பிரபல நடன இயக்குனர் சேத்தன்யா தற்கொலை செய்து கொண்டிருக்கும் சம்பவம் தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. தெலுங்கு திரை துறையில் பிரபல நடன இயக்குனராக இருந்தவர் சேத்தன்யா. இவர் நெல்லூரை சேர்ந்தவர். இவர் தெலுங்கு மொழியில் பல படங்களில் நடன இயக்குனராக பணியாற்றி இருக்கிறார்.
இவர் முதன் முதலில் டிவியில் ஒளிபரப்பான நிகழ்ச்சியில் தான் பங்கேற்று இருந்தார். அதன் மூலம் தான் இவருக்கு மக்கள் மத்தியில் அறிமுகம் கிடைத்தது. அதன் பிறகு இவருக்குபடங்களில் வாய்ப்பு கிடைத்தது. பின் இவர் பிரபலமான நடன இயக்குனராக திகழ்ந்தார். இதனிடையே இவர் அதிகமாக கடன் வாங்கி இருந்தார். பின் தான் வாங்கிய கடன் தொகையை திருப்பிக் கொடுக்க முடியாமல் கடுமையான மன உளைச்சலில் இருந்தார் சேத்தன்யா.
இந்த நிலையில் கடன் பிரச்சனையால் நடன இயக்குனர் சேத்தன்யா சில தினங்களுக்கு முன்பு தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். மேலும், இவர் தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு தன்னுடைய செல்போனில் வீடியோ ஒன்றையும் எடுத்திருக்கிறார். அதில் அவர், நான் எந்த பிரச்சனையிலும் மாட்டிக் கொள்ளாமல் என்னுடைய அம்மாவும் அப்பாவும் சகோதரியும் என்னை நன்றாக பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
This is unexpected #Chaitanya master, Suicide isn't a solution,u are such a talented soul yet couldn't understand how u could do this. It needs lot of guts to commit suicide,u could've used that courage to solve your problems,Super angry&sad on ur death#Dhee#RipChaitanyaMaster pic.twitter.com/6CpAkNvCn4
— Vamc Krishna (@lyf_a_zindagi) April 30, 2023
என்னுடைய நண்பர்களிடம் நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். நான் நிறைய பேருக்கு தொல்லை கொடுத்துவிட்டேன். அனைவரிடமும் நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். பணப்பிரச்சனையில் என்னுடைய நல்ல குணத்தை நான் இழந்து விட்டேன். கடன் வாங்குவது பெரியதல்ல. ஆனால், அந்த கடனை திருப்பி செலுத்தும் திறமை இருக்க வேண்டும்.
ஆனால், என்னால் திருப்பி செலுத்த முடியவில்லை. நான் நெல்லூரில் இருக்கிறேன். இதுதான் என்னுடைய கடைசி நாள். கடனால் ஏற்பட்ட பிரச்சினைகளை என்னால் சமாளிக்க முடியவில்லை என்று கூறியிருக்கிறார். இப்படி இறப்பதற்கு முன்பு சேத்தன்யா செல்போனில் பதிவிட்ட வீடியோவை போலீசார் கைப்பற்றி இருக்கின்றனர். மேலும், அவருடைய உடலையும் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்திருக்கிறது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிரமாக விசாரணை செய்து வருகின்றது.