தமிழக அரசு விளம்பரத்தில் தல அஜித்.! தரமான விளம்பரம்.! கடுப்பில் விஜய் ரசிகர்கள்.! போஸ்டர் இதோ

0
441
Thala

தமிழ் சினிமாவின் தல என்றழைக்கபடும் அஜித், கோடிக்கணக்கான ரசிகர்களை கொண்ட ஒரு முக்கிய நடிகராக பல ஆண்டுகளாக நிலைத்து நின்று வருகிறார். இவர் நடிப்பில் அடுத்த ஆண்டு பொங்கல் அன்று வெளியாக இருக்கும் “விஸ்வாசம்” படத்திற்காக தான் ரசிகர்கள் ஆவலுடன் காத்துக்ககொண்டிருக்கின்றனர்.

அஜித் அவர்கள் நடிப்பையும் தாண்டி கார் மற்றும் பைக் பிரியர் என்பதும் நம் அனைவருக்கும் தெரியும். அதிலும் அவரது படங்களில் பைக், கார் பயன்படுத்தி மாஸ் காட்சிகள் இல்லாமலும் இருக்காது.இந்நிலையில் அஜித்தை வைத்து ஹெல்மெட் விழிப்புணர்வு விளம்பரத்தை செய்துள்ளது தமிழக அரசு.

சமீபத்தில் வாகன ஓட்டிகள் அனைவரும் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்று அரசாணை பிறப்பிக்கபட்டது. இதற்கு பல்வேறு வரவேற்பும், எதிர்ப்பும் கிளம்பிய நிலையில் அஜித் ரசிகர்கள் சார்பாக ஹெல்மெட் விழிப்புணர்வு பேரணியும் நடைபெற்றது.

சமீபத்தில் விளம்பர பதாகை ஒன்றில் தமிழக அரசு வாகன ஓட்டிகளை ஹெல்மெட் அணியும் விழிப்புணர்வு விளம்பரம் ஒன்றில் அஜித் ஹெல்மெட் அணிந்து பைக்கை ஓட்டும் புகைப்படம் ஒன்றை காட்சிபடுத்தியுள்ளது. அஜித்தை வைத்து தமிழக அரசு செய்துள்ள இந்த விளம்பரம் அஜித் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.