தங்க மீன்கள் குட்டி பொண்ணு சாதனாவா இது ! இப்படி மாறிட்டாங்க ! புகைப்படம் உள்ளே

0
7435

கடந்த 2013ஆம் ஆண்டு இயக்குனர் ராம் இயக்கி நடித்து வெளிவந்த படம் தங்கமீன்கள். இந்த படத்தில் ராமின் குழந்தையாக நடித்திருப்பவர்தான் சாதனா லட்சுமி. இவர் தற்போது என்ன செய்கிறார் தெரியுமா?

sadhana

தங்க மீன்கள் படத்தில் செல்லம்மா என்ற கேரக்டரில் நடித்திருப்பார் சாதனா. இதனால் செட்டில் கூட இவரை செல்லம்மா என்று தான் அழைப்பாரம் இயக்குனர் ராம். சாதனா தற்போது துபாயில் உள்ள ஒரு இந்தியர்களுக்கான பள்ளியில் படித்து வருகிறார்.

அவரது குடும்பமும் அங்கு தான் உள்ளது. இயல்பிலேயே சாதனா ஒரு டான்சர் மற்றும் சிங்கர். அற்புதமாக படக்கூடிய திறமை படைத்தவர். இயல்பிலேயே டான்சர் என்பதால், தங்கமீன்கள் படத்தில் டான்ஸ் ஆடத் தெரியாதது போல நடிக்க மிகவும் கஷ்டப்பட்டாரம்.

sadhana

இந்த படத்தில் நடித்தற்காக, சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான தேசிய விருதை பெற்றுள்ளார். தற்போது மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டியுடன் பேரன்பு என்கிற படத்தில் நடிக்கிறார். படத்தில் மம்மூட்டிக்கு ஜோடியாக நடிகை அஞ்சலி நடித்து வருகிறார். இந்த படத்தையும் இயக்குனர் ராம் தான் இயக்குகிறார்.

sadhana-actress

இந்த படத்தில் சாதனவிற்கு மிகவும் முக்கியமான ரோல் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த படம் வரும் மே மாதம் திரைக்கு வரவுள்ளதாக தெரிகிறது.