பாகுபலி படத்தை கூட விட்டு வைக்கலயா..! தமிழ் படம் அட்ராசிட்டி..! புகைப்படம் உள்ளே.!

0
935
Tamil-padam

தமிழில் 2010 ஆம் ஆண்டு முழு நீள காமெடி படமாக வெளிவந்த படம் ” தமிழ் படம் “. புதுமுக இயக்குனர் சி.எஸ். அமுதன் இயக்கத்தில் வெளியான இந்த படத்தில் மிர்ச்சி சிவா ஹீரோவாக நடித்திருந்தார். லாஜிக் இல்லா காமெடியால் இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

tamil padam

தமிழ் படம் பாகம் 1- இல் பல்வேறு தமிழ் சினிமாவில் ஹீரோக்கள் செய்த பல்வேறு மாஸ் சீன்களை செம கலாய் கலாய்த்திருப்பார் நடிகர் சிவா. இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து இந்த படத்தின் இரண்டாவது பாகத்தை உதயநிதியின் ஒய் நாட் நிறுவனம் தயாரித்து வருகிறது.

சமீபத்தில் வெளியான இந்த படத்தின் டீசரில் பல்வேறு முன்னணி ஹீரோக்களின் படங்களை பாரபட்சம் பார்க்காமல் கலாய்த்திருந்தனர். அதில் தமிழ் சினிமாவின் முன்னனி நடிகர்களான விஜய், அஜித் தொடங்கி அரசியல்வாதிகளான பண்ணீர் செல்வம், சி ஆர் சரச்வதி வரை பாரபட்சம் பார்க்காமல் கலாய்த்து இருந்தனர். இந்த படத்தின் சில டெம்ப்லேட்களும் படு ட்ரெண்டாக இருந்து வந்தது.

தற்போது இந்த படத்தின் மற்றுமொரு புகைப்படமும் வெளியாகியுள்ளது. ராஜமௌலி இயக்கத்தில் மிக பிரம்மாண்டமாக வெளிவந்த படம் “பாகுபலி” ஒட்டுமொத்த படத்தையும் கிண்டல் செய்யும் வகையில் படத்தின் காட்சிகள் மற்றும் பாடல் வெளிவந்து ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.இதனை தொடர்ந்து பாகுபலி படத்தின் முக்கிய காட்சி ஒன்றை தமிழ் பட குழு கிண்டல் செய்யும் வகையில் ஒரு போஸ்டர் ஒன்று வெளியாகி ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.