கில் எதிர்நீச்சல் சீரியல் பின்னுக்கு தள்ளப்பட்டு இருக்கிறது. தற்போது சீரியலில் தர்ஷினியை மர்ம நபர்கள் கடத்தி வைத்திருக்கிறார்கள். தர்ஷினியை காப்பாற்ற மொத்த குடும்பமும் போராடிக் கொண்டிருக்கின்றது. தர்ஷினி காப்பாற்றப்படுவாரா? என அதிரடி திருப்பங்களுடன் சீரியல் சென்று கொண்டிருக்கின்றது. இந்த வாரம் சீரியலின் டிஆர்பி ரேட்டிங் 9.19

வானத்தைப்போல:

இந்த சீரியல் நான்காம் இடத்தை பிடித்திருக்கிறது. இந்த சீரியல் 2020 ஆம் ஆண்டு முதல் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது. இது முழுக்க முழுக்க அண்ணன்- தங்கை பாச கதை. இந்த தொடரில் ஸ்ரீகுமார், மான்யா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள். தற்போது சீரியலில் துளசி மீது பொன்னி அதிகமான வெறுப்பை காண்பித்து வருகிறார். பொன்னி, துளசியை கொலை செய்வாரா? சின்ராசு மற்றும் ராஜபாண்டி இதை எப்படி தடுப்பார்கள்? என்று சீரியல் சென்று கொண்டிருக்கின்றது. இந்த தொடரின் டிஆர்பி ரேட்டிங் 8.76

சுந்தரி 2 சீரியல் :

இந்த தொடர் ஐந்தாவது இடத்தில் இருக்கிறது. இந்த தொடர் 2021 ஆம் ஆண்டு முதல் சன் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த தொடரில் கேப்ரில்லா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். தற்போது சீரியலில் ஆஸ்ரமத்தில் நடக்கும் உள்ளுறுப்பு திருட்டு பற்றி தெரிந்து கொள்வதற்காக சுந்தரி தன்னுடைய அப்பத்தாவை ஆசிரமத்திற்கு அனுப்பி வைக்கிறார். இதனால் அப்பத்தா மீது அங்கு இருப்பவர்களுக்கு சந்தேகம் வந்தவுடன் அவரை தீர்த்து கட்ட முயற்சி செய்கிறார்கள். இதைத் தெரிந்து கொண்டு இதை சுந்தரி தடுப்பாரா? அப்பதாவை காப்பாற்றுவாரா? போன்ற பரபரப்பான கட்டத்தில் சீரியல் சென்று கொண்டிருக்கின்றது. இந்த தொடர் டி ஆர் பி ரேட்டிங் 8.75

சிறடிக்க ஆசை:

இந்த சீரியல் ஆறாவது இடத்தை பிடித்து இருக்கிறது. விஜய் டிவியில் இந்த சீரியல் தான் டிஆர்பி ரேட்டிங்கில் டாப்பில் இருக்கிறது. தற்போது சீரியலில் பொங்கல் பண்டிகைக்காக சொந்த ஊருக்காக முத்து குடும்பம் சென்றிருக்கின்றது. அங்கு ரோகினி தன்னுடைய மலேசியா மாமாவாக ஒருவரை நடிக்க வைத்திருக்கிறார். இந்த உண்மை தெரிய வருமா? ரோகிணியின் பித்தலாட்ட வேலைகளை முத்து கண்டுபிடிப்பாரா? என்று விறுவிறுப்பாக சீரியல் சென்று கொண்டிருக்கின்றது. இந்த சீரியல் டிஆர்பி ரேட்டிங் 8. 49

இனியா:

இந்த தொடர் 2022 ஆம் ஆண்டு முதல் சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த தொடரில் ஆல்யா மானசா, ரிஷி, பிரவீனா உட்பட பல நடிகர்கள் நடிக்கிறார்கள். இந்த சீரியல் இளைஞர்களை அதிகம் கவர்ந்திருக்கிறது என்றே சொல்லலாம். இந்த சீரியல் டாப் 10ல் ஏழாவது இடத்தை பிடித்து இருக்கிறது. இந்த சீரியல் டிஆர்பி ரேட்டிங் 7.34 .

பாக்கியலட்சுமி சீரியல் எட்டாவது இடத்தை பிடித்து இருக்கிறது. இந்த சீரியல் ரேட்டிங் 6.89

ஆனந்த ராகம் சீரியல் ஒன்பதாவது இடத்தை பிடித்திருக்கிறது. இத்தொடர் 6.22 டிஆர்பி ரேட்டிங்

ஆஹா கல்யாணம் சீரியல் பத்தாவது இடத்தை பிடித்திருக்கிறது. இந்த சீரியலின் டிஆர்பி ரேட்டிங் 5. 85

Advertisement