கே.ஜி.எஃப்’ பட மோகம் , ஒரே மூச்சில் ஒரு பாக்கெட் சிகரெட்டை புகைத்த சிறுவனுக்கு நேர்ந்த சோகம்.

0
239
kgf
- Advertisement -

கே ஜி எஃப் 2 படத்தை பார்த்து ஒரே மூச்சில் ஒரு பாக்கெட் சிகரெட்டை புகைபிடித்த சிறுவன் குறித்த தகவல் தற்போது சோஷியல் மீடியாவில் பயங்கர சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. கன்னட சினிமாவின் ராக்கிங் ஸ்டார் என்று அழைக்கப்படுபவர் நடிகர் யாஷ். இவருக்கு பெரும் புகழை ஏற்படுத்தி கொடுத்தது கே ஜி எப் திரைப்படம் தான். இந்த படம் தான் கன்னட சினிமா வரலாற்றிலேயே அதிக வசூல் செய்த படம் என்ற சாதனையை செய்தது. இதனை தொடர்ந்து தற்போது கே ஜி எஃப் 2 படம் வெளியாகி இருந்தது. இந்தப் படத்தில் கதாநாயகியாக ஸ்ரீநிதி செட்டி நடித்திருக்கிறார்.

-விளம்பரம்-

இந்த படத்தை பிரசாந்த் நீல் இயக்கி இருக்கிறார். மேலும், இந்த படத்திற்கு ரவி பஸ்ரூர் இசையமைத்து இருக்கிறார் மற்றும் பவுன் கௌடா ஒளிப்பதிவு செய்து இருக்கிறார். பல எதிர்பார்ப்புகளுடன் ஏப்ரல் 14 ஆம் தேதி கேஜிஎப் 2 படம் வெளியாகி இருந்தது. படத்தில் கருடனை கொன்று கேஜிஎப்பில் கால் தடம் பதித்து இரண்டாம் கதையை தொடங்குகிறார் யாஷ் . ஆனால், அது அங்கிருக்கும் பலருக்கு பிடிக்காமல் போகிறது. பின் கேஜிஎப் இடத்தில் இருந்து யாஷை தூக்க வேண்டும் என்று எதிரிகள் பலரும் திட்டங்களை தீட்டுகின்றனர்.

இதையும் பாருங்க : அட கடவுளே, நம்ப பாரதிராஜாவா இது ? மது போதையில் இளம் பெண்களுடன் குத்தாட்டம். வைரலாகும் பழைய வீடியோ.

- Advertisement -

கே ஜி எஃப் 2 கதை:

இறுதியில் யாஷ் கேஜிஎப் மக்களை காப்பாற்றினாரா? எதிரிகளை துவம்சம் செய்தாரா? மக்களின் நிலைமை என்ன? என்பது தான் படத்தின் மீதி கதை. படத்தில் கதாநாயகனாக நடித்திருக்கும் யாஷ் தனி ஒருவனாக படத்தை தாங்கி சென்றிருக்கிறார். மாஸ் ஹீரோவாக எல்லோர் மனதிலும் நிற்கிறார். இயக்கம், திரைக்கதை என இரண்டிலுமே பிரசாந்த் நீல் மிரட்டி இருக்கிறார். முதல் பாகத்தை விட இரண்டாம் பாகம் பயங்கர மாசாக இருந்தது.

கே ஜி எஃப் 2 படம் பற்றிய தகவல்:

நீண்ட எதிர்பார்ப்புகளுடன் இருந்த ரசிகர்களுக்கு கே ஜி எஃப் 2 படம் ஒரு சிறந்த விருந்து வைத்திருக்கிறது என்று சொல்லலாம். அதுமட்டும் இல்லாமல் தமிழ் படங்களுக்கு இணையாக தமிழ் ரசிகர்கள் கேஜிஎப் படத்தை கொண்டாடி இருந்தார்கள். இதுவரை கே ஜி எஃப் 2 படம் 1000 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்திருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அதுமட்டுமில்லாமல் கேஜிஎப் 2 படத்தின் இறுதி காட்சியில் மூன்றாம் பாகம் வரவிருக்கும் என்று காண்பிக்கப்பட்டு இருந்தது. இதனால் ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு எழுந்தது.

-விளம்பரம்-

கே ஜி எஃப் 2 வசூல்:

படத்தின் தயாரிப்பாளர் கார்த்திக் கௌடா கூட சமீபத்தில் பேட்டியில் கேஜிஎப் 3 படத்திற்கான முதல்கட்ட வேலையை தொடங்கி விட்டோம். விரைவில் அதில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் என்று அறிவிக்கப்படும் என்று கூறியிருந்தார். இந்த நிலையில் படத்தை பார்த்து சிறுவன் செய்திருக்கும் செயல் தற்போது சோசியல் மீடியாவில் பயங்கர பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அது என்னவென்றால், ஹைதராபாத்தை சேர்ந்த சிறுவன் ஒருவன் கேஜிஎப் 2 படத்தை பார்த்து இருக்கிறான்.

சிறுவன் செய்த செயல்:

அதில் யாஷ் சிகரெட் பிடிக்கும் காட்சியை பார்த்து அந்த சிறுவன் பயங்கரமாக ஈர்க்கப்பட்டு ஒரு பாக்கெட் சிகரெட்டை தொடர்ச்சியாக ஒரே மூச்சில் புகைத்து இருக்கிறான். இதன் விளைவாக சிறுவனுக்கு கடுமையாக தொண்டை வலி,இருமல் ஏற்பட்டிருக்கிறது. இதனையடுத்து அந்த சிறுவனை ஹைதராபாத்தில் உள்ள செஞ்சுரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். பின் மருத்துவர்கள் அந்த சிறுவனுக்கு தீவிர சிகிச்சை அளித்து வந்தார்கள். அதன் பின் சிறுவன் குணமடைந்து உள்ளான். மேலும், அந்த சிறுவனுக்கு முறையாக கவுன்சிலிங்கும் கொடுக்கப்பட்டு இருக்கிறது. தற்போது இந்த தகவல் சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

Advertisement