மாஸ்டர் பட ஸ்பெஷல் நிகழ்ச்சியில் அர்ஜுன் தாஸ் செய்த ப்ரோபோசல் – ஆங்கரில் இருந்து ஆக்டராக மாறிய பிரபல Vj.

0
857
arjun
- Advertisement -

ஆங்கரிங்கில் தொடங்கி ஆக்டராக மாறியதே லவ் ப்ரோபோசலில் தான் என்று நடிகை பார்வதி கூறிய தகவல் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. புதுப்புது அர்த்தங்கள் சீரியல் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமாக இருப்பவர் நடிகை பார்வதி. முதலில் இவர் ஐடி கம்பெனியில் வேலை பார்த்துக் கொண்டிருந்தார். அதற்குப்பிறகு பார்ட் டைம் வேலையாக ஆங்கரிங் செய்ய தொடங்கினார். அதன் மூலமாக தான் இவருக்கு சன் டிவியில் வணக்கம் தமிழா என்ற நிகழ்ச்சியில் வாய்ப்பு கிடைத்தது. அதனைத் தொடர்ந்து இவர் பல நிகழ்ச்சிகளில் தொகுப்பாளினியாக இருந்து உள்ளார்.

-விளம்பரம்-

இதன் மூலம் தான் இவருக்கு சீரியலில் நடிக்க வாய்ப்பு வந்தது. தற்போது இவர் ஜீ தமிழில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் புதுப்புது அர்த்தங்கள் தொடரில் கதாநாயகியாக நடித்து வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் இவர் பேட்டி ஒன்று கொடுத்து இருந்தார். அதில் அவர் தன்னுடைய கேரியர் குறித்து பேசி இருந்தார். அதில் அவர் கூறியது, முதலில் நான் ஐடி கம்பெனியில் தான் வேலை செய்தேன். அதற்குப் பிறகு பார்ட் டைமாக சின்னச்சின்ன ஷோக்கள் மூலம் மீடியாக்குள் நுழைந்தேன். திடீரென்று ஒருநாள் ஜீ தமிழில் இருந்து அவார்டு ரெட் கார்பெட் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க சொன்னார்கள்.

இதையும் பாருங்க : பல ஆண்டுக்கு முன் சச்சினுடன் எடுத்த போட்டோவை எடுத்தது அவர் தான் – யார்னு பார்த்தா ஷாக்காகிடுவீங்க. வீடியோ இதோ.

- Advertisement -

அந்த நிகழ்ச்சியை தொடர்ந்து எனக்கு பல நிகழ்ச்சிகளில் வாய்ப்பு கிடைத்தது. அதற்கு பிறகு சன் டிவியில் ஆங்கரிங் செய்து கொண்டிருக்கும்போது சீரியலில் நடிக்க நிறைய வாய்ப்புகள் வந்தது. மீடியாவில் நான் இன்னும் நிறைய தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக பல வாய்ப்புகளை தவிர்த்தேன். புது புது அர்த்தங்கள் சீரியலில் நடிக்க வாய்ப்பு வந்தபோது கூட ஆரம்பத்தில் நான் தயங்கினேன். பிறகு ஓகே சொன்னேன். இதுதான் என்னுடைய முதல் சீரியல். இந்த சீரியலில் என்னுடைய கதாபாத்திரம் நிஜ வாழ்க்கையில் ஒத்து போவதால் எனக்கு பெருசா நடிக்கிற மாதிரி தெரியவில்லை. எனக்கு லவ் ப்ரோபோசல் நிறைய வந்திருக்கு.

Pudhu Pudhu Arthangal serial Wiki, Cast & Crew, Hero, Heroine, real names,  Zee Tamil

சன் டிவியில் மாஸ்டர் பட புரமோஷனுக்காக அர்ஜுன் தாஸ் வந்திருந்தாரு. அந்த நிகழ்ச்சியை நான் ஹோஸ்ட் பண்ணி இருந்தோம். கைதி படத்தில் இருந்து அவரை எனக்கு ரொம்ப பிடிக்கும். நேரில் அவரை மீட் பண்ணது எனக்கு ரொம்ப சந்தோசமாக இருந்தது. நாங்க சும்மா ஜாலியா அவர்கிட்ட கௌரியை ப்ரொபோஸ் பண்ண சொல்லி கேட்டோம். அவர் திடீரென்று எனக்கு ப்ரொபோஸ் பண்றேன்னு சொல்லிட்டாரு. அது பயங்கர சர்ப்ரைஸ் ஆக இருந்தது. எப்படியும் அதெல்லாம் டியில் போட மாட்டாங்க என்று நினைத்தேன். ஆனால், அது டெலிகாஸ்ட் ஆனது. அது சோஷியல் மீடியாவில் பயங்கர வைரலானது. சொல்லப்போனால் அந்த நிகழ்ச்சிக்கு பிறகு தான் மக்கள் மத்தியில் நான் மிகப் பிரபலமானேன். அந்த லவ் ப்ரோபோசல் தான் என் வாழ்க்கைக்கான விசிட்டிங் கார்டு என்று கூறி உள்ளார்.

-விளம்பரம்-
Advertisement