தீபக்கை விட பல வயசு சின்னவங்க, இருந்தாலும் இவங்க அவரோட அம்மாவா நடிக்க காரணம் இருக்கு.

0
8947
deepak
- Advertisement -

சின்னத்திரையில் சீரியல்களில் யங்க் அண்ட் பியூட்டி அம்மாவாக பல நடிகர்கள் வலம் வருகிறார்கள். அந்த பட்டியலில் நடிகை மீரா கிருஷ்ணனும் ஒருவர் ஆவார். இவர் சமீபத்தில் விஜய் டிவியில் ஒளிபரப்பான தமிழும் சரஸ்வதியும் சீரியலில் கோதை என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். தற்போது இவருக்கு 36 வயது தான் இருக்கிறது. இருந்தாலும் இவர் தனது வயது உள்ள நடிகர்களுக்கு அம்மாவாக நடிக்கிறார். சொல்லப் போனால் தீபக் இவரை விட பல வயது மூத்தவர். ஆனால், அவருக்கே மீரா, அம்மாவாக நடித்து வருகிறார். மீரா அவர்கள் மூன்று வயதில் தன்னுடைய சினிமா பயணத்தை தொடங்கினார். இவர் கேரளாவில் பிறந்து வளர்ந்தவர்.

-விளம்பரம்-

இவர் முறையாக கிளாசிக்கல் நடனம் கற்றவர். இவர் கிளாசிக்கல் நடனம் ஆடி வெற்றி பெற்றதன் மூலம் பிரபலமானார். அதை தொடர்ந்து இவர் மார்கம் படம் மூலமாக கேரள சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானார். அந்த படத்திற்கு பிறகு மீராவை தேடி ஏகப்பட்ட பட வாய்ப்புகள் வந்தன. ஆனால், மீரா அவர்கள் படிப்பில் கவனம் செலுத்தியதால் பல பட வாய்ப்புகள் கையை விட்டுப்போனது. பிறகு மீரா படிப்பை முடித்த உடன் தன்னுடைய கெரியராக சினிமாவை தேர்ந்தெடுத்தார்.

இதையும் பாருங்க : இல்ல அதுக்கு காரணம் தம்மு’ – ஒரு மனுஷன் இவ்ளோ ஓப்பனாவா பேசறது – வைரல் வீடியோ இதோ.

- Advertisement -

மேலும், இவர் பல படங்கள், சீரியல்களில் நடித்து வந்தார். பின் தனது திருமணத்திற்கு பிறகு சென்னையில் செட்டில் ஆனார். திருமணத்திற்கு பிறகு சிலகாலம் மீரா சினிமாவிற்கு முழுக்கு போட்டுவிட்டு குடும்பத்தில் கவனம் செலுத்தி வந்தார். இவருக்கு அழகான இரண்டு மகன்கள் உள்ளார்கள். இவரின் கணவரும் சினிமா நடன ஆசிரியர். இதனால் மீண்டும் மீராவுக்கு சின்னத்திரையில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. கலைஞர் டிவியில் ஒளிபரப்பான பொக்கிஷம் சீரியல் மூலம் தான் தமிழ் சினிமா துறைக்குள் நுழைந்தார். அதற்குப் பிறகு நாயகி, வந்தாள் ஸ்ரீதேவி, சித்தி-2 சீரியல் என அனைத்திலும் அம்மா கதாபாத்திரத்தில் தான் நடித்து வருகிறார்.

தற்போது இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் தமிழும் சரஸ்வதியும் சீரியலில் தீபக்குக்கு அம்மா கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இவருடைய கதாபாத்திரம் அனைத்தும் அம்மா சென்டிமென்ட் ஆக இருப்பதால் மக்கள் மத்தியில் இவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அம்மா ரோலை செண்டிமெண்ட்டாக நினைத்து மீரா கிருஷ்ணன் நேர்த்தியான நடிப்பை வெளிப்படுத்துவது தான் அவரின் சக்சஸ். அதனால் வெள்ளித்திரையில் ஹீரோக்களின் அம்மாவாக நடிக்க வேண்டும் என்றாலும் இவர் ஓகே தான் சொல்வார் என்று கூறப்படுகிறது.

-விளம்பரம்-
Advertisement