மூன்று ஆண்டுகளாக ஓடிவரும் சீரியலுக்கு எண்டு கார்டு போடும் சன் டிவி – அதுவும் எந்த தொடர் தெரியுமா?

0
504
Suntv
- Advertisement -

சன் டிவியில் பிரபல சீரியல் ஒன்று முடிய இருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் டிவி சேனல்கள் அனைத்திலும் எண்ணற்ற பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகி வருகிறது. இதனால் வெள்ளித்திரையை விட சின்னத்திரையை ரசிக்கும் ரசிகர்களின் பட்டாளம் அதிகமாகி வருகிறது. அதற்கேற்ப ஒவ்வொரு சேனலும் புது வித்தியாசமான கதைக்களத்துடன் ஒளிபரப்பி வருகிறார்கள்.சமீப காலமாகவே சின்னத்திரை சீரியல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.

-விளம்பரம்-

குறிப்பாக தொலைக்காட்சி என்ற ஒன்று தொடங்கியதில் இருந்து சன் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் மக்கள் மத்தியில் பேராதரவை பெற்று வருகிறது. காலையில் முதல் இரவு வரை சன் டிவியில் தொடர்ந்து சீரியல்கள் ஒளிபரப்படுகிறது. இதனாலே டிஆர்பி யில் சன் டிவி தான் என்றுமே ஆதிக்கம் செய்து கொண்டிருக்கின்றது. இதற்கு போட்டியாக சமீப காலமாக விஜய் டிவி, ஜீ தமிழ், கலர்ஸ் தமிழ் என பல சேனல்கள் வந்தாலும் சன் டிவி சீரியல்கள் தான் டிஆர்பி யில் முன்னிலை பிடிப்பதை தவறுவதில்லை.

- Advertisement -

சன் டிவி சீரியல்:

கிட்டத்தட்ட 20 வருடங்களுக்கும் மேலாக இந்த சன் டிவி சேனல் சீரியல்கள் எல்லாம் மக்களை கவர்ந்து வைத்துள்ளது. சன் டிவியில் சிங்க பெண்ணே, கயல், சுந்தரி, வானத்தைப்போல, அன்பே வா, எதிர்நீச்சல், இனியா, இலக்கியா போன்ற பல சீரியல்கள் வெற்றிகரமாக மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று கொண்டு சென்றிருக்கின்றது. இப்படி இருக்கும் நிலையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி ஹிட்டான அன்பே வா சீரியல் முடிய இருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

அன்பே வா சீரியல்:

இந்த சீரியல் 2020 ஆம் ஆண்டு முதல் ஒளிபரப்பாகி வருகிறது. இடையில் இந்த சீரியலில் இருந்து தொடர்ந்து நடிகைகள் காரணமின்றி வெளியேறி இருந்தாலும், சீரியல் விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் சென்று கொண்டு இருக்கிறது. இந்த சீரியலில் பூமிகா மற்றும் வருனின் காதல் கதையை மையாக கொண்டு செல்கிறது. ஆரம்பத்தில் இருவரும் எதிரிகளாக இருந்தார்கள். பின் காதலித்து திருமணம் செய்து கொண்டு குடும்பத்துடன் சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார்கள்.

-விளம்பரம்-

சீரியல் குறித்த தகவல்:

இருந்தும் அவர்கள் பல்வேறு பிரச்சினைகளை சந்தித்து வருகின்றனர். இவர்களுக்கு எதிராக வருனின் சகோதரியாக வாசுகி இருக்கிறார். பின் பூமிகாவாக நடித்த டெல்னா விலகி விற்றார். பின் வேறு ஒரு நடிகை நடித்து கொண்டு இருக்கிறார். வழக்கம் போல் இவர்களையும் வாசுகி தான் பிரிக்க பார்க்கிறார். சில வாரங்களாகவே இந்த சீரியலின் டிஆர்பி ரேட்டிங்க் பெரிதாக இல்லை.இந்த நிலையில் அன்பே வா சீரியல் முடிய இருக்கும் தகவல் தான் தற்போது ரசிகர்கள் மத்தியில் வருத்தத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

முடியப்போகும் சீரியல்:

இதை சன் டிவியே அறிவித்திருக்கிறது. அதுமட்டுமில்லாமல் சரிகமப தயாரிக்கும் இரண்டு சீரியல்கள் சன் டிவியில் தொடங்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. அன்பே வா சீரியல் முடிவடைவது ரசிகர்களுக்கு கொஞ்சம் வருத்தத்தை தந்தாலும் இரண்டு புது சீரியல்கள் வர இருப்பது ர ஆறுதலை கொடுத்திருக்கின்றது. ஆனால், அந்த சீரியல்கள் என்ன என்ற விவரம் தான் தெரியவில்லை.

Advertisement