மிஸ்டர் கிளீன், ரோல்மாடல் – அண்ணாமலையை சேகுவாராவுடன் ஒப்பிட்டு பேசிய தம்பி ராமையா.

0
353
- Advertisement -

சமீபத்தில் தனியார் ஊடகம் நடத்திய விருதுவழங்கும் விழாவில் நடிகர் தம்பி ராமையாவிற்கு இயக்குனர் விஜய் ஆண்டனி விருதுகளை வழங்கினார். பின்னர் பேசிய தம்பி ராமையா தமிழ்நட்டு பாஜக தலைவரான அண்ணாமலை சேகுவாராவை போல ஒரு போராளி என்றும், இன்றய இளைஞர்களுக்கு எடுத்துக்காட்டு போன்றவர் என்றும் அந்த நிகழ்ச்சியில் தெரிவித்துள்ளார்.மேலும் தனக்கு உலக அரசியல், தேசிய அரசியல், மணிலா அரசியல், மாவட்ட அரசியல் போன்றவை தெரிந்தாலும் நான் அரசியலில் சேர மாட்டேன் என்றும் கூறியிருந்தார்.

-விளம்பரம்-

மேடை நட்சத்திரம் சீமான் :

பின்னர் அவரிடம் தலைவர்களின் புகைப்படங்களை திரையில் காட்டி அவர்களை பற்றி கருத்து கேட்டகப்பட்டது. முதலில் நாம் தமிழர் கட்சியின் தலைவரான சீமானின் படம் காட்டப்பட்டது. அதற்கு மேடை பேச்சு அது ஒரு கலை. மேடை பேச்சாளர்கள் இன்றய தினம் உருவாக்கிக் கொண்டிருப்பதற்கும், உருவாவதற்கும் அடுத்த தலைமுறையின் நம்பிக்கை நட்சத்திரம் நாம் தமிழர் கட்சி சீமான். இதை அனைவரும் ஒத்துக்கொள்வார்கள் எனக் கூறினார்.

- Advertisement -

டாக்டர் அன்புமணி ராமதாஸ் :

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் புகைப்படத்திற்கு `ஒழுக்கம், அரசியல் வதியும் அழகாக இருக்கலாம், அரசியல் வாதியும் டாக்டருக்கு படித்து முடித்த பிறகு டாக்டர் வேலைக்குத்தான் செல்ல வேண்டும் என்று கட்டாயமில்லை என்று சொன்னவரும், தகுதிகளை தாறுமாறாக வளர்த்துக் கொண்டு தமிழ் நாட்டிற்கு சேவை செய்யவேண்டும் என்று ஒழுக்க சித்தனையோடு உலாவரும் அரபியுதமான இளம் தலைவர் என்று கூறினார்.

இளைய சூரியன் உதயநிதி ஸ்டாலின் :

பின்னர் காட்டப்பட்ட அமைச்சரும், திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் பற்றி தமிபி ராமையா கூறியதாவது `இளையசூரியன், ஒரு இயக்கத்தை உருவாக்குவது என்பது வீட்டை கட்டுவது போல சில கஷ்டங்களை அனுபவித்து கட்டிவிடலாம், ஆனால் அந்த வீட்டை பாதுகாக்கும் மிகப்பெரிய கடுமையான சுமை அந்த இளைஞரின் தோளில் வைக்கப்பட்டுள்ளது. சாதாரண சுமை அல்ல தன்னுடய தாத்தாவின் பாரம்பரியம், தன்னுடைய தந்தையாரின் உழைப்பு, அந்த இயக்கத்தின் எதிர்காலம் என இவ்வளவு சுமையையும் தோளில் தூக்கிக்கொண்டு சிரித்த முகத்துடன் வரக்கூடிய அற்புதமான இளைஞர் என்றார்.

-விளம்பரம்-

அண்ணாமலை சேகுவாரா? :

பின்னர் இறுதியாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பற்றி கூறியதாவது `ஒரு மனிதன் ஒரு விஷயத்திற்காக போராடும் போது அந்த விஷயம் ஒரு இடத்தில் முற்றுபெற்றுவிட்டது என்று நிற்பவன் போராளி அல்ல. எதை நினைத்து நகர்ந்தோமோ அந்த விஷயம் கிடைத்து விட்டதா என்று அடுத்த கட்டத்திற்கு செல்பவரே சேகுவாரா. அதே போன்று ஐபிஎஸ் என்பது சாதரண விஷயம் கிடையாது. ஆனால் அதனை படித்து வேறொரு தேசத்தில் தன்னுடைய 9 வருட காலம் மிஸ்டர் கிளீனாக இருந்து மாநில தலைவர் பொறுப்பை சில மாதங்களிலேயே பெறுவது என்பது சாதாரண விஷயம் கிடையாது.

எவ்வளவு போட்டிகளை தாண்டியிருந்தால் அந்த இடத்திற்கு அவர் வந்திருக்க முடியும். அதோடு நிறைய இளைனர்களுக்கு இன்றய ரோல் மாடல். அதிக சிந்தனைகளை கற்றுக்கொண்டு பேட்டிகளை அணுகும் போது தகவல்கள் உள்ளங்கையில் வைத்துக்கொண்டு பதர்ட்டம் இல்லாமல் கேள்விக்கு பதில் சொல்கிறார். அவருக்கும் மற்றவர்களை போல நானும் ஒரு ரசிகன் என்று அந்த நிகழ்ச்சியில் தம்பி ராமையா கூறியிருந்தார்.

Advertisement