இரண்டு மாசமா எதோ சரியில்ல, டாக்டர் உடனே ஆப்ரேஷன் பண்ண சொல்லிட்டார் – Sacயின் உருக்கமான பேச்சு.

0
1244
- Advertisement -

தனக்கு ஏற்பட்ட உடல் பிரச்சனை குறித்து எமோஷனலாக எஸ் ஏ சந்திரசேகர் பதிவிட்டிருக்கும் வீடியோ தான் இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிகப்பிரபலமான இயக்குனராக கொடிகட்டி பறந்தவர் எஸ் ஏ சந்திரசேகர். இவர் திரைப்பட இயக்குனர் மட்டுமல்லாமல், நடிகர், தயாரிப்பாளர், எழுத்தாளர் என பன்முகங்களை கொண்டவர். 1981 ஆம் ஆண்டு வெளிவந்த ‘சட்டம் ஒரு இருட்டறை’ என்ற படத்தில் தான் எஸ் ஏ சந்திரசேகர் அவர்கள் இயக்குனராக அறிமுகமாகி இருந்தார்.

-விளம்பரம்-

அதனை தொடர்ந்து இவர் பல படங்களை இயக்கி இருக்கிறார். மேலும், இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம் என பல மொழிகளில் 70க்கும் மேற்பட்ட திரைப் படங்களை இயக்கி இருக்கிறார். இவர் இயக்கிய படங்கள் எல்லாமே மக்களிடையே நல்ல வரவேற்பையும் வசூலையும் பெற்றுத் தந்து இருக்கிறது. அதுமட்டும் இல்லாமல் இவர் 40 வருடங்களுக்கு மேலாக சினிமா திரை உலகில் பணியாற்றி வருகிறார். கடைசியாக இயக்குனர் எஸ் ஏ சந்திரசேகர் அவர்கள் இயக்கிய 70 வது திரைப்படம் “கேப்மாரி”.

- Advertisement -

எஸ் ஏ சந்திரசேகர் திரைப்பயணம்:

இந்த படத்தில் ஜெய், அதுல்யா ரவி, வைபவி சாண்டில்யா, விபின் உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்து இருந்தார்கள். இந்த படம் இன்றைய இளைஞர்கள் செய்யும் அட்டூழியங்களையும், போடும் ஆட்டங்களையும் வெட்ட வெளிச்சமாக சுட்டிக்காட்டி, அதனால் அவர்களுக்கு ஏற்படும் பிரச்சினைகளை மையமாக வைத்து உருவான கதை. இந்த படம் எதிர்பார்த்த வெற்றியை கிடைக்கவில்லை. அதற்கு பிறகு இவர் எந்த படத்தையும் இயக்க வில்லை. பின் எஸ் ஏ சந்திரசேகர் அவர்கள் ‘யார் இந்த எஸ்.ஏ.சி’ என்ற யூடியூப் சேனலை தொடங்கி இருக்கிறார்.

எஸ்.ஏ.சி நடிக்கும் சீரியல்:

அதில் அவர் தன்னுடைய வாழ்க்கை வரலாற்றையும், சினிமா பயணத்தையும் பற்றி பதிவு செய்து வீடியோவாக வெளியிட்டு வருகிறார். தற்போது இவர் படங்களில் பிசியாக நடித்துக் கொண்டு வருகிறார். அது மட்டும் இல்லாமல் இவர் சின்னத்திரையில் ஒளிபரப்பாகி வரும் கிழக்கு வாசல் என்று தொடரிலும் நடித்து வருகிறார். இந்த சீரியல் தொடங்கிய நாளில் இருந்து தற்போது வரை நன்றாக சென்று கொண்டிருக்கின்றது. இந்த நிலையில் எஸ்.ஏ சந்திரசேகர் அவர்கள் எமோஷனலாக ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அதில் அவர், வாழ்க்கையில் அடிக்கடி சுவாரசியமான, மறக்க முடியாத விஷயங்கள் நடக்கும். அப்படித்தான் சமீபத்தில் என்னுடைய வாழ்க்கையில் நடந்தது.

-விளம்பரம்-

எஸ்.ஏ.சி பதிவிட்ட வீடியோ:

அதை உங்களுடன் ஷேர் செய்ய தான் இந்த வீடியோ வெளியிட்டேன். நான் எப்போதுமே சுறுசுறுப்பாகவும் புத்துணர்ச்சியுடன் தான் இருப்பேன். எல்லோருமே என்னை இந்த வயதிலும் எப்படி என்று பாராட்டுவார்கள். பலருக்குமே என்னை பற்றி நன்றாக தெரியும். ஆனால், கடந்த இரண்டு மாதங்களாக எனக்கு ஏதோ ஒரு மாதிரியாகவே இருந்தது. எனக்கே முன்பு போல் என்னுடைய உடம்பு இல்லையே என்று கேள்வி எழுந்தது. இதனால் நான் உடனே மருத்துவர் அணுகினேன். அவர் எனக்கு ஸ்கேன் டெஸ்ட் எல்லாம் எடுத்து பார்க்கும்போது ஒரு சின்ன பிரச்சனை ஆப்ரேஷன் செய்யணும் என்று சொன்னார்.

Sac

வாழ்க்கை குறித்து சொன்னது:

நானும் உடனே சரி என்று சொல்லி ஆபரேஷன் செய்து விட்டேன். இரண்டு நாட்களிலேயே நான் குணமாகி விட்டேன். தற்போது நன்றாக இருக்கிறேன். இதை நான் எதற்கு சொல்கிறேன் என்றால், எந்த ஒரு பிரச்சினையாக இருந்தாலும் தைரியத்துடனும், பாசிட்டிவான எண்ணத்துடனும் செயல்பட்டால் உடனடியாக தீர்வு நல்லாதாக தான் இருக்கும். நான் அப்படி எடுத்துக் கொண்டதால்தான் என்னுடைய வாழ்க்கையிலும் நல்ல விஷயங்கள் நிகழ்ந்தது. எல்லோரும் நம்பிக்கையுடனும் பாசிட்டிவ் ஆகவும் இருங்கள். நல்லதே நடக்கும் என்று கூறி இருக்கிறார்.

Advertisement