உறுதியானது ‘அஜித் 59’ படம்…சற்று முன் வெளியான அதிகாரபூர்வ தகவல்..!

0
979
Ajith

தமிழ் சினிமாவில் தல என்று அழைக்கப்படும் அஜித் தற்போது இயக்குனர் சிவா இயக்கி வரும் ‘விஸ்வாசம் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கு பின்னர் ‘மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூரின் தயாரிப்பில் நடிக்க உள்ளார் என்று ஏற்கனவே சில தகவல்கள் வெளியாகி இருந்தது.

ஸ்ரீதேவி கணவர் போனி கபூர் தயாரிக்கவுள்ள அஜித் படத்தை இயக்குனர் வினோத் இயக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும், இந்த படத்தை தயாரிக்கும் நிறுவனத்திடம் ஒரு பாலிவுட் படத்தின் ரீமேக் உரிமையும் உள்ளதாம். அந்த படத்தின் கதையில் தான் அஜித் நடிக்கவிருக்கிறார் என்ற கூறப்பட்டு வருகிறது.

சமீபத்தில் கிடைத்த தகவலின்படி இந்தியில் கடந்த 2016 ஆம் ஆண்டு அமிதா பச்சன் நடிப்பில் வெளிவந்த “பிங்க்” படத்தை தான் ரீ-மேக் செய்யயுள்ளதாக தகவல் வெளியாகியிருந்தது. இந்நிலையில் இந்த படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.

அஜித்தின் 59வது படமான இந்த படத்தை இயக்குனர் வினோத் தயாரிக்க படத்திற்கு ஏ ஆர் ரஹ்மான் இசையமைக்க இருக்கிறார். மேலும், இந்த படத்தின் படப்பிடிப்புகள் வரும் ஜனவரி அல்லது பிப்ரவரி மாதம் துவங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.