வளர்ந்து வரும் இயக்குனருக்கு வாய்ப்பு. இதுவரை விஜய் இப்படி ஒரு ரோலில் நடித்ததே இல்லை.

0
30457
thalapathy-65
- Advertisement -

தமிழ் சினிமாவில் அட்லி இயக்கத்தில், மெஹா ஸ்டார் தளபதி விஜய் அவர்களின் 63வது படமான “பிகில்” படம் தீபாவளியை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் திருவிழா போல கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. மேலும்,180 கோடி பட்ஜெட்டில் உருவான பிகில் படம் கிட்ட தட்ட 300 கோடி ரூபாய் வரைக்கும் வசூல் செய்து விட்டதாக தகவல்கள் வெளிவந்தன. இதனைத் தொடர்ந்து விஜய் அவர்களின் நடிப்பில் “தளபதி 64” படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அவர்கள் இயக்க உள்ளார். இவர் மாநகரம் படத்திலேயே விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றார். மேலும், தளபதி 64 படத்திற்கு இன்னும் பெயர் வைக்கவில்லை. ஆனால், படத்தின் படப்பிடிப்புகள் எல்லாம் தொடங்கி விட்டது. இதனைத்தொடர்ந்து தளபதி 64 படத்தில் சினிமா நட்சத்திர பட்டாளமே நடிக்க உள்ளார்கள்.

-விளம்பரம்-
Image result for thalapathy 65"

மேலும், டெல்லியில் தளபதி 64 படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக முடிவடைந்து. தற்போது சென்னையில் தொடங்க உள்ளது. மேலும், கத்தி படத்திற்கு பிறகு அனிருத் அவர்கள் இந்த படத்திற்கு இசை அமைக்கிறார் என்ற தகவல் தெரிந்தவுடன் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர். மேலும்,தளபதி 64 படம் 2020 ஆம் ஆண்டு கோடை விடுமுறைக்கு வெளியாகும் என்ற தகவல் அனைவருக்கும் தெரிந்த தான். மேலும்,சமூக வலைத்தளங்களில் அனைவரும் தளபதி 65 படத்தை இயக்குபவர் ஏ ஆர் முருகதாஸ், அட்லி,மோகன் ராஜா, அருண்ராஜ் காமராஜா என பல இயக்குனர்கள் பெயர்களை பரிந்துரை செய்து வருகிறார்கள்.

இதையும் பாருங்க : அஜித் குடும்பத்தை பார்த்திருப்பீங்க. ஷாலினி குடும்பத்தை பார்த்துள்ளீர்களா.

- Advertisement -

இந்நிலையில் அக்டோபர் மாதமே தளபதி 64 படம் சூட்டிங்கில் இயக்குனர் மகிழ்திருமேனி அவர்கள் தளபதி விஜய் அவர்களிடம் கதை கூறினாராம். அவர் கதையை கேட்டவுடன் இம்ப்ரஸ் ஆகி விட்டதாக செய்திகள் வெளிவந்தது. இந்நிலையில் அதுக்குள்ளேயே விஜய் நடிக்கும் “தளபதி 65 படத்தைப் பற்றி பல கருத்துக்கள் சமூக வலைத்தளங்களில் பரவலான பேச்சு வந்து கொண்டிருக்கின்றன. விஜய் நடிப்பில் உருவாக இருக்கும் படம் ‘தளபதி 65’. இந்த படத்தை இயக்குனர் மகிழ்திருமேனி இயக்க இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால், இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை. மேலும், இயக்குனர் மகிழ் திருமேனியின் விக்கிபீடியா பக்கத்தில் ‘தளபதி 65’ படம் இடம் பெற்றுள்ளது என குறிப்பிட தக்கது.

Image

மேலும், இந்த படத்தில் நடிகர் விஜய் ஒரு கல்லூரி பேராசிரியாக நடிக்க உள்ளார் என்றும் கூறப்படுகிறது. மேலும், இந்த படத்தில் நீட் தேர்வினால் உயிரிழந்த அனிதா குறித்தும் எடுக்கப்படும் என்றும் கூறப்படுகிறது. இயக்குனர் மகிழ்திருமேனி அவர்கள் தடம், மீகாமன், தடையறத்தாக்க, முன்தினம் பார்த்தேனே என பல படங்களை இயக்கியுள்ளார். இவர் மக்களிடையே மிகவும் பிரபலமானது தடம் படத்தில் தான். இதனைத்தொடர்ந்து மகிழ்திருமேனி இயக்குனர் மட்டுமில்லாமல் ஆர்யா நடிப்பில் உருவாகி வரும் ‘டெடி’ என்ற படத்திலும் இவர் நடித்து முடித்து உள்ளார். இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்த நிலையில் விரைவில் திரையரங்கு வெளிவரும் என்ற தகவலும் வந்துள்ளது.

-விளம்பரம்-

மேலும், தளபதி 65 படம் படப்பிடிப்புகள் 2020 ஆம் ஆண்டு ஜூன் மாதம் தொடங்கப்படும் என்றும் படத்தை பொங்கல் அன்று வெளியிட உள்ளார்கள் என்ற தகவலும் வந்துள்ளது. மேலும், தளபதி 65 படத்திற்கு கில்லி, குருவி ஆகிய படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த கோபிநாத் அவர்கள் ஒளிப்பதிவு செய்ய இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. தற்போது மகிழ்திருமேனி இயக்கத்தில் விஜய் நடிப்பில் தளபதி 65 படம் உருவாகுமா? என பல கேள்விகளை எழுப்பி வருகின்றன ரசிகர்கள்.

Advertisement