இப்போ ஜெயிலர் இனிமே தலைவர் 170 தான்- பட்டைய கிளப்பும் புதிய அப்டேட், உற்சாகத்தில் ரசிகர்கள்

0
775
- Advertisement -

தலைவர் 170 படத்திற்கான புதிய அப்டேட் தற்போது சோசியல் மீடியாவில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது. தமிழ் சினிமாவில் என்றென்றும் சூப்பர் ஸ்டாராக ஜொலித்து கொண்டு இருப்பவர் நடிகர் ரஜினிகாந்த். இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மாஸ் காட்டி இருக்கிறது. ஆனால், கடந்த சில ஆண்டுகளாக இவர் நடித்த படங்கள் எதுவும் பெரிதாக பேசப்படவில்லை. இதனால் இவர் ஜெயிலர் படத்தில் அதிக கவனம் செலுத்தி நடித்து இருந்தார்.

-விளம்பரம்-

அதற்கேற்ப நெல்சனின் முந்தைய படமான விஜயின் பீஸ்ட் படமும் படு தோல்வி அடைந்து இருந்தது. இதனால் நெல்சனும் கதைக்களத்தில் அதிக கவனம் செலுத்தி இருந்தார். மேலும், அதிக முயற்சிக்கு பின் ரஜினியின் “ஜெயிலர்” படம் வெளியாகி இருக்கிறது. இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து இருக்கிறது. இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்து இருக்கிறார். படத்தின் ஒவ்வொரும் பாடலும் பட்டைய கிளப்பி இருக்கிறது.

- Advertisement -

ஜெயிலர் படம்:

இந்த படத்தில் கன்னட நடிகர் சிவராஜ்குமார், ரம்யா கிருஷ்னன், யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லி, வசந்த் கிருஷ்னன், தெலுங்கு நடிகர் சுனில், ஹிந்தி நடிகர் ஷாக்கி ஷெரப், மோகன் லால், விநாயகம் போன்ற பல நட்சத்திரங்கள் நடித்து இருக்கிறார்கள். பல எதிர்பார்ப்புக்களுக்கு மத்தியில் கடந்த 10 ஆம் தேதி ஜெயிலர் திரைப்படம் வெளியாகி இருக்கிறது. இந்த படத்திற்கு யூடுயூப் விமர்சகர்களும், பிரபலங்கள், ரசிகர்கள் என எல்லோருமே பாசிட்டிவான கமெண்ட்களை கொடுத்து வருகிறார்கள். இந்த படத்தின் மூலம் நெல்சன் மீண்டும் கம்பேக் கொடுத்து இருக்கிறார்.

படம் குறித்த தகவல்:

உலகம் முழுவதும் ரசிகர்கள் மத்தியில் ஜெயிலர் படம் கொண்டாடப்பட்டு வருகிறது. மேலும், இந்த படம் வெளியான முதல் நாளிலேயே பெரிய அளவில் சாதனை படைத்திருக்கிறது. இந்த படம் வெளியான முதல் வாரத்தில் 375 கோடியும், இரண்டாவது முதல் 175 கோடியும் வசூலித்து இருக்கிறது. இதுவரை ஜெயிலர் படம் 525 கோடிக்கு மேல் வசூல் செய்து இருப்பதாக சன் பிக்சர்ஸ் நிறுவனமே அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது. அதோடு netflix ஓடிடி தளத்தில் ரஜினியின் ஜெயிலர் படத்தை வெளியிட நூறு கோடி கொடுத்து வாங்கி இருக்கிறார்கள். செப்டம்பர் மாதம் இந்த படம் netflix மற்றும் சன் நெஸ்ட் என இரண்டு தளத்திலும் வெளியாக இருக்கிறது.

-விளம்பரம்-

தலைவர் 170:

மேலும், ஜெயிலர் படத்தின் வெற்றி விழா நிகழ்ச்சி நடந்திருக்கிறது. இந்நிலையில் ரஜினி நடிக்கும் அடுத்த படம் குறித்த தகவல் தான் தற்போது வைரலாகி வருகிறது. அதாவது, ரஜினிகாந்தின் 170 வது படத்தை லைக்கா நிறுவனமே தயாரிக்கிறது. இந்த படத்தை ஜெய் பீம் பட இயக்குனர் டி ஜே ஞானவேல் இயக்க இருக்கிறார். இதற்கான பூஜை சென்னை லீலா பேலஸில் நடைபெற்று இருந்ததாக கூறப்படுகிறது. இந்த படத்திற்கு இன்னும் பெயர் வைக்கவில்லை. அதனால் தலைவர் 170 என்று அழைக்கப்படுகிறது. அது மட்டும் இல்லாமல் ஜெயிலர் படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணம் அனிருத் இசை.

படம் குறித்த அப்டேட்:

அதனால் தலைவர் 170 படத்திற்கும் அனிருத் இசையமைக்கிறார் என்று கூறப்படுகிறது. இந்த படத்தில் அனிருத் இசை அமைத்தால் ரஜினிகாந்த் உடன் அவர் நான்காவது முறை இணைந்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அது மட்டும் இல்லாமல் தலைவர் 170 படத்திற்குரிய போஸ்டர்கள் கூடிய விரைவில் வெளியாகும் என்று கூறப்படுகிறது. இந்த படத்தில் நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் இஸ்லாமிய போலிஸ் அதிகாரியாக நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இந்த படத்தினுடைய படப்பிடிப்பு செப்டம்பர் மூன்றாம் வாரத்தில் சென்னையில் தொடங்க இருப்பதாக கூறப்படுகிறது.

Advertisement