தன்னுடைய சொகுசு காரில் சென்னையில் விஜய் – தமிழ் சினிமாவில் ரெண்டு பேர் கிட்ட மட்டும் தான் இந்த கார் இருக்கு.

0
17699
vijay
- Advertisement -

தமிழ் சினிமாவின் வசூல் சக்கரவர்த்தி விஜய் பல கோடிகளில் சம்பளம் வாங்கக் கூடியவர். தற்போது வரை 61 படங்கள் நடித்துள்ள அவருக்கு பல நூறு கோடிகளில் சொத்து இருக்கலாம் என யூகிக்கமுடிகிறது. பிகில் படத்திற்கு 50 கோடி சம்பளம் வாங்கிய விஜய், இறுதியாக வெளியான மாஸ்டர் படத்திற்கு 80 கோடி ரூபாய் சம்பளமாக பெற்றார். தற்போது நடித்து வரும் ‘பீஸ்ட்’ படத்திற்கு இவரது சம்பளம் 100 கோடி இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இப்படி ஒரு நிலையில் நடிகர் விஜய் சென்னையில் தனது ரோல்ஸ் ராய் காரில் வந்த லேட்டஸ்ட் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

-விளம்பரம்-

தமிழ் சினிமாவில் இருக்கும் பல்வேறு நடிகர் நடிகைகள் சொகுசு கார்களை தான் பயன்படுத்துகின்றனர். பெரும்பாலான பிரபலங்கள் Audi, Bmw என்று சொகுசு கார்களை பயன்படுத்துகின்றனர். ஆனால், தமிழ் சினிமாவில் ரோல்ஸ் ராய்ஸ் கார் இரண்டே நபர்களிடம் தான் இருக்கிறது. அதில் விஜய்யும் ஒருவர். அஜித் பைக் பிரியர் என்றால் விஜய் ஒரு கார் பிரியர், இவரிடத்தில் ஏகப்பட்ட கார் கலெக்ஷன் இருக்கிறது. அந்த வகையில் விஜயிடம் இருக்கும் விலை அதிகமான காரில் ஒன்று ரோல்ஸ் ராய்ஸ் கார்.

- Advertisement -

தமிழ் சினிமாவில் விஜய் மற்றும் இயக்குனர் ஷங்கரிடம் மட்டும் தான் இந்த கார் இருக்கிறது. அதே போல இந்தியாவில் சஞ்சய் தத், அமிதாப் பச்சன் போன்ற ஒரு சிலர் பிரபலங்களிடம் மட்டுமே இந்த ரோல்ஸ் ராய் கார் இருக்கிறது. இந்த காரின் ஆரம்ப விலை 5 கோடியில் இருந்து துவங்கினாலும் பணம் இருப்பவர்கள் எல்லாராலும் இந்த காரை வாங்க முடியாது, இந்த காரை வாங்குபவர்களின் செல்வாக்கு, புகழ் போன்ற அனைத்தையும் ஆராய்ந்து தான் இந்த காரை விற்க சம்மதிப்பார்கள் என்று கூட ஒரு செய்தி பல ஆண்டுகளாக இருக்கிறது.

ஆனால், இந்த செய்தி எந்த அளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை. அவ்வளவு ஏன் , பிரபல பாலிவுட் நடிகையான மல்லிகா ஷெராவத்திடம் பல கார்கள் இருந்தாலும் ரோல்ஸ் ராய் காரை வாங்க வேண்டும் என்று ஆசைப்பட்டுள்ளார். அவர் ரோல்ஸ் ராய் காரை வாங்க விருப்பம் தெரிவித்த போது ரோல்ஸ் ராய் நிறுவனம் அவரது விருப்பத்தை நிராகரித்து விட்டதாக கூட செய்திகள் வெளியானது.

-விளம்பரம்-
Advertisement