‘ ரொம்ப கஷ்டமாக இருக்கு’ பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் போது விஜய் பேசிய வீடியோ தற்போது வைரல்

0
1819
- Advertisement -

பணம் மதிப்பிழப்பு குறித்து நடிகர் விஜய் பேசி இருக்கும் பழைய வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் பயங்கர ட்ரெண்டிங் ஆகி வருகிறது. தற்போது நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கும் விஷயம் 2000 ரூபாய் நோட்டு மாற்றம் தான். நாடு முழுவதும் 2000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இருந்து நீக்கப்படும் என்று ரிசர்வ் வங்கி அறிவித்திருக்கிறது. காரணம், கருப்பு பணப்புழக்கம் அதிகமாக இருப்பதால் இதை கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுத்ததாக கூறப்படுகிறது.

-விளம்பரம்-

மேலும், இது தொடர்பாக ரிசர்வ் வங்கி அறிக்கை ஒன்றும் வெளியிட்டு இருக்கிறது. அதில், 2000 ரூபாய் நோட்டுகள் திரும்ப பெற ரிசர்வ் வங்கி முடிவு செய்திருக்கிறது. 2000 ரூபாய் நோட்டுகளை வங்கிகள் வாடிக்கையாளர்களுக்கு இனி விநியோகக் கூடாது. இந்த நடைமுறை உடனடியாக அமுலுக்கு வர வேண்டும். பொதுமக்கள் தங்களிடம் இருக்கும் 2000 ரூபாய் நோட்டுகளை இந்த மாதம் 23ஆம் தேதி வங்கிகளில் கொடுத்து கணக்குகளில் வரவு வைத்துக் கொள்ளலாம் அல்லது வேற ரூபாய் நோட்டுகளாக மாற்றிக் கொள்ளலாம்.

- Advertisement -

ரிசர்வ் வங்கி அறிக்கை:

அதோடு 2000 ரூபாய் நோட்டுகள் ஏடிஎம்களில் கிடைக்கவில்லை. கட்டுப்பாடு காரணமாக அவற்றை வங்கிகளில் விநியோகிப்பதை குறைத்துக் கொள்ள முயற்சி செய்வதே காரணம் என்று கூறப்படுகிறது. மக்கள் புழக்கத்தில் 2000 ரூபாய் நோட்டுகளின் மதிப்பில் 10. 80சதவீதம் தான் இருக்கிறது. மற்றது பெரும் பகுதி கருப்பு பணமாக பதுக்கி வைத்திருக்கிறார்கள். இவை வங்கி கணக்குக்கே வரவில்லை .அவற்றை வங்கிக்கு கொண்டு வருவதற்காக தான் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

மத்திய அரசு அறிக்கை:

ஏற்கனவே மத்திய அரசு 2016 ஆம் ஆண்டு பண மதிப்பிழப்பு நடவடிக்கையை அறிவித்தது. அதில் அவர்கள், 500, 1000 ரூபாய் நோட்டுகளை மாற்றம் செய்த நடவடிக்கை பலருக்குமே அதிர்ச்சை ஏற்படுத்தி இருந்தது. இதற்கு பிரபலங்கள் பலரும் ஆதரவாகவும் எதிராகவும் கருத்து தெரிவித்திருந்தார்கள். இப்படி ஒரு நிலையில் தற்போது 2000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இருந்து நீக்கப்படும் என அறிவித்திருப்பது குறித்து சமூக வலைத்தளங்களில் பிரபலங்கள் பேசிய வீடியோக்கள் சோசியல் மீடியாவில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது.

-விளம்பரம்-

விஜய் பேசிய வீடியோ:

இந்நிலையில் 2016 ஆம் ஆண்டு நடிகர் விஜய் அவர்கள் பணமதிப்பிழப்பு நடவடிக்கை குறித்து பேட்டியளித்து இருந்தார். அதில் அவர், இந்த பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் ஏற்படும் பாதிப்புகள் நோக்கத்தை விட அதிகமாகிவிடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். சில விஷயங்கள் தவித்திருக்கலாமோ என்ற எண்ணம் ஏற்படுகிறது. பொதுமக்கள் சிலர் பசிக்கு சாப்பிட முடியாமல், மாத்திரை வாங்க முடியாமல், திரும்ப வீடு வந்து சேர முடியாமல் அவதிப்பட்டு இருக்கின்றனர்.

பணமதிப்பிழப்பு குறித்து சொன்னது:

தினமும் கிடைக்கிற 500, 1000 ரூபாய் நோட்டுகளை வைத்துக்கொண்டு தொழில் பண்ணுகிற வியாபாரிகள், தியேட்டர்கள், வணிக வளாகங்கள் ஆகியோர் தேவையில்லாமல் பாதிக்கப்படுகிறார்கள் என்ற ஒரு சின்ன பீல் இருக்கிறது. நிறைய விஷயங்களை பார்த்தேன். மனசுக்கு மிகவும் கஷ்டமாக இருக்கிறது. ஒரு பேத்தியோட கல்யாணத்துக்கு பாட்டி தன்னுடைய நிலத்தை விற்று பணம் கொண்டு வருகிறார்கள். அந்த பணம் செல்லாது என்று கேள்விப்பட்டதும் அவர் தற்கொலை செய்து கொள்கிற அளவுக்கு சென்றிருக்கிறார்கள்.

வைரலாகும் வீடியோ:

ஒரு மருத்துவமனையில் புதிதாக பிறந்த குழந்தைக்கு ஒரு பிரச்சனை. அதற்கு சிகிச்சை அளிக்க முடியாமல் இறந்து விடுகிறது. இந்த மாதிரி சில விஷயங்களை தவித்திருக்கலாம் என்று எனக்கு தோன்றியது. நாட்டில் 20% பணக்காரர்கள் இருப்பார்கள். அதில் ஒரு குறிப்பிட்ட சதவிகிதர்கள் செய்த தவறினால் மீதி இருக்கிற 80 சதவீத மக்கள் பாதிக்கப்படுகிறார்கள். இப்படி ஒரு சட்டம் போடுகிறார்கள் என்றால் அதில் என்னென்ன பிரச்சனைகள் வரும் என்பதை முன்கூட்டியே தெரிந்து கொண்டு பண்ணி இருந்தால் நன்றாக இருந்திருக்குமோ என்பது தான் என்னுடைய தாழ்மையான கருத்து என்று கூறியிருந்தார். இப்படி இவர் பேசியிருக்கும் பழைய வீடியோ தான் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

Advertisement