தானா சேர்ந்த கூட்டம் ‘ஸ்பெஷல் 26’ன் சுடப்பட்ட கதையா ! கதை என்ன தெரியுமா?

0
3364
- Advertisement -

சில தினங்களுக்கு முன்னர் சூர்யாவின் ‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்தின் டீசர் வெளியானது. இந்த டீசர் அனைத்து தரப்பினடிடமிருந்தும் பெரிய வரவேற்பை பெற்றது. ஆனால், விக்னேஷ் சிவன் இயக்கிய இந்த படம் 2013ல் வெளியான பாலிவுட் படமான ‘ஸ்பெஷல் 26’ படத்தின் காப்பி எனவும் கூறப்படுகிறது.
ஸ்பெஷல் 26 படம் கடந்த 2013ஆம் ஆண்டு நீரஜ் பாண்டே இயக்கத்தில் அக்சய் குமார் நடிப்பில் வெளிவந்தது. இந்த படம் அப்போது மிகப்பெரிய ஹிட் அடித்தது. இந்த படம் 1987ஆம் வருடம் 26 பேர் கொண்ட ஒரு கும்பல் சி.பி.ஐ அதிகாரிகள் போல நடித்து மும்பையின் பிரபல நகைக்கடையில் கொள்ளை அடித்துவிடுவார்கள். இது தான் கதை.

-விளம்பரம்-

அதே திரைக்கதை இந்த ‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்திலும் வருகிறது. சி.பி.ஐ வேலைக்காக ஆள் எடுக்கும் சூர்யா மற்றும் அவரது சகாக்கள் வேலைக்கு எடுத்து அவர்களை அவர்களுக்கே தெரியாமல் நடிக்க வைத்து அந்த நகைக்கடையில் கொள்ளை அடிப்பார்கள்.

- Advertisement -

அதே போல் ‘ஸ்பெஷல் 26’ படத்தில் வரும் அனைத்து கேரக்டர்களும் அப்படியே தானா சேர்ந்த கூட்டம் படத்தின் கேரக்டர்களுக்கு பொருந்துகிறது. மேலும், திரைக்கதையில் இருக்கும் அதே சீன்கள் இதிலும் வருகிறது இதனால் ஸ்பெஷல் 26 படத்தின் காப்பி தான் இந்த படமும் எனக் கூறப்படுகிறது.
ஏற்கனவே, ஸ்பெஷல் 26 படத்திற்கான தமிழ் ரீமேக் உரிமையை டாப் ஸ்டார் பிரசாத்தின் அப்பா தியாக ராஜன் வாங்கி வைத்திருப்பதாக கூறப்படுகிறது. இதனால் தமிழ் சினிமாவில் அடுத்த பஞ்சாயத்துக்கு தயாராக உள்ளது என ரசிகர்கள் ஒரு பார்வையை வைத்துள்ளனர்.

Advertisement