சூப்பர் சிங்கர் 9வது சீசனின் முதல் 3 Finalist யார் யார் தெரியுமா ? இதோ விவரம்.

0
2966
- Advertisement -

சூப்பர் சிங்கர் 9வது சீசனின் முதல் 3 Finalist குறித்த தகவல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளுக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது. அதிலும், விஜய் டிவியில் எத்தனையோ நிகழ்ச்சிகள் வந்தாலும் ஆணிவேராக மக்கள் மத்தியில் பிரபலமாக இருக்கும் நிகழ்ச்சிகளில் ஒன்று சூப்பர் சிங்கர். இந்த நிகழ்ச்சி பல ஆண்டு காலமாக மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்று வருகிறது.

-விளம்பரம்-

மேலும், இந்த நிகழ்ச்சி ஜூனியர், சீனியர் என்று இரு பிரிவில் ஒளிபரப்பாகி வருகிறது. அதோடு இந்த சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் ஏகப்பட்ட பேருக்கு வெள்ளித்திரையில் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. சொல்லப்போனால், இந்த நிகழ்ச்சி தான் வெள்ளித்திரைக்கு பாடகர்களை அறிமுகப்படுத்தும் பாலம் என்று சொல்லலாம். அதுமட்டுமில்லாமல் இந்த நிகழ்ச்சிக்கு தமிழகத்தில் மட்டும் இல்லாமல் உலகம் முழுவதும் ரசிகர்கள் இருக்கிறார்கள்.

- Advertisement -

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி:

சூப்பர் சிங்கர் சீனியர்ஸ் நிகழ்ச்சியை விட மழைலை குரல்கள் ஒலிக்கும் சூப்பர் சிங்கர் ஜூனியர்ஸ் நிகழ்ச்சிக்கு தான் ரசிகர்கள் மத்தியில் ஏகப்பட்ட வரவேற்பு கிடைத்து இருக்கிறது. கடந்த ஆண்டு சூப்பர் சிங்கர் ஜூனியர்ஸ் 8 நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டது. இந்த நிகழ்ச்சியை மா கா பா ஆனந்த் மற்றும் பிரியங்கா தேஷ்பாண்டே தான் தொகுத்து வழங்கி வருகிறார்கள். இந்த நிகழ்ச்சிக்கு நடுவராக ஸ்வேதா மோகன், பென்னி தயால், அனுராதா ஸ்ரீராம், சரண் மற்றும் உன்னிகிருஷ்ணன் ஆகியோர் பங்கேற்று வருகின்றனர்.

சூப்பர் சிங்கர் சீனியர் சீசன் 9 நிகழ்ச்சி:

தற்போது புத்தம் புதிதாக சூப்பர் சிங்கர் சீனியர் சீசன் 9 நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சி தொடக்கத்தில் இருந்து விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. மேலும், இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு, கேரளா, தெலுங்கானா, ஆந்திரா, கர்நாடகா மற்றும் சர்வதேச பகுதியிலிருந்தும் பல போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சிக்கு 20 திறமையான பாடல்களை தேர்வு செய்தார்கள். இந்த நிகழ்ச்சி ஆரம்பித்த முதல் நாளில் இருந்து தற்போது வரை ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.

-விளம்பரம்-

நிகழ்ச்சி குறித்த தகவல்:

இந்த நிகழ்ச்சிக்கு பிரபலமான இசையமைப்பாளர்கள், நடிகர்கள் என பலரும் சிறப்பு விருந்தினராக வருவார்கள். கடந்த வாரம் இந்த நிகழ்ச்சிக்கு இசையமைப்பாளர் வித்யாசாகர் வந்திருந்தார். நிகழ்ச்சியில் இசையமைப்பாளரிடம் பாடல் வரிகளை கூறியவுடன் அவர் சில நிமிடங்களிலேயே இசைத்து ஒரு பாடலை உருவாக்கி இருந்தார். அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி இருந்தது. தற்போது இந்த நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை நெருங்கி இருக்கிறது.

பைனலிஸ்ட் குறித்த தகவல்:

இந்த வாரம் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பிரபல இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி வந்திருந்தார். விஜய் இந்த நிலையில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் ஃபைனலிஸ்ட் குறித்த தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது. அதாவது, தற்போது நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை நெருங்கி இருப்பதால் முதல் 3 பைனல் லிஸ்ட் தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார்கள். அபிஜித், பூஜா, அருணா ஆகிய மூன்று பேருமே நேரடியாக இறுதி சுற்றுக்கு தேர்வாகி இருக்கிறார்கள்.

Advertisement